தாட்பூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்ச்சுகலில் ஒரு சந்தையில் தாட்பூட் பழம்

தாட்பூட் (Passion fruit) என்பது பாசிஃப்லோரா குடும்பத்தைச் சேர்ந்த பல வகைகளான பழங்களாகும்.[1][2] தாட்பூட் பழங்களை மூன்று முக்கிய வகைகளாக பிரிக்கலாம்: ஊதா நிறப் பழங்கள் (Passiflora edulis சிம்ஸின் பழங்கள்), மஞ்சள் நிறப் பழங்கள் (Passiflora edulis F. flavicarpa டி.ஜி.) மற்றும் பெரிய கிரானடில்லா பழங்கள் (பாசிஃப்லோரா குவாட்ராங்கொலரிஸ் எல்). என்பனவாகும்.[3]

இலங்கையில் இதனை கொடித்தோடை என்றழைப்பர். இதன் தாவரவியல் பெயர் பாசிபுளோரா எடுலிஸ் என்பதாகும். இது தென்பிரேசில் நாட்டைத் தாயகமாகக் கொண்டது. இது இமாசலப்பிரதேசம், கர்நாடகம், தமிழகத்தில் (நீலகிரி மலைப்பகுதி) பயிராகின்றது. பழுத்த பழம் ஊதா நிறத்துடனும், முட்டை உருவத்திலும் இருக்கும். மிகுதியான வெப்பமும், குளிருமுள்ள பகுதிகளில் இது நன்கு வளரும். விதைகள், வேர்விட்ட முதிர்ந்த தண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பழங்கள் மே முதல் செப்டம்பர் வரை அறுவடை செய்யப்படுகின்றன. ஆண்டொன்றுக்கு ஒரு கொடியிலிருந்து 60 முதல் 80 பழங்கள் வரை கிடைக்கும்.

மருத்துவப் பண்புகள்[தொகு]

  • உடலுக்கு உறுதியைத் தரும்.
  • இதன் இலையை தலைச்சுற்றலுக்கும், தலைவலிக்கும் நெற்றியில் பற்றுப் போடலாம்.
  • ஆஸ்துமாவுக்கு இலைக் கஷாயம் உதவுகிறது.
  • நீரிழிவு நோய்க்கும், இசிவு நோய்க்கும் நல்லது.
  • இந்தக் கொடி வீக்கங்கள் கொண்ட தோல் நோய்களைக் குணமாக்கும்.[4]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Власова Н. (12 January 2017). Плодовый сад на вашем подоконнике. ЛитРес. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-457-41613-0.
  2. Dennis S. Hill (16 July 2008). Pests of Crops in Warmer Climates and Their Control. Springer Science & Business Media. pp. 605–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-6738-9.
  3. Experts from Dole Food Company; Experts from The Mayo Clinic; Experts from UCLA Center for H (13 January 2002). Encyclopedia of Foods: A Guide to Healthy Nutrition. Elsevier. pp. 195–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-053087-1.
  4. அர்ச்சுனன், கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 67, 68.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாட்பூட்&oldid=3913860" இலிருந்து மீள்விக்கப்பட்டது