தாமன் மாவட்டம், கந்தகார்
தாமன் மாவட்டம் Daman District
دامان ولسوالۍ | |
|---|---|
மாவட்டம் | |
| நாடு | |
| மாகாணம் | கந்தகார் மாகாணம் |
| Center | தாமன் நகரம் |
| மக்கள்தொகை (2006) | |
| • மொத்தம் | 30,700 |
| நேர வலயம் | + 4.30 |
31°12′N 65°48′E / 31.2°N 65.8°E

தாமன் மாவட்டம் (Daman District), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தின் 13 மாவட்டங்களில் ஒன்றாகும். கந்தகார் மாகாணத்தின் மத்தியப் பகுதியில் அமைந்த இம்மாவட்டத்தி நிர்வாகத் தலைமையிடம் தாமன் நகரம் ஆகும். தாமன் நகரமானது, மாகாணாத் தலைநகரான கந்தகாரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான காபூலுக்கு தெற்கே1610 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
அமைவிடம்
[தொகு]கந்தகார் மாகாணத்தின் மையப் பகுதியில் அமைந்த தாமன் மாவட்டத்தின் மேற்கில் பஞ்ச்வாய் மாவட்டம் மற்றும் கந்தகார் மாவட்டங்களும், வடக்கில் ஷா வாலி கோட் மாவட்டம், வடகிழக்கில் சாபுல் மாகாணம், கிழக்கில் ஸ்பின் போல்டாக் மாவட்டம், தெற்கில் ரெக் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.
பிற விவரங்கள்
[தொகு]2006ஆம் கணக்கெடுப்பின்படி, தாமன் மாவட்டத்தின் மக்கள் தொகை 30,700 ஆகும். ஹெல்மண்ட் மாகாணத்தின் பள்ளத்தாக்கிலிருந்து வரும் நீர் இம்மாவட்டத்தின் நீர் ஆதாரம் ஆகும்.[1]
தாமன் நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கந்தகார் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ (pdf) The Helmand Valley Project in Afghanistan: A.I.D. Evaluation Special Study No. 18 C Clapp-Wicek & E Baldwin, U.S. Agency for International Development, published December 1983
வெளி இணைப்புகள்
[தொகு]- Afghanistan: Improved Roads Unlocks Access to Services and Opportunities (The World Bank, November 14, 2017)
- AIMS District map