தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம்
PY36 தாமான் இக்குயின் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | மலாய்: Stesen MRT Taman Equine சீனம்: 怡观园站 | |||||||||||||||
| அமைவிடம் | பண்டார் புத்ரா பெர்மாய், 43300 செரி கெம்பாங்கான் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 2°59′21″N 101°40′21″E / 2.989196°N 101.672424°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | 12 புத்ராஜெயா | |||||||||||||||
| நடைமேடை | 1 தீவு நடைமேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
| இணைப்புக்கள் | ||||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலை | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலை | செயல்பாட்டில் | |||||||||||||||
| நிலையக் குறியீடு | PY36 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | புத்ராஜெயா வழித்தடம் 16.03.2023 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Taman Equine MRT Station; மலாய்: Stesen MRT Taman Equine) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், செரி கெம்பாங்கான் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். தாமான் இக்குயின்; தாமான் பிங்கிரான் புத்ரா நகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, சனவரி 2023-இல் திறக்கப்பட்டது.
PY34 யூபிஎம் எம்ஆர்டி நிலையத்திற்கும் PY37 புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையம் PY36 எனும் நிலையக் குறியீட்டைக் கொண்டுள்ளது.[2] இந்த நிலையத்திற்கு முன்னதாக உள்ள நிலையமான PY35 தாமான் யுனிவர்சிட்டி எம்ஆர்டி நிலையம் (Taman Universiti MRT station) கட்டுமானத் திட்டத்தில் உள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையமும் அடுக்கு மாடி அமைப்பைக் கொண்டுள்ளது.
வரலாறு
[தொகு]"இக்குயின் பூங்கா" எனும் நிலையத்தின் பெயர் எம்ஆர்டி நிறுவனத்தால் யூடியூப் வலையொளியில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், "எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா (SSP) வழித்தட சீரமைப்புக் காணொளி" என்ற தலைப்பில் செப்டம்பர் 15, 2016 அன்று முதன்முதலில் குறிப்பிடப்பட்டது.[3]
அந்தக் காணொளியில், இக்குயின் பூங்கா எம்ஆர்டி நிலையத்திற்கான தற்காலிக நிலையக் குறியீடு S31 என அறிவிக்கப்பட்டது.[2] அதன் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நிலையத்தின் பெயர் தாமான் இக்குயின் (Taman Equine) என மாற்றம் செய்யப்பட்டது.[4][5]
கட்டுமானங்கள்
[தொகு]தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமானம் S208 (Package S208) உடன்படிக்கையின் கீழ் செயல் படுத்தப்பட்டது. S208 உடன்படிக்கை என்பது அப்போதைய கட்டுமானத்தில் இருந்த PY37 புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையத்தின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகளையும் உள்ளடக்கியது. நிலையங்களின் கட்டமைப்பு பணிகளுக்கான தொகை மொத்தம் RM 219.7 மில்லியன் அக்குமிடா நிறுவனத்திடம் (S.N. Akmida Holdings Sdn Bhd) வழங்கப்பட்டது.[4]
செயல்பாடு
[தொகு]S208 உடன்படிக்கை, நிலையங்களின் கட்டமைப்புகள் மற்றும் அவை தொடர்பான வேலைகளை உள்ளடக்கியது. அவற்றுள் செரி கெம்பாங்கான் நகர்ப்புறத்தில் உள்ள PY37 புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையத்தின் கட்டுமான வேலைகளும் அடங்கும்.[6][4][7]
PY36 தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 2023 மார்ச் 16-ஆம் திகதி திறக்கப்பட்டது. KC03 PY14 பத்து கன்டோன்மன் கொமுட்டர் நிலையம் தொடங்கி PY41 புத்ராஜெயா சென்ட்ரல் வரையிலான பிற புத்ராஜெயா வழித்தட நிலையங்களுடன் இணைந்து இந்த நிலையமும் செயல்படத் தொடங்கியது.
அமைவு
[தொகு]தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம்; சிலாங்கூர் மாவட்டங்களில் ஒன்றான பெட்டாலிங் மாவட்டத்தில் செரி கெம்பாங்கான் நகரத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நிர்வாகப் பகுதியில் உள்ள பண்டார் புத்ரா பெர்மாய் நகரத்தில் (Bandar Putra Bermai) அமைந்துள்ளது.
தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளான தாமான் இக்குயின் (Taman Equine), தாமான் பிங்கிரான் (Taman Pinggiran Putra), தாமான் டத்தோ டெமாங் (Taman Dato Demang), தாமான் லெசுதாரி பெர்மாய் (Taman Lestari Permai), தாமான் புத்ரா பெர்மாய் (Taman Putra Permai), தாமான் லெசுதாரி பெர்தானா (Taman Lestari Perdana), தாமான் தேசாமினியம் (Taman Desaminium) ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நிலையம் போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது.[8][9]
கட்டமைப்பு
[தொகு]ரேபிட் கேஎல் வெளியிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து வரைபடத்தின் அடிப்படையில், PY36 தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம் தெரு மட்டத்தில், வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.[9]
மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் இந்த PY36 தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம் கொண்டுள்ளது.[5]; அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுப் பாதைகள்; நிலையத்தைச் சுற்றியுள்ள தரை மேற்பரப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொடு தொகுதிகள்; அவர்களுக்கு ஏற்ற வகையில் கழிவறைகள்; சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலை மின்தூக்கி பொத்தான்கள்; மின்தூக்கி பொத்தான்களில் பிரெய்லி எழுத்துப் பதிவுகள்; மற்றும் சக்கர நாற்காலி பயனர்களுக்கான தாழ்நிலைச் சேவை மையங்கள்[9] போன்றவை அடங்கும்.
