தான்பிரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தான்பிரீன்
டீச்ச்தா டெலா
பதவியில்
1948 பெப்ரவரி – 1965 ஏப்பிரல்
தொகுதிடிப்பரரி தெற்கு
பதவியில்
1932 பெப்ரவரி – 1948 பெப்ரவரி
பதவியில்
1923 ஆகத்து – 1927 சூன்
தொகுதிடிப்பரரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1894-08-11)11 ஆகத்து 1894
கவுண்டி டிப்பரரி, அயர்லாந்து
இறப்பு27 திசம்பர் 1969(1969-12-27) (அகவை 75)
டப்லின், அயர்லாந்து
தேசியம்ஐரியர்
அரசியல் கட்சிபியானா பைல்
சின் பெயின்
துணைவர்பிரிஜிட் மலோன்
Military service
பற்றிணைப்புவார்ப்புரு:நாட்டுத் தகவல் Irish Republic
கிளை/சேவைஅயர்லாந்து குடியரசு படை
ஒபந்த எதிர்ப்பு அயர்லாந்து குடியரசு படை
போர்கள்/யுத்தங்கள்ஐரிஷ் சுதந்திரப் போர்
ஐரிஷ் உள்நாட்டுப் போர்

டேனியல் பிரீன் ( Irish  ; 11 ஆகஸ்ட் 1894 - 27 டிசம்பர் 1969) என்பவர் ஐரிஷ் விடுதலைப் போரிலும், ஐரிஷ் உள்நாட்டுப் போரிலும் ஐரிஷ் குடியரசுக் கட்சியின் கெரில்லா வீரராக பணியாற்றியவர். பிற்காலத்தில் இவர் ஃபியானா ஃபைல் கட்சியின் அரசியல்வாதியாக இருந்தார்.

பின்னணி[தொகு]

தான்பிரீன் டிப்பரரியின் மாவட்டத்தில் டொனோஹில் பாரிஷில் உள்ள கிரெஞ்சில் பிறந்தார். தானின் ஆறு வயதில் இவரது தந்தை இறந்தார். இதனால் இவர்களின் குடும்பம் மிகுந்த ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டது.[1]

இவர் கொத்தனாராக ஆவதற்கு முன்பு உள்ளுரில் கல்வி கற்றார், பின்னர் பெரிய தெற்கு ரயில்வேயில் மின்தடப் பணியாளராக இருந்தார்.  

புரட்சி[தொகு]

மோதல்[தொகு]

பிரீன் 1912 இல் ஐரிஷ் குடியரசுக் சகோதரத்துவக் கட்சியிலும், 1914 இல் ஐரிஷ் தன்னார்வல உறுப்பினராகவும் இருந்தார். 1919 சனவரி 21 அன்று, டப்ளினில் கூடிய முதல் டெயில் என்ற புரட்சிகர ஐரிஷ் குடியரசின் ஓரவையின் முதல் கூட்டத்தில், பிரீன் தன்னை "முதல் மற்றும் முன்னணி ஒரு சிப்பாய்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். சோலோஹெட்பேக் வெடிமருந்து கடத்தல் நடவடிக்கையிலும் கலந்துகொண்டார்.[2] இந்த நிகழ்வில் சூமாஸ் ராபின்சன் தலைமையில் எட்டு பேர் கொண்ட தன்னார்வலர் கெரில்லா குழுவினர் பதுங்கியிருந்து, வெடிமருந்துகளைக் கொண்டுவந்த வண்டியை கடதினர். அப்போது நடந்த சண்டையில் ராயல் ஐரிஷ் காவலர்கள் இருவர் இவர்களால் தாக்கபட்டனர். இதில் கைபற்றபட்ட வெடிபொருட்களை யாருக்கும் தெரியாத இடத்தில் புதைத்துவைத்தனர். இந்த சம்பவத்தின் போது தாக்கபட்ட ஜேம்ஸ் மெக்டோனல் மற்றும் பேட்ரிக் ஓ'கோனெல் ஆகிய இரு போலீசார் இறந்தனர். இதுவே ஐரிஷ் விடுதைலைப் போரின் முதல் தாக்குதல் சம்பவமாகக் கருதப்படுகிறது.

