தாதரம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாதரம்மன் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார்.

மதுரையில் ரெங்கநாதன் - தாதரம்மை தம்பதியினர் குழந்தையின்றி இருந்தனர். இதனால் தாதரம்மை பல்வேறு தெய்வங்களுக்கு நோம்பிருந்தும், பல்வேறு கோயில்களுக்கு யாத்திரை சென்றும் வந்தார். அவ்வாறு யாத்திரக்கு செல்லும் வழியில் குறத்தியொருத்தி தாதரம்மையின் குலதெய்வத்திற்கு கோயில் எழுப்பும் படியும், அவ்வாறு கோயில் எழுப்பினால் ஆண் குழந்தை பிறக்குமென்றும் கூறினார்.

குறத்தி கூறியபடியே தாதரம்மையும், ரெங்கநாதனும் குலதெய்வத்திற்கு கோயில் எழுப்பினார்கள். அவர்களுக்கு குழந்தைப் பிறந்தது. அக்குழந்தைக்கு பாலகன் என்று பெயரிட்டனர். அன்பாக வளர்ந்த பாலகன் பள்ளி செல்ல மறுத்து, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்துடன் காட்டிற்குள் ஓடினார். இதனை கண்ட மணவாளன் என்பவன் பாலகனை காட்டிற்குள் கொன்று நகைகளை கைப்பற்றினான்.

பள்ளிக்கு சென்று திரும்பாத பாலகனைத் தேடிய ரெங்கநாதனும், தாதரம்மையும் காட்டில் பாலகன் இறந்திருப்பதை அறிந்து கவலையுற்று மடிந்தனர். மகனுடைய மரணத்தை தாங்காது இறந்தவர்கள் என்பதால், தாதரம்மையை தெய்வமாக வணங்குகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதரம்மன்&oldid=3717479" இலிருந்து மீள்விக்கப்பட்டது