தானி ஜாவா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா

ஆள்கூறுகள்: 7°55′28″S 110°22′17″E / 7.9244744°S 110.3714677°E / -7.9244744; 110.3714677
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாவா விவசாயிகள் அருங்காட்சியகம்
தானி ஜாவா அருங்காட்சியகம், இந்தோனேசியா
காண்ட்ரான் கிராமத்தில் ஜாவானிய விவசாயிகள் அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
Map
நிறுவப்பட்டது27 மே 2007
அமைவிடம்காண்ட்ரான், கெபோன் ஆகாங், இமோகிரி, பன்டூல், யோக்யகர்த்தா, இந்தோனேசியா
ஆள்கூற்று7°55′28″S 110°22′17″E / 7.9244744°S 110.3714677°E / -7.9244744; 110.3714677
வகைஇனவியல் அருங்காட்சியகம்

தானி ஜாவா அருங்காட்சியகம் (Museum Tani Jawa Indonesia), இந்தோனேஷியாவில் அமைந்துள்ள ஒரு சிறிய அருங்காட்சியகமாக ஆகும். இந்த அருங்காட்சியகம் இந்தோனேசியாவின் சாவகத்திலுள்ள நகரமும் யோக்யாக்கார்த்தா சிறப்புப் பகுதியின் தலைநகரமும் ஆன பன்டூல் ரீஜென்சியில், கேபோன் ஆகங்கில் உள்ள காண்ட்ரான் என்னும் சுற்றுலா கிராமத்தில் அமைந்துள்து. இந்த அருங்காட்சியகம் இப்பகுதியின் முக்கியமானதாக கருதப்படுகின்ற இடமாக உள்ளது.[1][2]

அருங்காட்சியகம்[தொகு]

ஜாவானிய விவசாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கான முன் யோசனை 1998 ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தின்போது பாரம்பரிய விவசாயப் பொருள்களை பாதுகாத்து சேகரிக்கப்படுவதற்கான முயற்சிகள் ஆரம்பமாயின. இந்த சேகரிப்பை காண்ட்ரான் கிராமத்தில் உள்ள கிராமவாசிகள் கிராமத்தின் முதல்வர் தலைமையில் மேற்கொள்ள ஆரம்பித்தனர். மே 27, 2007 ஆம் நாளன்று, யோக்யகர்த்தாவில் நிகழ்ந்த பெரிய பூகத்தை அடுத்த சரியாக ஓர் ஆண்டு கழித்து, இந்த அருங்காட்சியகம் துவக்கி வைக்கப்பட்டது.காண்ட்ரான் கிராமத்தினை நிறுவிய கி கான்ட்ரோவு என்பவருக்குச் சொந்தமான ஒரு நிலப்பரப்பில் இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கான நிதி ஆதாரங்களை அந்தப் பகுதியை சுற்றியுள்ள கிராமவாசிகளிடமிருந்து பண்டுல் ரீஜண்ட் என்பவர் திரட்ட ஆரம்பித்தார்.

இந்த அருங்காட்சியகத்தின் குறிக்கோள் ஜாவானிய விவசாய அமைப்பின் பண்பாடு மற்றும் அதன் கலைகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவது ஆகும். மேலும் அங்கு பார்வையிட வருகின்ற பார்வையாளர்கள் விவசாயப் பொருட்களைப் பயன்படுத்தி ஜாவானிய முறைகளை அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இருப்பதும் ஆகும். இந்தோனேசியாவில் உள்ள அருங்காட்சியகங்களை மேற்பார்வையிடும் ஒரு அமைப்பான ஜாவானிய விவசாய அருங்காட்சியகம் அருங்காட்சியகங்களின் மேற்பார்வைக் குழுவோடு ( BARASMUS, Badan Musyawarah Museum ) இந்த அருங்காட்சியகம் இணைத்து வைக்கப்பட்டுள்ளது . ஜாவானிய விவசாய அருங்காட்சியகத்தை இந்தோனேசிய சுற்றுலா, கல்வி மற்றும் பண்பாட்டுத் துறை மேற்பார்வையிடுகிறது.[2] .

