தானிக் லால் மண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானிக் லால் மண்டல்
அரியானா ஆளுநர்[1]
பதவியில்
1990-1995
முன்னையவர்ஹரி ஆனந்த் பராரி
பின்னவர்மகாவீர் பிரசாத்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1977-1984
முன்னையவர்ஜகனாந்த் மிசுரா
பின்னவர்ஜி. எஸ். ராஜ்ஹான்சு
தொகுதிஜஞ்சார்பூர், பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 1932 (அகவை 92)
பெல்கா கிராமம், தர்பங்கா, பீகார், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிஜனதா கட்சி
துணைவர்நோநோ தேவி
மூலம்: [1]

தானிக் லால் மண்டல் (Dhanik Lal Mandal)(பிறப்பு 1932) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஜனதா கட்சியின் வேட்பாளராக, 1977 மற்றும் 1980 என இரண்டு முறை பீகாரில் உள்ள ஜஞ்சார்பூர் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் (1967-74) பீகார் சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் (1967-69) இருந்துள்ளார்.[2][3][4]

ஆளுநர் & மத்திய அமைச்சர்[தொகு]

மண்டல், அரியானாவின் ஆளுநராகப் பிப்ரவரி 7, 1990 முதல் சூன் 13, 1995 வரையில் பணியாற்றியுள்ளார்.[5][6] 1977-ல் 6வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல், மொரார்ஜி தேசாய் அமைச்சகத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் (1977-79) மாநில அமைச்சராக இருந்தார்.[2]

கல்வி[தொகு]

மண்டல், பீகாரில் மதுபானி மாவட்டத்தில் உள்ள பெல்ஹா கிராமத்தில் பிறந்தார். இவர் தர்பங்காவில் உள்ள நார்த்புரூக் மாவட்ட பள்ளியில் பள்ளிக் கல்வியினையும், தர்பங்கா, மிதிலா கல்லூரி மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலைச் சட்டப் படிப்பை முடித்துள்ளார்.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானிக்_லால்_மண்டல்&oldid=3585491" இலிருந்து மீள்விக்கப்பட்டது