உள்ளடக்கத்துக்குச் செல்

தானைனே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானைனே
அடர் நீலப் புலி (திருமலா செப்டெண்டினிசு), வரிப்புலிக் காகம் (யூப்லோயா மல்சிபெர்), & புலி (டேனசு ஜெனுடியா) இடமிருந்து வல்மாக
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
நிம்பாலிடே
Tribes
  • தானைனி
  • தெலெர்வினி
  • இதோமினி

உரையினை காண்க

வேறு பெயர்கள்
  • தானைடே

தானைனே (Danainae) என்பது நிம்பலிடே எனும் வரியன்கள் பட்டாம்பூச்சி குடும்பத்தின் துணைக்குடும்பமாகும். இது தூரிகை-கால் பட்டாம்பூச்சிகள் ஆகும். இந்தக் குழுவை தானைட்சு என்று குறிப்பிடலாம் (இது இவைகளின் முந்தைய தரத்தை ஒரு குடும்பம் அல்லது எருக்கு பட்டாம்பூச்சிகளாக பிரதிபலிக்கிறது). ஏனெனில் இவை பெரும்பாலும் முட்டைகளை பல்வேறு பால் போன்ற பிசினை வெளியிடும் எருக்கஞ்செடிகளில் இடுகின்றன. இதன் இலைகளை இவற்றின் இளம் உயிரி உணவாக் உட்கொள்கின்றன. இருப்பினும் இது இத்தோமினி மற்றும் தெல்லர்வினி பட்டாம்பூச்சிகளையும் உள்ளடக்கியது.[1]

உலகெங்கிலும் சுமார் 300 தானைனே சிற்றினங்கள் உள்ளன. டேனைனியின் பெரும்பாலன சிற்றினங்கள் வெப்பமண்டல ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா காணப்படுகிறது. இதே நேரத்தில் இத்தோமினி சிற்றினங்கள் அமெரிக்காவின் பகுதியில் காணப்படுகின்றன. தெல்லர்வினி ஆத்திரேலியா மற்றும் கிழக்கத்திய பிராந்தியத்தில் மட்டுமே உள்ளன. வட அமெரிக்காவில் நான்கு வகையான வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன. மாபெரும் வண்ணத்துப்பூச்சி (தானாசு பிளெக்சிபசு) ராணி (தானாசு கிலிபசு) வெப்பமண்டல எருக்கு பட்டாம்பூச்சி) (லைகோரியா காலியா) மற்றும் சிப்பாய் பட்டாம்பூச்சிகள் அல்லது வெப்பமண்டல ராணி, (தானாசு எரேசிமுசு). இவற்றில், மொனார்க் இதுவரை மிகவும் பிரபலமானவை அமெரிக்காவில் மிகவும் அடையாளம் காணக்கூடிய பட்டாம்பூச்சிகளில் ஒன்றாகும்.

வகைப்பாட்டியல்

[தொகு]

எருக்கு பட்டாம்பூச்சிகள் இப்போது நிம்பலிடே குடும்பத்திற்குள் தானைனே துணைக்குடும்பமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், முந்தைய குடும்பப் பெயரான தேனைடே இன்னும் சில ஆதாரங்களால் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது.[2] புதைபடிவ எருக்கு பட்டாம்பூச்சி அராக்கியோலைசோரியா பிரேசிலின் ஒலிகோசீன் அல்லது மியோசீன் காலத்தைச் சேர்ந்த திரெமெம்பே உருவாக்கத்தில் அறியப்படுகிறது. தற்போதைய எருக்கு பட்டாம்பூச்சிகள் 20–30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின என்பதற்கு இது சான்றளிக்கிறது.[3][4]

சிறப்பியல்புகள்

[தொகு]

இளம் உயிரிகள் மார்பகக் காற்று நுண்குழல்களைக் கொண்டுள்ளன. இவை அப்போசைனேசி குடும்ப தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன. இவற்றின் தண்டில் பால்போன்ற சேர்மங்களை கொண்டுள்ளன. முதிர்வடைந்த பட்டாம்பூச்சிகள் எச்சரிக்கை சமிக்ஞையாக பிரகாசமான நிறங்களைக் கொண்டுள்ளன.[5]

அச்சுறுத்தல்கள்

[தொகு]

ஏராளமான குளவிகள் மற்றும் தாச்சினிட் ஈக்கள் எருக்கு பட்டாம்பூச்சியின் கம்பளிப்பூச்சிகளின் ஒட்டுண்ணிகளாகும் .[6]

பல்வேறு எருக்கு சிற்றினங்கள், உணவுத் தாவரங்களின் இழப்பு, பூச்சிக்கொல்லிகளின் அதிகப் பயன்பாடு மற்றும் அமெரிக்கா மற்றும் கனடா நிலப்பரப்புகளை மாற்றியமைத்தல் மற்றும் மெக்சிகோவில் அதிகரித்த காடழிப்பு ஆகியவை வலசைப்போகும் மொனார்க் பட்டாம்பூச்சியை அச்சுறுத்துகின்றன.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Danainae".
  2. Ackery, P. R.; Vane-Wright, R. I. (1984). Milkweed butterflies, their cladistics and biology: being an account of the natural history of the Danainae, subfamily of the Lepidoptera, Nymphalidae. British Museum (Natural History), London. p. 17. ISBN 0-565-00893-5.
  3. Martins-Neto, R. G. (1989). "Novos insetos terciários do Estado de São Paulo". Revista brasileira de Geociências 19 (3): 375–386. doi:10.25249/0375-7536.1989375386. 
  4. Brower, Andrew V. Z. "Archaeolycorea ferreirai Martins 1989". tolweb.org. Tree of Life Project. Retrieved 3 June 2025.
  5. "Danainae".
  6. Clarke, A.R.; Zalucki, M.P. (2001). "Taeniogonalos raymenti Carmean & Kimsey (Hymenoptera: Trigonalidae) reared as a hyperparasite of Sturmia convergens (Weidemann) (Diptera: Tachinidae), a primary parasite of Danaus plexippus (L.) (Lepidoptera: Nymphalidae)". Pan-Pacific Entomologist 77 (?): 68–70. 
  7. "Monarch Butterfly". National Wildlife Federation. Archived from the original on 2 May 2016. Retrieved 12 February 2015.

மேலும் படிக்க

[தொகு]
  • Ackery, P. R. & Vane-Wright, R. I. 1984. Milkweed butterflies, their cladistics and biology, being an account of the natural history of the Danainae, a subfamily of the Lepidoptera, Nymphalidae. ix+425 pp. London.

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Danainae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானைனே&oldid=4491855" இலிருந்து மீள்விக்கப்பட்டது