தாணு பத்மநாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாணு பத்மநாபன்
Thanu Padmanabhan
ThanuPadmanabhan.png
பிறப்பு10 மார்ச் 1957[1]
திருவனந்தபுரம், கேரளம்
இறப்பு17 செப்டம்பர் 2021(2021-09-17) (அகவை 64)
புனே, இந்தியா
தேசியம்இந்தியர்
துறைஇயற்பியல், வானியல்
பணியிடங்கள்பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம்[2]
கல்வி கற்ற இடங்கள்கேரளப் பல்கலைக்கழகம்,
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
ஆய்வு நெறியாளர்ஜயந்த் நாரளீக்கர்
விருதுகள்பத்மசிறீ

பேராசிரியர் தாணு பத்மநாபன் (Thanu Padmanabhan, 10 மார்ச் 1957 – 17 செப்டம்பர் 2021) இந்தியக் கோட்பாட்டு இயற்பியலாளரும், அண்டவியலாளரும் ஆவார். இவர் அண்டம், குவைய ஈர்ப்பு ஆகிய துறைகளில் ஈர்ப்பு விசை, கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவற்றில் பெரும் பங்காற்றியுள்ளார். இவரது 300 இற்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் பன்னாட்டு ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன. 10 நூல்களை எழுதியுள்ளார். அண்டவெளியில் கருப்பு ஆற்றலின் பகுப்பாய்வு, புவியீர்ப்பை ஓர் எழுச்சி நிகழ்வாக விளக்குவது போன்றவற்றிலும் பல பங்களிப்புகளை வழங்கியுள்ளார். இவர் புனேயில் உள்ள வானியல், வானியற்பியலுக்கான பல்கலைக்கழக மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[3] 2007 இல் இவருக்குப் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பத்மநாபன் திருவனந்தபுரத்தில் 1957 மார்ச் 10 இல் தாணு ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார். கேரளப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இயற்பியலில் இளம் அறிவியல் (1977), முது அறிவியல் (1979) பட்டங்களைப்[ பெற்றார்.[4] தனது முதலாவது ஆய்வுக் கட்டுரையை பொதுச் சார்புக் கோட்பாட்டில் தனது 20-வது அகவையில் எழுதினார்.[5] 1979 இல் மும்பை, டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக இணைந்தார்.[6] அங்கு அவர் 1980 முதல் 1992 வரை பல பணிகளில் செயலாற்றினார், 1986–87 இல் கேம்பிரிட்ச் வானியல் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றினார். 1992 இல் |வானியல், வானியற்பியலுக்கான பல்கலைக்கழக மையத்தில் இணைந்து முக்கிய கல்வித் திட்டப் பீடத்தின் தலைவராக 18 ஆண்டுகள் (1997–2015) பணியாற்றினார்.

தாணு பத்மநாபன் 2021 செப்டம்பர் 17 இல் புனேயில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் தனது 64 வது வயதில் காலமானார்.[7] இவருடைய மனைவி வசந்தி பத்மநாபன் (முனைவர், வானியற்பியல்), மகள் அம்சா பத்மநாபன் (முனைவர், வானியற்பியல்) ஆவர்.

எழுதிய நூல்கள்[தொகு]

இவர் எழுதிய இயற்பியல் நூல்கள்:

முக்கிய விருதுகள்[தொகு]

பதமநாபன் பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்:[8]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Homepage of Padmanabhan". http://www.iucaa.in/~paddy/. 
 2. "Homepage of Padmanabhan". மூல முகவரியிலிருந்து 24 October 2020 அன்று பரணிடப்பட்டது.
 3. "IUCAA - People". மூல முகவரியிலிருந்து 11 January 2020 அன்று பரணிடப்பட்டது.
 4. "Homepage of Padmanabhan". மூல முகவரியிலிருந்து 24 October 2020 அன்று பரணிடப்பட்டது.
 5. "T.Padmanabhan, Solutions of scalar and electromagnetic wave equations in the field of gravitational and electromagnetic waves, Pramana , (1977), 9 , 371.". மூல முகவரியிலிருந்து 3 June 2018 அன்று பரணிடப்பட்டது.
 6. "Homepage of Padmanabhan". மூல முகவரியிலிருந்து 24 October 2020 அன்று பரணிடப்பட்டது.
 7. "Renowned astrophysicist Thanu Padmanabhan passes away" (in en-IN). The Hindu. 2021-09-17. https://www.thehindu.com/sci-tech/science/renowned-astrophysicist-thanu-padmanabhan-passes-away/article36513555.ece. 
 8. "padmanabhan_cv.dvi". மூல முகவரியிலிருந்து 9 October 2018 அன்று பரணிடப்பட்டது.
 9. "Kerala's prestigious science honor for M S Swaminathan and Thanu Padmanabhan - Times of India". மூல முகவரியிலிருந்து 27 August 2021 அன்று பரணிடப்பட்டது.
 10. "Archived copy". மூல முகவரியிலிருந்து 17 October 2019 அன்று பரணிடப்பட்டது.
 11. "Archived copy". மூல முகவரியிலிருந்து 27 January 2020 அன்று பரணிடப்பட்டது.
 12. "Announcement of TWAS Prize in Physics (2011)". மூல முகவரியிலிருந்து 10 November 2015 அன்று பரணிடப்பட்டது.
 13. "List of Laureates - Infosys Prize 2009". மூல முகவரியிலிருந்து 15 March 2016 அன்று பரணிடப்பட்டது.
 14. List of Recipients of INSA Medals பரணிடப்பட்டது 4 ஏப்ரல் 2014 at Archive.today
 15. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). மூல முகவரியிலிருந்து 15 November 2014 அன்று பரணிடப்பட்டது.
 16. Shanti Swarup Bhatnagar Prize: Profile of the Awardee
 17. "List of B. M. Birla Science Prizes". மூல முகவரியிலிருந்து 28 January 2018 அன்று பரணிடப்பட்டது.
 18. "List of recipients of INSA medal for young scientists 1974-2014". மூல முகவரியிலிருந்து 11 October 2013 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாணு_பத்மநாபன்&oldid=3281849" இருந்து மீள்விக்கப்பட்டது