தானியங்கி வாகன வழிகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போக்குவரத்து தரவுகளை அறிந்து, சூழ்நிலைகளுக்கேற்ப சாதுரியமாக ஒரு வாகனத்தை வழிகாட்டி அதன் பயண இலக்குக்கு இட்டுசெல்ல உதவும் நுட்பமே தானியங்கி வாகன வழிகாட்டி. ஆங்கிலத்தில் இதை Automated Vehicle Guidece என்பர்.

நவீன நகரமய சூழலில் போக்குவரத்து நெரிச்சல், சாலை விபத்து, சூழல் மாசுறல், ஆற்றல் வீணாதல் போன்றவை வாகனப் போக்குவரத்தின் விழைவுகள் ஆகும். இவற்றை இயன்றவரை தவிர்ப்பது அல்லது குறைப்பது தானியங்கி வாகன வழிகாட்டிகளின் நோக்கம் ஆகும்.

இயன்றவரை பயண இலக்கை அடைய பயணிக்கு அல்லது வாகன ஓட்டுக்கு உதவுவதே தானியங்கி வாகன வழிகாட்டிகளின் நோக்கம் ஆகும். இவ்வகை கருவிகள் பல தரப்பட்டவை. பாதை காட்டுவது போன்ற மட்டுப்படுத்தப்பட்ட கருவிகளில் இருந்து ஓட்டுனர் இல்லாமல் பொது போக்குவரத்து சாலையுனூடே குறிக்கப்பட்ட இடத்தூக்கு தானக பயணிக்க ஏதுவாக்க கூடிய கருவிகள் என தானியங்கி வாகன வழிகாட்டி கருவிகள் பலவகைப்படும்.

பின்வருவனவும் தானியங்கி வாக வழிகாட்டிகளுக்கு எடுத்துக்காடுகள் ஆகும்.

  • Traveler Information System
  • Traffic Management Systems
  • Vehicle Control System
  • Collision Warning System
  • Autopilot System

திசையறிதல், குறிகிய சிறந்த வழியைத் தெரிதல், வாகனத்தை கட்டுப்படுத்தல் ஆகியவை தானியங்கி வாகன வழிகாட்டிகளின் முக்கிய செயற்பாடுகள்.

இவற்றையும் பாக்க[தொகு]