தாமசு கூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமசு கூன்
தாமசு கூனின் உருவப்படம்
பிறப்புதாமசு சாமுவேல் கூன்
(1922-07-18)சூலை 18, 1922
சின்சினாட்டி, ஓகியோ, அமெரிக்கா
இறப்புசூன் 17, 1996(1996-06-17) (அகவை 73)
கேம்பிரிட்சு, மசாசூசட்சு, அமெரிக்கா
கல்விஆர்வர்டு பல்கலைக்கழகம் (PhD, 1949)
காலம்இருபதாம் நூற்றாண்டு தத்துவம்
பகுதிமேலைத் தத்துவம்
கல்விக்கழகங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம்
The Cohesive Energy of Monovalent Metals as a Function of Their Atomic Quantum Defects
முக்கிய ஆர்வங்கள்
அறிவியலின் தத்துவம்
அறிவியலின் வரலாறு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்

தாமசு சாமுவேல் கூன் (Thomas Samuel Kuhn, 18 சூலை 1922 – 17 சூன் 1996[6]) ஒரு அமெரிக்க மெய்யியலாளரும், அறிவியல் வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் எழுதிய "அறிவியல் புரட்சிகளின் அமைப்பு" (The Structure of Scientific Revolutions) என்ற அறிவியல் வரலாற்று நூல் அதிகம் மேற்கோள் காட்டப்படும் ஓர் அறிவுசார் நூலாகும்.[7] அறிவியலின் வளர்ச்சியில் அவ்வப்போது நிகழும் கருத்தோட்டப் பெயர்வுகளால் அதுவரை கருதப்படாத புதிய அணுகுமுறைகள் தோன்றுகின்றன என்ற கருத்தை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தாமசு அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டியில் 1922ல் பிறந்தார். இவரது தந்தை சாமுவேல் லூயி கூன், ஒரு தொழிற்பொறிஞராகவும் முதலீட்டு ஆலோசகராகவும் தாய் மினெட் கூன், ஒரு சார்பிலா இதழாசிரியராகவும் இருந்துள்ளனர்.[8]

பல்கலைக்கழகப் படிப்பு[தொகு]

இயற்பியலில் இளங்கலைப் பட்டத்தையும் முதுகலைப் பட்டத்தையும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பெற்ற தாமசு, அறிவியலின் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டத்தையும் இதே பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[6]

நூல்கள்[தொகு]

தாமசு கூன் எழுதிய நூல்கள்[9]:

 • "மேற்கத்திய சிந்தனையின் வளர்ச்சியில் கோள் வானியல்" (Planetary Astronomy in the Development of Western Thought), கேம்பிரிட்சு: ஆர்வர்டு பல்கலைக் கழக அச்சகம், 1957. ISBN 0-674-17100-4
 • "அறிவியல் புரட்சிகளின் அமைப்பு" (The Structure of Scientific Revolutions). சிகாகோ: சிகாகோ பல்கலைக் கழக அச்சகம், 1962. ISBN 0-226-45808-3
 • "அறிவியல் பாரம்பரியத்திலும் அதன் மாற்றத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுகள்" (Selected Studies in Scientific Tradition and Change). சிகாகோ மற்றும் இலண்டன்: சிகாகோ பல்கலைக் கழக அச்சகம், 1977. ISBN 0-226-45805-9
 • "கரும்பொருள் கோட்பாடும் குவாண்டம் தொடர்ச்சியின்மையும், 1894-1912" (Black-Body Theory and the Quantum Discontinuity, 1894-1912). சிகாகோ: சிகாகோ பல்கலைக் கழக அச்சகம், 1987. ISBN 0-226-45800-8
 • "கட்டமைப்பிலிருந்து வழி: மெய்யியல் கட்டுரைகள், 1970–1993" (The Road Since Structure: Philosophical Essays, 1970–1993). சிகாகோ: சிகாகோ பல்கலைக் கழக அச்சகம், 2000. ISBN 0-226-45798-2

கலைச்சொற்கள்[தொகு]

 • கருத்தோட்டப் பெயர்வு -- paradigm shift
 • சார்பிலா இதழாசிரியர்—freelance magazine editor
 • கல்விசார்—academic

மேற்கோள்கள்[தொகு]

 1. Alexander Bird (2004). "Thomas Kuhn". Stanford Encyclopedia of Philosophy. Stanford University – via plato.stanford.edu. "Not all the achievements of the preceding period of normal science are preserved in a revolution, and indeed a later period of science may find itself without an explanation for a phenomenon that in an earlier period was held to be successfully explained. This feature of scientific revolutions has become known as 'Kuhn-loss'". The term was coined by Heinz R. Post in Post, H. R. (1971), "Correspondence, Invariance and Heuristics," Studies in History and Philosophy of Science, 2, 213–255.
 2. "Transcendental nominalism" is a position ascribed to Kuhn by Ian Hacking (see D. Ginev, Robert S. Cohen (eds.), Issues and Images in the Philosophy of Science: Scientific and Philosophical Essays in Honour of Azarya Polikarov, Springer, 2012, p. 313).
 3. Aviezer Tucker (ed.), A Companion to the Philosophy of History and Historiography, Blackwell Publishing, 2011 : "Analytic Realism".
 4. 4.0 4.1 Thomas S. Kuhn (1970). The Structure of Scientific Revolutions (PDF) (2nd ed.). Chicago and London: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-45803-2. Archived from the original (PDF) on January 29, 2016. பார்க்கப்பட்ட நாள் February 9, 2022.
 5. Burman, J. T. (2007). "Piaget No 'Remedy' for Kuhn, But the Two Should be Read Together: Comment on Tsou's 'Piaget vs. Kuhn on Scientific Progress'". Theory & Psychology 17 (5): 721–732. doi:10.1177/0959354307079306. 
 6. 6.0 6.1 "பிரித்தானிக்கா: தாமசு கூன்". பார்க்கப்பட்ட நாள் 11 பெப்பிரவரி 2022.
 7. "Stanford Encyclopedia of Philosophy: Thomas Kuhn". பார்க்கப்பட்ட நாள் 11 பெப்பிரவரி 2022.
 8. "Famous Scientists: Thomas Kuhn". பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
 9. "திரிப்டு புக்சு: Books by Thomas S. Kuhn". பார்க்கப்பட்ட நாள் 11 பெப்பிரவரி 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தாமசு கூன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_கூன்&oldid=3918387" இலிருந்து மீள்விக்கப்பட்டது