உள்ளடக்கத்துக்குச் செல்

தாட்டாபூபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாட்டாபூபதி (பொ.பி. 539 - 540) என்பவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் ஒன்பதாம் மன்னனாவான். இவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் எட்டாமானவனும் தன் தந்தையுமானவனான சிலாகாலன் என்பவனுக்கு பின் அரசக்கட்டிலில் ஏறினான்.

சிலாகாலன்

[தொகு]

மூலக்கட்டுரை - சிலாகாலன்

சிலாகாலன் தன் ஆட்சியில் தன் மூத்த மகனான இரண்டாம் மொக்கல்லானன் என்பவனை கிழக்கிலங்கை நாடுகளுக்கும், இரண்டாம் மகனான இந்த தாட்டாபூபதியை இலங்கையின் மலைய நாட்டிற்கும், மூன்றாம் மகனான உபதிச்சனை தன் அரசவையில் முக்கிய அதிகாரியாகவும், தன் அமைச்சனும் வழிப்பறிக் கொள்ளைக்காரனுமான மகாநாகன் என்பவ்னை உராகணம் நாட்டிற்கும் அதிபதிகள் ஆக்கினான். இவனுக்குப் பிறகு இவனுடைய இரண்டாம் மகனான இந்த தாட்டாபூபதி இரண்டாம் மொக்கல்லானனுக்கு முறைப்படிச் சேர வேண்டிய ஆட்சியை பறித்துக் கொண்டு இலங்கையை அரசாண்டான்.

சகோதரர்களுக்குள் போர்

[தொகு]

இதை சிலாகாலனின் இளைய மகனும் தாட்டாபூபதியின் தம்பியுமான உபதிச்சன் கண்டித்ததால் அவனைத் தாட்டாபூபதி கொன்று விட்டான். இதையறிந்த இரண்டாம் மொக்கல்லானன் கிழக்கிலங்கை நாட்டிலிருந்து படையெடுது வந்தான். இதனால் பெரிய போர் நடந்து பெரும் உயிர்ச்சேதம் நடக்கும் என்பதால் இருவரும் ஒருவரோடு ஒருவர் மட்டும் யானைப் போரில் ஈடுபட்டனர். இதில் தோல்வியை சந்தித்த தாட்டாபூபதி தற்கொலை செய்து கொண்டதால் அதன் பிறகு முறைப்படி இரண்டாம் மொக்கல்லானன் என்ற இவனது தமையனே இலங்கையை அரசாண்டான்.[1]


மேற்கோள்கள்

[தொகு]
  1. சூல வம்சம், 41ஆம் பரிச்சேதம், 26-89

மூலநூல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாட்டாபூபதி&oldid=1087046" இலிருந்து மீள்விக்கப்பட்டது