தானியக்கி பணம்செலுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வோல் மார்ட் கடையில் உள்ள NCR பாஸ்ட் லேன் தான் காசுசெலுத்துயை பயன்படுத்தும் பெண்

தானியக்கி பணம்செலுத்தி என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாட்டைக் குறிக்கும். பொருட்களின் barcodeஐ ஒவ்வொன்றாக வருடி, காசு அட்டையையோ காசையோ இட்டால் அது அதன் கணக்கை பெற்று பற்றுச்சீட்டைத் தரும். அதன் பின் நுகர்வோர் பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்வர். இது தற்போது பெரிய கடைகளில் வழமைக்கு வருகிறது.

இந்த இயந்திரங்கள் பல ஒரே சமயத்தில் வேலை செய்வதால், நுகர்வோர் விரைவாக காசுகொடுத்துவிட்டு வெளியேற முடியும். கடைகள் காசாளர்களை வேலைக்கு அமர்த்த தேவையில்லை. இதனால் கடையின் செலவீனம் குறைந்து பொருட்களின் விலைகள் குறையலாம்.

இந்த இயந்திரங்களின் வருகையால் பல்லாயிரக்கணக்கான காசாளர்கள் வேலை இழக்கலாம்.

இவற்றையும் பாக்க[தொகு]