சேகரிப்பு[தொகு]

ஜாவானிய விவசாயிகள் அருங்காட்சியகத்தில் ஜாவா விவசாயிகள் தங்களின் விவசாயத்திற்குப் பயன்படுத்துகின்ற, பொதுவாக அரிசி விவசாயத்திற்குப் பயன்படுத்தி வருகின்ற பாரம்பரிய உபகரணங்களின் தொகுப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பழ மரங்கள் தொடர்பான விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் பாரம்பரிய போக்குவரத்து வடிவங்கள் போன்ற விவசாயம் தொடர்பான பொருட்களின் காட்சித் தொகுப்பும் இங்கு உள்ளன. தற்போது, விவசாயம் தொடர்பான 260 கருவிகள் ஜாவானிய விவசாயிகள் அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்களின் சராசரியாக 50 ஆண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவையாக அமைந்துள்ளன. [3]

அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்ற ஜாவானிய விவசாயக் கருவிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றுள் ஜாவாய ஏர், கோ என்ற மண்வெட்டி, கூடைகள், லேசங், கல் லம்பங், அனி-அனி, கேப்பிங் எனப்படும் ஒரு வகையான தொப்பி, வாஜன் எனப்படுகின்ற ஒரு வகையான சமையல் பாத்திரம், குவாலி,டெர்ரகோட்டா ஆங்கிலோ எனப்படும் ஒரு வகையான அடுப்பு, ஸ்டவ் அடுப்பு, சிறிய இடி உழக்கு, விவசாயத்தின்போது மேற்கொள்ளப் படுகின்ற பலவகையான சடங்குகளுக்குரிய விவிதான் மற்றும் மெர்ட்டி போன்ற சடங்குப் பொருள்கள், மற்றும் வயலில் பயன்படுத்துகின்ற, காகங்களைப் போன்றவற்றை விரட்டுவதற்காக அமைக்கப்படுகின்ற பொம்மை போன்றவை இங்கு காட்சியில் உள்ளன. [4]

செயன்மைகள்[தொகு]

ஜாவானிய உழவர் அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கான பலவிதமான செயன்மைகளை வழக்கமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. நெல் நடவு போட்டி மற்றும் பாரம்பரிய சமையல் போட்டி ஆகிய போட்டிகள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மற்றும் மார்ச் மாதம் ஆகிய மாதங்களில் நடத்தப் பெறுகின்றன. மே மாதத்தில் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளைக் கொண்டு அமைந்த ஒரு திருவிழாவான. கேமலன் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. அது ஒரு வகையான இசை நிகழ்ச்சியாக அமையும். ஜூலை மாதத்தில் தேசிய மெமிடி சாவா என அழைக்கப்படுகின்ற பாரம்பரியத் திருவிழா.நடத்தப் படுகிறது. நவம்பர் மாதத்தில், ஜாவானிய விவசாய உற்பத்தியைக் வெளிப்படுத்தும் வகையில் அமைகின்ற ஒரு கண்காட்சி பார்வையாளர்களுக்காக நடத்தப்படுகிறது. [4]

குறிப்புகள்[தொகு]

  1. "Museum Tani Jawa". Gudeg.net. Citraweb Nusa Infomedia. Archived from the original on டிசம்பர் 1, 2017. பார்க்கப்பட்ட நாள் November 18, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Museum Tani Jawa Indonésia". www.panoramapariwisata.com. Panorama Pariwisata. June 2, 2012. Archived from the original on August 1, 2012. பார்க்கப்பட்ட நாள் November 18, 2017.
  3. Wahyuno 2015.
  4. 4.0 4.1 Wahyuno 2015, ப. 195.