தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம்
KG26 தாமான் கோனாட் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தாமான் கோனாட் நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Taman Connaught MRT station Stesen Taman Connaught MRT சீனம்: 康乐花园 | |||||||||||||||
| அமைவிடம் | தாமான் கோனாட், செராஸ் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 33°12′23″N 101°34′49″E / 33.20639°N 101.58028°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | ||||||||||||||||
| நடைமேடை | 2 பக்க நடைமேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 தடங்கள் | |||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | நிலத்தடி நிலையம் | |||||||||||||||
| நடைமேடை அளவுகள் | 3 | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | KG26 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | KG26 17 சூலை 2017 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Taman Connaught MRT Station; மலாய்: Stesen MRT Taman Connaught) என்பது மலேசியா, கோலாலம்பூர், செராஸ், தாமான் கோனாட் (Taman Connaught) பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையம் தற்போது
மலேசிய கூட்டரசு சாலை 1 - செராஸ் சாலையின் செராஸ் சென்ட்ரல் பேரங்காடிக்கு (Cheras Sentral Shopping Mall) அருகில் உள்ளது. அத்துடன்
செராஸ்–காஜாங் விரைவுச்சாலை வடக்கு முனையின் கோலாலம்பூர்-சிலாங்கூர் எல்லைக்கு அருகிலும் உள்ளது.
தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம்; சுங்கை பீசி-உலு கிள்ளான் உயர்மட்ட விரைவுச்சாலையில் (Sungai Besi–Ulu Klang Elevated Expressway) (SUKE) செராஸ்-காஜாங் சந்திப்புக்கு அருகில் உயர்மட்ட விரைவுச்சாலையில் இருந்து மிகவும் உயரத்தில் உள்ளது.
தாமான் கோனாட் (Taman Connaught) என்பதில் தாமான் என்பது ஒரு குடியிருப்பு பகுதியைக் குறிப்பதாகும்; மலாய் மொழியில் பூங்கா என பொருள்படும். மலேசியாவில் புறநகர்க் குடியிருப்புப் பகுதிகளை 'தாமான்' என குறிப்பிடுகிறார்கள்.
காஜாங் வழித்தடம்
[தொகு]9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.
5 கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[1]
பொது
[தொகு]9 சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் - காஜாங் தொடருந்து நிலையம் வரையில் கட்டப்பட்ட 19 நிலையங்களில் தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையமும் ஒன்றாகும்; 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[2]
தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம் மிகவும் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இந்த நிலையம் பெரும்பாலான செராஸ் புறநகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.[3] கட்டுமானத்தின் போது இந்த நிலையம் தற்காலிகமாக பீனிக்ஸ் பிளாசா நிலையம் (Phoenix Plaza Station) என்று பெயரிடப்பட்டது.
நிலைய அமைப்பு
[தொகு]இந்த நிலையம், காஜாங் வழிதடத்தில் உள்ள பெரும்பாலான உயர்மட்ட நிலையங்களைப் போலவே (முனையம் மற்றும் நிலத்தடி நிலையங்கள் தவிர) அமைப்பையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மேல் தளத்தில் நடைமேடை மட்டம் உள்ளது.
