தான்புரைட்டு
தான்புரைட்டு Danburite | |
---|---|
![]() தான்புரைட்டின் படிகங்களின் கொத்து | |
பொதுவானாவை | |
வகை | டெக்டோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | CaB2(SiO4)2 |
இனங்காணல் | |
படிக இயல்பு | நிறைவடிவம் |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
பிளப்பு | {001} குறைவு |
முறிவு | துணை சங்குருவம் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 7 – 7.5 |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் முதல் ஒளி கசியும் |
ஒப்படர்த்தி | 2.93 – 3.02 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+/-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.627 – 1.633 nβ = 1.630 – 1.636 nγ = 1.633 – 1.639 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.006 |
2V கோணம் | 88 to 90° அளக்கப்பட்டது |
நிறப்பிரிகை | r < v வலிமை |
புறவூதா ஒளிர்தல் | ஒளிரும் மற்றும் வெப்பத்தில் ஒளிரும் (சிவப்பு); தாழ் புற ஊதா=ஊதா நீலம்; நீண்ட புற ஊதா=நீலம் முதல் நீலப்பச்சை |
மேற்கோள்கள் | [1][2][3] |
தான்புரைட்டு (Danburite) என்பது CaB2(SiO4)2.[4] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் போரான் சிலிக்கேட்டு வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தான்புரைட்டு கனிமத்தை Dbu[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
7 முதல் 7.5 வரை என்ற மோவின் கடினத்தன்மையையும் 3.0 ஒப்படர்த்தி மதிப்பையும் தான்புரைட்டு கனிமம் கொண்டுள்ளது.[4] நேர்ச்சாய்சதுரக் கட்டமைப்பில் இது படிகமாகிறது.[4] பொதுவாக குவார்ட்சு போல நிறமற்றும் வெளிர் மஞ்சள் அல்லது மஞ்சள்-பழுப்பு நிறமாகவும் காணப்படுகிறது.[4] பொதுவாக தொடர்பு உருமாற்றப் பாறைகளில் தான்புரைட்டு காணப்படுகிறது.
தாதுக்களின் தானா வகைப்பாடு தான்புரைட்டு கனிமத்தை ஒரு சோரோசிலிகேட்டு என வகைப்படுத்துகிறது. அதே நேரத்தில் இசுட்ரான்சு வகைப்பாட்டுத் திட்டம் இதை ஒரு டெக்டோசிலிகேட்டு எனப் பட்டியலிடுகிறது. இதன் அமைப்பை இரண்டாகவும் விளக்கலாம். தான்புரைட்டின் படிகச் சமச்சீர்மை மற்றும் வடிவம் புட்பராகம் போன்றதாகும். இருப்பினும், புட்பராகம் ஒரு கால்சியம் புளோரின் தாங்கிய நெசோசிலிகேட்டு ஆகும். தான்புரைட்டின் தெளிவு, மீள்தன்மை மற்றும் வலுவான சிதறல் ஆகியவை நகைகளுக்கு வெட்டப்பட்ட கற்களாக இதை மதிப்புமிக்கதாக ஆக்குகின்றன.
அமெரிக்காவின் கனெக்டிகட்டில் உள்ள தான்பரியில் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் தான்புரைட்டு எனப் பெயரிடப்பட்டது. அங்கு இது முதன்முதலில் 1839 ஆம் ஆண்டு சார்லசு உபாம் செப்பர்டால் கண்டுபிடிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்
[தொகு]- ↑ Danburite data on Webmineral
- ↑ "Danburite in The Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2022-05-11. Retrieved 2014-03-24.
- ↑ Danburite on Mindat.org
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4
"Danburite". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 7. (1911). Cambridge University Press.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.