தாமஸ் புரூக் பெஞ்சமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாமஸ் புரூக் பெஞ்சமின் என்பவர் ஒரு கணித இயற்பியலாளர் மற்றும் கணித வல்லுநரும் ஆவார். மேலும் இவர் திரவ இயக்கவியல் மற்றும் கணித பகுப்பாய்வுகளில் பெயர் பெற்றவர். குறிப்பாகத் தொகையற்ற வகையீட்டுச் சமன்பாடுகளின்nonlinear differential equations) பயன்பாடுகளில் தனிச் சிறப்பு வாய்ந்தவர்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

இவர் இங்கிலாந்தில் உள்ள வாலிஸி(wallasey) எனும் ஊரில் 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் தேதி பிறந்தார். இவருக்கு 1955 ஆம் ஆண்டு கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தால் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் இவர் 1979 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள கணித நிறுவனத்தில் இயற்கை தத்துவ(Natural Philosophy) பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

பெஞ்சமின் தமது 66ஆவது அகவையில், 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 16ஆம் தேதி இயற்கை எய்தினார்.

ஆதாரம்[தொகு]

1) Longuet-Higgins, M.S.(2004). "Benjamin, (Thomas) Brooke"(http:/www.oxforddnb.com/view/article/60105). Oxford Dictionary of National Biography. Oxford University Press. Retrieved 15 April 2015.