இந்த மோதலில் ஈடுபட்ட பிரீனின் தலைக்கு ஆங்கிலேயர்கள் £ 1,000 பரிசை அறிவித்தனர். பின்னர் இந்த பரிசுத் தொகை £ 10,000 ஆக உயர்த்தப்பட்டது.[3][4] இவர் விரைவில் ஐரிஷ் குடியரசுக் கட்சியின் (ஐஆர்ஏ) ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவரின் தைரியத்திற்காக பெரிதும் அறியப்பட்டார். 1919 மே 13, இல், கவுண்டி லிமெரிக்கில் உள்ள நாக்லாங் தொடருந்து நிலைய தடத்தில் தொடருந்தில் காவல்துறையினரால் கொண்டுசெல்லபட்ட தனது தோழர் சீன் ஹோகனை துப்பாக்கி முனையில் மீட்கும்பணியில் தன் குழுவினருடன் ஈடுபட்டார். இந்த முயற்சியில் துப்பாக்கி குண்டுகளால் பிரீன் துளைக்கபட்டார். இந்த நிகழ்வ்வின்போது தாங்கள் "கொடூரமான கொலையாளிகள் என்று கடுமையாக கண்டிக்கப்பட்டோம்" மேலும் கத்தோலிக்க திருச்சபையாலும் கண்டனம் செய்யப்பட்டோம் என்பதை பிரீன் நினைவு கூர்தார்.[5] இந்த மீட்பு மோதலுக்குப் பின்னர், சீன் ட்ரேசி, சூமாஸ் ராபின்சன், ப்ரீன் ஆகியோர் டப்ளினில் ஐரிஷ் புரட்சியாளர் மைக்கேல் காலின்சை சந்தித்தனர். அங்கு இவர்களை அப்பகுதியிலிருந்து தப்பிக்கும்படி கூறப்பட்டது. இவர்கள் "நிச்சயமாக இறுதிவரை எதிர்த்துப் போராடுவாம்" என்று உறுதிகொண்டனர்.[6] பிரீன் மற்றும் ட்ரேசி ஆகியோர் வடக்கு புறநகர்ப் பகுதியான ட்ரம்காண்ட்ராவில் ( ஃபெர்ன்சைட் ) ஒரு பிரித்தானிய இராணுவ வளைவு வழியாக வெளியேறினர். இவர்கள் தப்பினர் என்றாலும், ட்ரேசி அடுத்த நாள் கொல்லப்பட்டார். பிரீன் குறைந்தது நான்கு முறை சுடப்பட்டார். அதில் நுரையீரலில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன.

இந்நிகழ்வுகின் எதிர்வினையாக பிரித்தானியர் டிப்பரி பகுதியில் ஊரடங்கு உத்தரவு இட்டு, அங்கு நடமாடுபவர்கள் முறையான அனுமதிபெறவேண்டும் என்பன போன்ற கட்டுபாடுகளை விதித்து 'சிறப்பு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி'யாக ஆக்கினர். விடுதலைக்கு பாடுபடும் தன்னார்வளர்கள் மீது சட்டவிரோத கைக்கூலிக் குழுவினர் தாக்குதல்களை நடத்த ஏவிவிடப்பட்டனர். பிரித்தானியரின் கொள்கையானது "பிரீன் மற்றும் ட்ரேசி போன்ற முரட்டுப் போராளிகளை டப்ளின் பகுதிக்குள் செயல்படுமாறு உந்தியது" என்று ரிச்சர்ட் முல்காஹி குறிப்பிட்டார்.[7] இப்பகுதியானது கெரில்லா போர் குறித்து கற்பிப்பது, அனைத்து பயிற்சிகளுக்கான இன்றியமையாத பகுதியாக இருந்தது.[8] மேலும் டப்ளின் போரின் மையமாக மாறியது.

1919 திசம்பரில் டப்ளினில் பீனிக்ஸ் பூங்காவிற்கு அருகிலுள்ள அஷ்டவுனில் தன்னார்வலர்கள் பதுங்கியிருந்த இடத்தில் பிரீன் வந்து சேர்ந்தார். அங்கு இக்குழுவினர் அயர்லாந்தின் லார்ட் லெப்டினன்ட், விஸ்கவுண்ட் பிரெஞ்சை (அயர்லாந்துக்கான பிரித்தானிய கவர்னர் ஜெனரல்) படுகொலை செய்ய முயன்றபோது மார்ட்டின் சாவேஜ் கொல்லப்பட்டார். ஐ.ஆர்.ஏ இளைஞர்கள் புதர், சாணக்குவியல் ஆகியவற்றின் பின்னால் ஒளிந்து கொண்டு காத்திருந்தனர். ஆளுநர் பிரஞ்சு பிரபு இரண்டாவது காரில் வருவார் என எதிர்பார்க்கபட்டு, முதல் காரைவிட்டுவிடுமாறு இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. காரை நிறுத்த நினைத்து சாலையின் குறுக்கே கொண்டுசென்ற குதிரை வண்டியை ஒரு போலீஸ்காரர் அகற்றியதால் இவர்களின் சாலைத் தடை முயற்சி தோல்வியடைந்தது.[9]

1922 சூன் பொதுத் தேர்தலில், வாட்டர்ஃபோர்டு-டிப்பரரி கிழக்குத் தொகுதியில், ஒப்பந்த சார்பு மற்றும் உடன்படிக்கைக்கு எதிரான இரு தரப்பினரால் பிரீன் வேட்பாளராக முன்நிறுத்தபட்டார். ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[10]

ஐரிஷ் உள்நாட்டுப் போர்[தொகு]

