தாணு இரவி வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாணு ரவி
"குலசேகர" தேவன்
குல்சேகரனுடன் தொடர்புடைய ஒரு கலையான கூடியாட்டம்.
சேர பெருமாள் இராச்சியத்தின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்844/45 – 870/71 பொ.ச.
முன்னையவர்அறியப்படவில்லை
பின்னையவர்கழறிற்றறிவார் நாயனார்
குழந்தைகளின்
பெயர்கள்
கோ கிழான் அடிகள்[1]
பட்டப் பெயர்
குலசேகரன்[2]
மரபுமகோதையின் சேரபெருமாள்[3]
மதம்இந்து சமயம்

தாணு ரவி வர்மா (Sthanu Ravi Varma) ( மலையாளம் மற்றும் தமிழ் : கோ தாணு இரவி ), குலசேகரன் என்று அழைக்கப்படும் இவர், பொ.ச.844/45 முதல் 870/71 வரை தென்னிந்தியாவில் கேரளாவின் சேர பெருமாள் ஆட்சியாளராக இருந்தார். [4] [5] [6] மேலும் அறிஞர்களால் அறியப்பட்ட ஆரம்பகால சேர பெருமாள் ஆட்சியாளாவார். [6]

சோழ வம்சத்துடனான சேர பெருமாள் உறவுகள் தாணு ரவியின் ஆட்சியின் போது தொடங்கப்பட்டன. [7] புகழ்பெற்ற கொல்லம் சிரிய கிறிஸ்தவ செப்பு தகடுகள் மன்னன் தாணு ரவியின் ஐந்தாவது ஆட்சி ஆண்டில் தேதியிட்டவை. தாணு ரவியின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு கல்வெட்டுகளை இரிஞ்ஞாலகுடா, கூடல்மாணிக்கம் கோயிலிலும், திருவற்றுவாய், திருவல்லாவிலும் காணலாம். [8] தாணு ரவியின் காலத்தில் கோயில் அதிகாரியாக (இளவரசர்) இவரது மருமகன் (இவரது மகளின் கணவர்) விஜயராகவன் என்பவர் இருந்துள்ளார். [7] தாணு ரவிக்கு ஏறக்குறைய கி.பி 870 இல் ஒரு மகன் பிறந்தான். [9] இவருக்குப் பிறகு ராம ராஜசேகர் (870/71– 883/84) ஆட்சிக்கு வந்தார். [6]

தாணு ரவி தனது ஆட்சியின் முடிவில் அரியணையைத் துறந்தார். மேலும், குலசேகர ஆழ்வார் (பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஏழாவது ஆழ்வார்) என்ற பெயரில் வைணவ ஆழ்வாரானார்.[10] இவர் நாடக ஆசிரியர் சேர மன்னர் குலசேகர வர்மாவுடன் அடையாளம் காணப்படுகிறார். [11] [12] [13]

தொழில்[தொகு]

தில்லைஸ்தானம் கல்வெட்டின் எச்சங்கள் (கி.பி 9 ஆம் நூற்றாண்டு, ஆதித்த சோழன் )

இன்றைய மத்திய கேரளாவானது கொங்கு சேர அல்லது கேரள இராச்சியத்திலிருந்து (கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு) பிரிந்து சேர பெருமாள் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கலாம். [14] இந்தக் காலகட்டத்திற்கு முன்பு மத்திய கேரளா சில வகையான துணை ஆட்சியின் கீழ் இருந்தது. [15]

சேர பெருமாள் மன்னனின் நேரடி அதிகாரம் மத்திய கேரளாவில் உள்ள தலைநகர் மாகோதையை (இன்றைய கொடுங்கல்லூர் சுற்றி உள்ள நாட்டிற்கு மட்டுப்படுத்தப்பட்டது. [16] உள்ளூர் தலைவர்கள் (உடையவர்) அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பயன்படுத்திய அதிகாரத்துடன் ஒப்பிடும்போது இவரது அரசாட்சி சடங்களவிலும் பெயரளவில் மட்டுமே இருந்தது. நம்பூதிரி - பிராமணர்கள் மத மற்றும் சமூகப் பாடங்களிலும் பெரும் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். [16] [17]

தாணு ரவியின் சமகால சோழ மன்னன்[தொகு]