பயனர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக; பொது கழிவறை வசதிகள், ஆண்கள் பெண்களுக்கான வழிபாட்டு அறைகள் (Surau), வாடிக்கையாளர் சேவை மையங்கள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. நிலையத்தின் நுழைவாயில் மட்டத்தில் உள்ள தற்சேவை பயணச் சீட்டு இயந்திரங்கள் மூலம் பயனர்கள் தங்களின் பயணச் சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.[9]
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]இந்த நிலையத்தில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.[9]
| புத்ராஜெயா — தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம் | |||
| நுழைவாயில் | அமைவிடம் | இலக்கு | தோற்றம் |
|---|---|---|---|
| A | நிலையத்தின் தென்கிழக்கு |
நகரப் பேருந்துகள் நிறுத்தம்; வாடகை வாகனங்கள் நிறுத்தம்; தனியார் வாகனங்கள் நிறுத்தம்; வாடகை வாகன சவாரி அழைப்பு; மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் (→) எம்பிஎஸ்ஆர் தாமான் இக்குயின் (→) தாமான் பெங்கிரான் புத்ரா | |
| B | நிலையத்தின் வடமேற்கு |
நகரப் பேருந்துகள் நிறுத்தம்; வாடகை வாகனங்கள் நிறுத்தம்; தனியார் வாகனங்கள் நிறுத்தம்; வாடகை வாகன சவாரி அழைப்பு; மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் (→) தாமான் டத்தோ டெமாங் (→) தாமான் இக்குயின் | |
பேருந்து சேவைகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | |
|---|---|---|---|
| PY36 தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் A | தாமான் பெங்கிரான் புதரா (→) | ||
| PY36 தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் B | தாமான் லெசுதாரி பெர்தானா (→) புஞ்சாக் ஜாலில் (→) | ||
| KB05 செர்டாங் தொடருந்து நிலையம் (→) புத்ரா பெர்மாய் (→) தாமான் இக்குயின் (→) PY33 செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம்(→) PY36 தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையம் | |||
| PY37 புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம் (→) புத்ரா பெர்மாய் (→) தாமான் இக்குயின் | புக்கிட் செர்டாங் (→) PY33 செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம் (→) | ||
காட்சியகம்
[தொகு]தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)
பொதுவகத்தில் தாமான் இக்குயின் எம்ஆர்டி நிலைய தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேலும் காண்க
[தொகு]- PY31 செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்
- PY32 செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம்
- PY33 செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம்
- PY34 யூபிஎம் எம்ஆர்டி நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Taman Equine - MRT Corp - Tempat Letak Kereta". www.mymrt.com.my (in மலாய்). 26 September 2017. Retrieved 6 November 2025.
- ↑ 2.0 2.1 "Klang Valley Integrated Transit Map" [Peta Transit Berintegrasi Lembah Klang] (PDF). MyRapid (in ஆங்கிலம்). Suruhanjaya Pengangkutan Awam Darat. 2021. Retrieved 20 February 2022.
- ↑ MRT Corp Malaysia (15 September 2016). "MRT Sungai Buloh- Serdang- Putrajaya (SSP) Line Alignment Video" [Video Jajaran Laluan MRT Sungai Buloh- Serdang- Putrajaya (SSP).]. Youtube (in ஆங்கிலம்). Retrieved 21 January 2020.
- ↑ 4.0 4.1 4.2 M. Hafidz Mahpar (6 November 2016). "MRT Corp: All elevated station contracts for SSP Line awarded" (in en). The Star (Malaysia). https://www.thestar.com.my/business/business-news/2017/11/06/mrt-corp---all-elevated-station-contracts-for-ssp-line-awarded.
- ↑ 5.0 5.1 "Awarded Contracts" [Penganugerhan Kontrak]. MRT Corp (in ஆங்கிலம்). Malaysia. Retrieved 2021-12-12.
- ↑ SunBiz (8 March 2019). "Uni Wall APS secures RM32.14m MRT subcontract from Ahmad Zaki". thesundaily.my (in ஆங்கிலம்). The Sun. Retrieved 8 March 2023.
- ↑ "Awarded Contracts" [Penganugerhan Kontrak]. MRT Corp (in ஆங்கிலம்). Malaysia. Retrieved 2021-12-12.
- ↑ "Pangkalan Data Nama Geografi dan Gazetir Kebangsaan". MyGeoName. Jabatan Ukur dan Pemetaan Malaysia. Retrieved 2022-01-06.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 "Maklumat mengenai Stesen MRT Taman Naga Emas". www.mymrt.com.my. Mass Rapid Transit Corporation (MRT Corp) Sdn. Bhd. Retrieved 29 November 2022.
