தாதம்பட்டி, விருதுநகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாதம்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விருதுநகர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,764
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்626003

தாதம்பட்டி (Thathampatti village), தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தின் விருதுநகர் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர், விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இவ்வூர் கன்னியாகுமரி -காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையான எண்-7 இல் சூலக்கரை என்னும் இடத்திலிருந்து மேற்கே 3.2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தாதம்பட்டி பஞ்சாயத்தில் சின்ன தாதம்பட்டி, வாழவந்தாள்புரம் என்ற இரு சிறு கிராமங்கள் இணைந்துள்ளன.

மக்கள்வகைப்பாடு[தொகு]

தாதம்பட்டியானது மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் இருந்து நான்கு கி.மீ. தொலைவிலும் மாநில தலைநகரான சென்னையில் இருந்து 545 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 459 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1699 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 862, பெண்களின் எண்ணிக்கை 836 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 65.3% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]

தேற்கோள்கள்[தொகு]