1923 பொதுத் தேர்தலில் டிப்பரரி தொகுதியிற்கான குடியரசுக் கட்சி உடன்படிக்கைக்கு எதிரான டீச்ச்டா டெலா (டி.டி) ஆக பிரீன் டெயில் ஐரன்னுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] ஆங்கிலோ-ஐரிஷ் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உடன்படிக்கைக்கு எதிராக நடந்த உள்நாட்டுப் போரில் பிரீன் உடன்படிக்கைக்கு எதிரான ஐ.ஆர்.ஏ-வில் இணைந்தார். இதைத்தொடர்ந்து ஒப்பந்தத்தை ஆதரித்த தனது முன்னாள் தோழர்களுக்கு எதிராக போராடினார். இவர் ஐரிஷ் தன்னாட்சி மாநிலத்தின் தேசிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு லிமெரிக் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார், அதைத் தொடர்ந்து நீரும் உணவும் அருந்தாமல் உண்ணாநோன்பை மேற்கொண்டதையடுத்து பிரீன் விடுவிக்கபட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தான் ப்ரீன் மற்றும் பிரிஜிட் மலோனின் திருமணம்

ஐரிஷ் விடுதைல் போரில் ஈடுபட்ட காலக்ககட்டத்தில், 1921 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி, டப்ளினைச் சேர்ந்த "ஐரிஷ் பெண்கள் கவுன்சில்"ஐச் சேர்ந்த குமான் பிரிஜிட் மலோனை பிரீன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் டப்ளினில் சந்தித்துக்கொண்டனர். முன்னதாக பிரீன் துப்பாக்கி குண்டு காயத்திலிருந்து மீண்டு வந்தபோது இவரைப் பராமரிக்க பிரிஜிட் மலோன் உதவினார்.

பிரீனுக்கு டொனால் மற்றும் கிரான்யா என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.[12]

பிரீன் ஒரு இறை மறுப்பாளர்.[13]

இறப்பு[தொகு]

இவர் 1969 இல் டப்ளினில் இறந்தார். இதையடுத்து இவரது ஊருக்கு அருகிலுள்ள டோனோஹில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது நெருங்கிய நண்பரும் தோழருமான சீன் ட்ரேசிக்கு 1920 அக்டோபரில் கில்ஃபீக்கலில் நடந்த இறுதிச் சடங்கிற்கு பின்னர் இவரது இறுதிச்சடங்கில்தான் மிகப்பெரிய அளவில் கூட்டம் சேர்ந்தது மிகப்பெரிய நிகழ்வாக இருந்தது. அந்த சிறிய குக்கிராமத்தில் துக்க நிகழ்வின் சுமார் 10,000 பேர் கூடியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே இவர்மீது மக்கள் வைத்திருந்த மரியாதைக்கு சான்றாக உள்ளது.

தன்வரலாறு[தொகு]

தன்பிரீன் தனது போராட்டம் குறித்து ஐரிஷ் சுதந்திரத்திற்கான எனது போராட்டம் (1921) என்ற தன்வரலாறை எழுதியுள்ளார். இந்த நூலை அடிப்படையாக கொண்டு தன்பிரீனின் வாழ்கை வரலாற்றை தமிழில் தியாகி ப. ராமசாமி 1930 காலக்கட்டதில் எழுதினார். என்றாலும் ஆங்கிலேயர் காலத்தில் இந்த நூலை வெளியிட இயலாமல் இந்திய விடுதைலக்குப் பின்னனர் 1947 இல் வெளியிட்டார்.

குறிப்புகள்[தொகு]

  1. Breen, Dan (1981). My fight for Irish freedom. Dublin: Anvil. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-900068-58-4. https://archive.org/details/myfightforirishf0000bree. 
  2. Charles Townshend, "The Republic: The Fight for Irish Independence", (London 2014), p.73.
  3. "Remembering the Past: Gearing up for war: Soloheadbeg 1919". பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
  4. "RootsWeb: CoTipperary-L Dan Breen". பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
  5. Townshend, p.80-1.
  6. Séumas Robinson, National Library of Ireland (NLI) MS 21265.; "Irish Independent" (newspaper), 21 May 1919.
  7. Valiulis, Maryann, "Portrait of a Revolutionary: General Richard Mulcahy and the founding of the Irish Free State" (Dublin 1992), p.39.
  8. Richard Mulcahy, 'Commentary upon Piaras Beaslai's Michael Collins", UCDA (University College Dublin Archive) P7/D/I/67, as cited by Townshend, p.106
  9. Dan Breen, 'Lord French Was Not Destined to Die by an Irish Bullet', "With the IRA in the Fight for Freedom" (Tralee 1955), p.45-6.
  10. "General election 1922: Waterford-Tipperary East". ElectionsIreland.org. பார்க்கப்பட்ட நாள் 2009-02-26.
  11. "Daniel Breen". Oireachtas Members Database. பார்க்கப்பட்ட நாள் 17 January 2019.
  12. "Booth Family Center for Special Collections - Georgetown University Library". Archived from the original on 13 June 2010. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
  13. The Twelve apostles by Tim Pat Coogan

நூலியல்[தொகு]

எழுத்துக்கள்[தொகு]

  • பிரீன், டான், ஐரிஷ் சுதந்திரத்திற்கான எனது போராட்டம் (டப்ளின்: அன்வில் 1921)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்பிரீன்&oldid=3925208" இலிருந்து மீள்விக்கப்பட்டது