தாபேலி
| மாற்றுப் பெயர்கள் | கச்சு தாபேலி, இரட்டை உரோட்டி |
|---|---|
| வகை | நொறுக்குத் தீனி |
| தொடங்கிய இடம் | இந்தியா |
| பகுதி | மாண்டவி, குஜராத், கச்சு மாவட்டம் |
| ஆக்கியோன் | மோகன் பாவாஜி என்று கூறப்படுகிறது. கேசவ்ஜி கபா சூடாசமா (கேஷா மாலம்) பிரபலப்படுத்தினார். |
| பரிமாறப்படும் வெப்பநிலை | இயல்பான வெப்பநிலை |
| முக்கிய சேர்பொருட்கள் | உருளைக் கிழங்கு, மசாலாப் பொருள், பாவ் பர்கர், மாதுளை, நிலக்கடலை |
தாபேலி (Dabeli) என்பது இந்தியாவின் ஒரு பிரபலமான சிற்றுண்டி வகையாகும். கச்சு தாபேலி அல்லது இரட்டை உரோட்டி என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. குசராத்து மாநிலத்தின் கச்சு பிராந்தியத்தில் உள்ள மாண்ட்வி நகரில் இச்சிற்றுண்டி தோன்றியது. இது ஒரு காரமும் இனிப்புமான ஒரு சிற்றுண்டியாகும். வேகவைத்த உருளைக்கிழங்குடன் ஒரு சிறப்பு 'தாபேலி மசாலா' கலக்கப்படுகிறது. இந்தக் கலவை பர்கர் பன்னு போன்ற ஒரு வகை உரோட்டியின் உள்ளே ஒரு லாடி பாவ் என்ற உரொட்டித் தும்ம்டுகள் வைத்து அடைக்கப்படுகிறது. பின்னர் புளி, பேரீச்சம்பழம், பூண்டு, சிவப்பு மிளகாய் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சட்னிகளுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. இதன் மேல் மாதுளை முத்துக்களும், வறுத்த வேர்க்கடலையும் தூவி அலங்கரிக்கப்படுகிறது.
குசராத்து மொழியில் தாபேலி' என்ற சொல்லுக்கு நேரடிப் பொருளாக அழுத்தப்பட்டது என்று பொருள்.[1] இந்த உணவு வகையானது, 1960 ஆம் ஆண்டுகளில் கச்சு பகுதியின் மாண்டவி நகரைச் சேர்ந்த கேசவ்ச்சி கபா சுடாசாமா (இவர் 'கேசா மாலம்' என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் தனது தொழிலைத் தொடங்கியபோது, ஒரு தாபேலியை ஒரு அணா அல்லது ஆறு 'பைசா' விலைக்கு விற்று வந்தார். மாண்டவி நகரில் அமைந்துள்ள இவரது கடை இன்றும் இயங்கி வருகிறது. இந்த உணவு தற்போது இவரது குடும்பத்தின் அடுத்த தலைமுறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.[2]இன்றைய காலகட்டத்தில், கச்சு பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் தாபேலி மசாலா தான் மிகவும் உண்மையான சுவையைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.[3] மாண்டவி நகரைத் தவிர, கச்சு பிராந்தியத்தில் உள்ள புச்சு மற்றும் நகத்ரானா ஆகிய நகரங்களும், உண்மையான சுவையுடனான தாபேலி உணவிற்குப் பெயர் பெற்றவையாகத் திகழ்கின்றன.[4]
பிரபலம்
[தொகு]இன்று தாபேலி உணவானது கச்சு மற்றும் குசராத்து மாநிலங்களில் மட்டுமல்லாமல், மகாராட்டிரம் மாநிலத்தின் சாங்லி, மும்பை, புனே மற்றும் கோலாப்பூர் ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது.
மேலும் பார்க்க
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarati- English Learner's Dictionary" (PDF).
- ↑ "Kacchi Dabeli Recipe | Easy Dabeli Recipe in 40 Minutes". 6 November 2019. Archived from the original on November 6, 2019.
- ↑ "Dabeli: Its Origin And Journey To Maharashtra". www.slurrp.com. Retrieved 2024-01-31.
- ↑ "Dabeli: Its Origin And Journey To Maharashtra". www.slurrp.com. Retrieved 2024-01-31.