தாண்டலம்(III) குளோரைடு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
தாண்டலம் டிரைகுளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 13569-67-0 | |
| ChemSpider | 75412 |
| EC number | 236-988-7 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 83582 |
| |
| பண்புகள் | |
| Cl3Ta | |
| வாய்ப்பாட்டு எடை | 287.30 g·mol−1 |
| தோற்றம் | கரும் பச்சை |
| உருகுநிலை | 440 °C (824 °F; 713 K) சிதைவடையும்[1] |
| ஆம் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | தாண்டலம்(III) புரோமைடு தாண்டலம்(III) அயோடைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | நையோபியம்(III) குளோரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தாண்டலம்(III) குளோரைடு (Tantalum(III) chloride) என்பது TaCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். தாண்டலம் குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. விகிதவியலுக்கு ஒவ்வா விகிதங்களில் குளோரின் இச்சேர்மத்தில் TaCl2.9 முதல் TaCl3.1 சேர்ந்துள்ளது.[2] [Ta6Cl18]4− மற்றும் [Ta6Cl14](H2O)4 ஆகியவை Ta(III) குளோரைடு கொண்ட எதி மின்னயனி மற்றும் நடுநிலை கொத்து சேர்மங்களாகும்.[3]

தயாரிப்பு
[தொகு]தாண்டலம்(V) குளோரைடை தாண்டலம் உலோகத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் குறைத்தல் வினை நிகழ்ந்து தாண்டலம்(III) குளோரைடு உருவாகிறது. தாண்டலம்(III) குளோரைடை 305 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கி, ஆவியை 600° செல்சியசு வெப்பநிலையிலுள்ள தாண்டலம் தகட்டின் மீது செலுத்தி 365 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஒடுக்கவினைக்கு உட்படுத்தினால் தாண்டலம்(III) குளோரைடு உருவாகும். ஒடுக்கப் பகுதி மிக அதிக வெப்பநிலையில் வைக்கப்பட்டால், அதற்குப் பதிலாக TaCl2.5 படிகமாகும்.[5]
TaCl4 சேர்மத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்துவதன் மூலமும், ஆவியாகும் TaCl5 சேர்மத்தை அகற்றுவதன் மூலமும் தாண்டலம்(III) குளோரைடு சேர்மத்தைத் தயாரிக்கலாம். TaCl3 ஐ விட்டுவிட்டு TaCl5 சேற்மத்தை ஆவியாக்கினால் TaCl3 சேர்மம் கிடைக்கும்.[6]
எத்திலீன் முன்னிலையில் 1,4-இருசிலில்-வளையயெக்சாடையீனுடன் TaCl5 சேர்மத்தின் தொலுயீன் கரைசலைச் சேர்த்து "உப்பு இல்லாத குறைப்பு" வினைக்கு உட்படுத்தினால் TaCl3 சேர்மத்தின் அணைவுச் சேர்மம் உருவாகிறது:[7]
- TaCl5 + C6H6(SiMe3)2 -> TaCl3 + C6H6 + 2 Me3SiCl
பண்புகள்
[தொகு]500 °செல்சியசு வெப்பநிலைக்கு TaCl3 விகிதச்சமமற்றை விகிதத்தில் சிதைந்து TaCl5 சேற்மத்தைக் கொடுக்கிறது.[6] தாண்டலம்(III) குளோரைடு அறை வெப்பநிலை நீரில் கரையாது. நீர்த்த அமிலத்திலும் கரையாது. ஆனால் கொதிக்கும் நீரில் கரையும். நீல-பச்சை நிறக் கரைசல் உருவாகும்.[6]
ஒருங்கிணைவுச் சேர்மங்கள்
[தொகு]ஓர் ஒருமம் அல்லது இருமமாக சில ஈந்தணைவிகளுடன் சேர்ந்து தாண்டலம்(III) குளோரைடு ஒருங்கிணைவுச் சேர்மங்களை உருவாக்கும்.
Ta(=C-CMe3)(PMe3)2Cl3, [TaCl3(P(CH2C6H5)3THF]2μ-N2 மற்றும் [TaCl3THF2]2μ-N2 (இருநைட்ரசன் ஒருங்கிணைவுச் சேர்மங்கள்) ஆகியவை சில ஒருங்கிணைவுச் சேர்மங்களாகும். [8]
ஓர் இருமமாக ஒருங்கிணைவுச் சேர்மங்களில் Ta2Cl6(SC4H8)3 (SC4H8=டெட்ரா ஐதரோ தையோபீன்) ஆகும். Ta2Cl6(SMe2)3, Ta2Cl6(தயேன்)3 மற்றும் Ta2Cl6(தயோலேன்)3 ஆகியவை இரண்டு தாண்டலம் அணுக்களுக்கும், பாலம் அமைத்துள்ள இரண்டு குளோரைடுகள் மற்றும் பாலம் அமைத்துள்ள ஈந்தணைவி ஆகியவற்றிற்கும் இடையே இரட்டைப் பிணைப்பைக் கொண்டுள்ளன.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Haynes, William M. (2016). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்) (97 ed.). CRC Press. pp. 4–97. ISBN 978-1-4987-5429-3.
- ↑ Cotton, F Albert; Wilkinson, Geoffrey (1966). Advanced Inorganic Chemistry A Comprehensive Text. John Wiley. p. 927.
- ↑ Duraisamy, Thirumalai; Hay, Daniel N. T.; Messerle, Louis (2014). "Octahedral Hexatantalum Halide Clusters". Inorganic Syntheses: Volume 36. Vol. 36. pp. 1–8. doi:10.1002/9781118744994.ch1. ISBN 9781118744994.
- ↑ Thaxton, C. B.; Jacobson, R. A. (1971). "The Crystal Structure of H2(Ta6Cl18)(H2O)6". Inorganic Chemistry 10 (7): 1460–1463. doi:10.1021/ic50101a029.
- ↑ Gutmann, Viktor (2012). Halogen Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 158. ISBN 978-0-323-14847-4.
- 1 2 3 Remy, Heinrich (1963). Treatise on Inorganic Chemistry: Sub-groups of the periodic table and general topics (in ஆங்கிலம்). Elsevier Publishing Company. p. 115.
- 1 2 Tsurugi, Hayato; Mashima, Kazushi (2019). "Salt-Free Reduction of Transition Metal Complexes by Bis(trimethylsilyl)cyclohexadiene, -dihydropyrazine, and -4,4′-bipyridinylidene Derivatives". Accounts of Chemical Research 52 (3): 769–779. doi:10.1021/acs.accounts.8b00638. பப்மெட்:30794373.
- ↑ Churchill, Melvyn Rowen.; Wasserman, Harvey J. (1982). "The Ta(μ-N2)Ta System. 2. Crystal Structure of [TaCl3(P(bz)3)(THF)]2(μ-N2).≈0.7CH2Cl2. A Binuclear Di-imido Complex of Octahedral Tantalum(V)". Inorganic Chemistry 21 (1): 218–222. doi:10.1021/ic00131a040.