தாமசு ரோசுவால்
தாமசு ரோசுவால் (Thomas Rosswall) என்பவர் சூழலியல் மற்றும் மண் நுண்ணுயிரியல் துறைகளில் சிறந்து விளங்கிய சுவீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆவார். உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்கள், உயிரியல் பன்முகத்தன்மை, மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான ஆராய்ச்சிகளில் இவர் முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
சுவீடிய வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் மண் சூழலியல் துறை இணைப் பேராசிரியராகவும் (1979-1984), சுவீடனின் லிங்கோபிங் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தில் நீர் துறைப் பேராசிரியராகவும் (1984-1987), சுவீடிய அரச அறிவியல் அகாடமியில் உள்ள சர்வதேச புவிக்கோளம்-உயிர்க்கோளத் திட்டத்தின் நிர்வாக இயக்குநராகவும் (1987-1994), பன்னாட்டு மூலோபாய பகுப்பாய்வு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி செயலகத்தின் (வாசிங்டன் டி.சி., 1992-1993) இயக்குநராகவும், சுவீடிய வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் (1994-2000) மற்றும் பிரான்சின் பாரிசு நகரிலுள்ள பன்னாட்டு அறிவியல் மன்றத்தின் நிர்வாக இயக்குநராகவும் (2002-2009) பணியாற்றினார்.[1]2001-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பன்னாட்டு அறிவியல் அறக்கட்டளையின் இயக்குநர் பதவியிலிருந்து விலகிய பிறகு ரோசுவால் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.[2] ரோசுவால் தற்போது சுவீடிய பன்னாட்டு மேம்பாட்டு ஒத்துழைப்பு முகமையின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார்.[3]
உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும், அவற்றை எதிர்கொள்ளும் அறிவியல் முயற்சிகளை முன்னெடுக்கவும் இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ICSU Structure
- ↑ "International Foundation for Science appoints new director". SciDev.Net.
- ↑ "Sida's Scientific Advisory Board". www.sida.se (in ஆங்கிலம்).