இந்த நிலையத்தில் இரட்டை வழிதடத்துடன் இரண்டு பாதுகாப்பான பக்க நடைமேடைகள்; மற்றும் தரை மட்டத்திற்கும் நடைமேடை மட்டத்திற்கும் இடையில் பயணச்சீட்டு வழங்கும் வசதியுடன் கூடிய ஒற்றை இணைப்புவழி வசதிகள் உள்ளன. நிலையத்தின் அனைத்து தளநிலைகளும் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
| L2 | நடைமேடை | பக்க நடைமேடை |
| நடைமேடை 1 9 காஜாங் (→) காஜாங் தொடருந்து KG35 (→) | ||
| நடைமேடை 2 9 காஜாங் (→) குவாசா டாமன்சாரா KG04 (←) | ||
| பக்க நடைமேடை | ||
| L1 | இணைப்புவழி | கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், பாதசாரி மேம்பாலம் (→) நுழைவாயில் C வழியாக லெய்சர் மால் மற்றும் எக்கோ செராஸ் மால் |
| G | தரை மட்டம் | நுழைவாயில் A (→) நுழைவாயில் B (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) செராஸ் சாலை |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]| காஜாங் வழித்தட நிலையம் | |||
| நுழைவாயில் | இடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A | செராஸ் சாலை மேற்குப் பகுதி | பேருந்து நிறுத்தம், செராஸ் சென்ட்ரல் பேரங்காடி (தரை தளம்), சில்கா செராஸ் விடுதி | |
| B | செராஸ் சாலை கிழக்குப் பகுதி | பேருந்து நிறுத்தம் | |
| C | 3/114A சாலை வடக்குப் பகுதி | பேருந்து நிறுத்தம், செரியா அயிட்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகள் | |
| செராஸ் சென்ட்ரல் இணைப்புவழி | செராஸ் சென்ட்ரல் பேரங்காடி (3-ஆவது தளம்) | செராஸ் சென்ட்ரல் பேரங்காடி | |
பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | பயணவழி |
|---|---|---|---|
| KG26 தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம் (நுழைவாயில் A) |
SP15 KB04 KT2 பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம் LRT/KTM/ERL (←) KG26 தாமான் கோனாட் (நுழைவாயில் B) | கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை; தேசா துன் ரசாக்; டெய்ன்டன் வியூ குடியிருப்பு | |
| KG26 தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம் (நுழைவாயில் B) |
செராஸ் அவானா பூங்கா | செராஸ்–காஜாங் விரைவுச்சாலை; மேடான் மசுரியா சாலை; கியூபாக்ஸ் ஜேபி சாலை; அவானா அவென்யூ; | |
| KG26 தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம் (நுழைவாயில் C) |
ஆலாம் டாமாய் | 1/144A சாலை; 2/154 சாலை; தேசா செராஸ் சாலை; பெர்சியாரான் ஆலாம் டாமாய்; ஆலாம் டாமாய் சாலை |
பிற பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | இயக்குநர் | தொடக்கம் | இலக்கு | பயணவழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
| ரேபிட் கேஎல் | காஜாங் நிறுத்தம் | லெபோ புடு மையம் | ரெக்கோ சென்ட்ரல்; காஜாங் நகரம் KG34 காஜாங் எம்ஆர்டி அரங்கம் |
செராஸ் சென்ட்ரல் பேருந்து நிறுத்தம். |
காட்சியகம்
[தொகு]தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம் (2023)
மேலும் காண்க
[தொகு]- செராஸ்
- காக்ரேன் எம்ஆர்டி நிலையம்
- தாமான் முத்தியாரா எம்ஆர்டி நிலையம்
- காஜாங் தொடருந்து நிலையம்
- மலேசிய கூட்டரசு சாலை 1
- கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy.
- ↑ "The Launch Of MRT Phase 2 Today Gets M’sians All Excited, How Will Commuters Benefit" (in en-gb). Malaysian Digest இம் மூலத்தில் இருந்து 2017-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729220121/http://www.malaysiandigest.com/frontpage/282-main-tile/686803-the-launch-of-mrt-phase-2-today-gets-m-sians-all-excited-how-will-commuters-benefit.html.
- ↑ "Najib launches Phase 2 of Sungai Buloh-Kajang MRT line" (in en). Thestar.com.my. 2017-07-17. https://www.thestar.com.my/news/nation/2017/07/17/najib-launches-phase-2-of-sungai-buloh-kajang-mrt-line/.
- ↑ "Taman Connaught MRT Feeder Bus T410 | mrt.com.my". mrt.com.my. Retrieved 2021-01-13.
- ↑ "Taman Connaught MRT Feeder Bus T411 | mrt.com.my". mrt.com.my. Retrieved 2021-01-13.
- ↑ "Taman Connaught MRT Feeder Bus T412 | mrt.com.my". mrt.com.my. Retrieved 2021-01-13.
- ↑ "Line Route 450 - rapidKL Bus - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 2020-12-31.