இவர், கொங்கு நாட்டின் (மத்திய தமிழ்நாடு ) மீதான சோழ மன்னன் ராஜகேசரி வர்மாவின் போரில் பங்குதாரராக இருந்தார். [18] இரண்டு ஆட்சியாளர்களும் இணைந்து தஞ்சையின் தலைவர் விக்கி அண்ணன் (கடம்ப மகாதேவியின் கணவர்) என்று அழைக்கப்படும் ஒரு கங்க இளவரசருக்கு இராணுவ மரியாதைகளை வழங்கியதாக அறியப்படுகிறது. பிருத்விபதியின் மகன் விக்கி அண்ணன் கி.பி 9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உள்ள கங்கர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார். [19] [20] " கதம்பா " என்ற தலைப்பு கதம்ப பரம்பரையுடன் ஒரு உறவைக் குறிக்கிறது. [21] [18]

மன்னன் ராஜகேசரி வர்மாவை ஆதித்த சோழன் (கி.பி. 871–907 கி.பி. [22] ) அல்லது ஸ்ரீகந்த சோழனுடன் (கி.பி. 817–845) அடையாளம் காணலாம். [23]

கல்வெட்டுகளில்[தொகு]

தாணு ரவியின் கீழ் (கொல்லம்) தலைவரான அய்யன் அடிகள், புகழ்பெற்ற கொல்லம் சிரிய கிறிஸ்தவ செப்புத் தகடுகளை சி. 849 கி.பி.-இல் வெளியிட்டுள்ளார். கொல்லத்தில் மார் சபீர் ஐசோவால் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அய்யன் அடிகள் நிலம் மற்றும் பணியாட்களை வழங்கியதாகவும், அஞ்சுவண்ணம் மற்றும் மணிகிராமம் ஆகிய வணிகக் கழகங்களுக்கு அதன் பராமரிப்பை ஒப்படைத்ததாகவும் கல்வெட்டு பதிவு செய்கிறது. [18] சேர பெருமாள் இளவரசர் விஜயராகவன் முன்னிலையில் உதவித்தொகை வழங்கப்பட்டது . [24] குலசேகரனின் மகள், கோ கிழான் அடிகள் என்ற பட்டத்துடன், விஜயராகவனைத் திருமணம் செய்து கொண்டார் (இவர் குலசேகரனின் சகோதரியின் மகனாகவும் இருக்கலாம்). [25]

இதனையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. As per MGS, 1972
  2. As per MGS, 1972
  3. As per MGS, 1972
  4. Noburu Karashmia (ed.), A Concise History of South India: Issues and Interpretations. New Delhi: Oxford University Press, 2014. 143-44.
  5. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 65-66.
  6. 6.0 6.1 6.2 'Changes in Land Relations during the Decline of the Cera State,' In Kesavan Veluthat and Donald R. Davis Jr. (eds), Irreverent History:- Essays for M.G.S. Narayanan, Primus Books, New Delhi, 2014. 74-75.
  7. 7.0 7.1 Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 64-66 and 78-79.
  8. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 436.
  9. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 79-80.
  10. 'Changes in Land Relations during the Decline of the Cera State,' In Kesavan Veluthat and Donald R. Davis Jr. (eds), Irreverent History:- Essays for M.G.S. Narayanan, Primus Books, New Delhi, 2014. 74-75 and 78.
  11. Noburu Karashmia (ed.), A Concise History of South India: Issues and Interpretations. New Delhi: Oxford University Press, 2014. 143.
  12. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 46-48 .
  13. Veluthat, Kesavan. 2004. 'Mahodayapuram-Kodungallur', in South-Indian Horizons, eds Jean-Luc Chevillard, Eva Wilden, and A. Murugaiyan, pp. 471–85. École Française D'Extrême-Orient.
  14. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 89-90 and 92-93.
  15. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 80-93.
  16. 16.0 16.1 Noburu Karashmia (ed.), A Concise History of South India: Issues and Interpretations. New Delhi: Oxford University Press, 2014. 143-44.
  17. Narayanan, M. G. S. 2002. ‘The State in the Era of the Ceraman Perumals of Kerala’, in State and Society in Premodern South India, eds R. Champakalakshmi, Kesavan Veluthat, and T. R. Venugopalan, pp.111–19. Thrissur, CosmoBooks.
  18. 18.0 18.1 18.2 Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 435-437.
  19. Tillaisthanam Inscription (844-5 CE, Tanjore) of "Tondainadu Pavina Cholan Palyanai", Ko Kandan, Rajakesarivarman. South Indian Inscriptions 23 (1979), no. 129.
  20. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 95-96.
  21. Menon, A. Sreedhara (1967). A Survey of Kerala History. Kottayam (Kerala): DC Books, 2007.
  22. Ali, Daud. “The Death of a Friend: Companionship, Loyalty and Affiliation in Chola South India.” Studies in History, vol. 33, no. 1, Feb. 2017, pp. 36–60.
  23. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 436-37.
  24. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 435 and 37.
  25. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 65-67 and 437-438.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாணு_இரவி_வர்மா&oldid=3423726" இலிருந்து மீள்விக்கப்பட்டது