தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு
தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு, (சுருக்கமாக: அபார்) (Automated Permanent Academic Account Registry (APAAR), 2020 தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசியக் கடன் மற்றும் தகுதிகள் கட்டமைப்புகள் (National Credit Framewor-NCrF) உடன்[1]இணைந்து இந்தியாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அடையாள அட்டை ஆகும்.[2]. இது இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி அனுபவத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் ஒரு மாணவரின் அனைத்து சாதனைகள் மற்றும் சான்றுகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன் நோக்கம் மாணவர்களின் கல்வி நிலைகளில் தடையற்ற இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை உருவாக்குவதே.[3] [4]
முக்கிய அம்சங்கள்
[தொகு]கல்விக்கான அடையாளம்
[தொகு]பள்ளிக்கூடங்களில், பெற்றோர் அனுமதியுடன், மாணவ, மாணவிக்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் நிரந்தரமான 12 இலக்க எண்கள் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது மாணவ & மாணவிகள் பெற்ற கல்விக்கான பட்டங்கள், பட்டயச் சான்றிதழ்கள், உதவித்தொகைகள், விருதுகள் உள்ளிட்ட கல்விச் சாதனைகளின் விரிவான பதிவுகளை டிஜிட்டல் முறையில் பள்ளி நிர்வாகத்தால் தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேட்டில் பதியப்படுகிறது. இந்த அடையாள அட்டையின் 12 இலக்க எண் மூலம் மாணவர்களின் கல்விக்கான சான்றுகள் தெரிந்து கொள்ளமுடியும்.
அபார் எவ்வாறு செயல்படுகிறது
[தொகு]பள்ளிகள் தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேட்டில் (APAAR) மாணவர்களின் கல்வித் தரவுகள், சாதனைகள் மற்றும் செயல்பாடுகளைப் பதிவு செய்து நிர்வகிக்கிறது. மேலும் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் திறன் நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் ஆட்சேர்ப்பு நோக்கங்களுக்காக மாணவர்களின் கல்வி வரலாறு மற்றும் பிற தரவுகளை அணுக முடிகிறது.
மாணவர்கள் தங்களது விரிவான கல்விப் பதிவுகள், சாதனைகள் மற்றும் இணை பாடத்திட்ட சாதனைகளை டிஜிட்டல் முறையில் சேமிக்கவும், மீட்டெடுக்கலாம்.. திறன் தொழில் நிறுவனங்களில் சேர்க்கை அல்லது ஆட்சேர்ப்பு நோக்கங்களுக்காக மாணவர்களின் முழுமையான கல்வித் தரவை அணுகவும், சரிபார்க்கவும் இயலும்.
நன்மைகள்
[தொகு]மாணவ, மாணவிகள் தாங்கள் பெற்ற கல்விச் சான்றிதழ்கள், விளையாட்டுகளில் பெற்ற சான்றிதழ்கள் & விருதுகள் மற்றும் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்றவைகளில் பெற்ற சான்றிதழ்கள் மற்றும் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டங்களில் பங்கு பெற்ற சான்றிதழ்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து அனைததும் இந்த தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேட்டில் பதியப்பட்டு காட்சிப்படுத்தும் ஒரு ஒற்றை தளமாக செயல்படுகிறது. இதனால் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ஒரே தளத்தில் சேமிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பெற முடியும்
தரவு பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை
[தொகு]அபார் தரவு பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது. தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்காக தேவையான அரசு நிறுவனங்களுடன் மட்டுமே தகவல்களைப் பகிர்கிறது. ஒப்புதல் அடிப்படையிலான ஆவணப் பகிர்வு, ஆபார் மூலம் பகிரப்படும் தகவல்களின் மீது மாணவர்களுக்கு கட்டுப்பாடு இருப்பதை உறுதி செய்கிறது.
கல்வி முன்னேற்றக் கண்காணிப்பு
[தொகு]மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தை எளிதாக கண்காணிக்க முடியும். தனிப் பயனாக்கப்பட்ட படிப்புத் திட்டங்கள் மற்றும் நிகழ்நேர செயல்திறன் பகுப்பாய்வுகளை செயல்படுத்துகிறது. இந்த அமைப்புத் திறன் இடைவெளி பகுப்பாய்வில் உதவுகிறது மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தொழில்துறை தொடர்பான உள்ளடக்கத்தை வழங்குகிறது.