தாஜ் எக்ஸோடிகா ஹோட்டல் மற்றும் ரிசோர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் கோவாவில் அமைந்துள்ள பெனௌலிம் கடற்கரையில் தாஜ் எக்ஸோடிகா கோவா மற்றும் ரிசோர்ட் அமைந்துள்ளது. இது தாஜ்[1] ஹோட்டல்களின் குழுமத்தில் ஒரு ஹோட்டலாகும். கோவா கடற்கரைகளில் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோவாவின் மதிப்புமிக்க உயர்-ரக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுள் தாஜ் ஹோட்டலும் ஒன்று. அமைதியாக பொழுதினைக் கழிக்க சிறந்த ஹோட்டலாக இந்த ஹோட்டல் கருதப்படுகிறது. ஆறு ஏக்கரில் அமைந்துள்ள தோட்டம், சிறப்பான ஹோட்டல் வடிவமைப்பு, பரந்த நிழலைப் பரவச் செய்யும் தாழ்வாரப் பகுதிகள் என பலதரப்பட்ட வித்தியாசமான சூழல்களின் மூலம் அமைதியான மனநிலையினை உருவாக்கும் வகையில் ஹோட்டல்[2] அமைந்துள்ளது. அத்துடன் விருந்தினர்களுக்கு அங்கு தங்கியிருக்கும் நாட்களை தொடர்ந்து நினைவிருக்கும்படியான அமைப்பினை தாஜ் நிறுவனம் செய்துள்ளது.

தாஜ் ஹோட்டல்களின் குழுமத்தினால் இதன் மேலாண்மை கவனிக்கப்பட்டு வருகிறது. சுமார் 136 அறைகளும், நான்கு சூட்களும் இந்த ஹோட்டலில் உள்ளன.

இருப்பிடம்[தொகு]

தாஜ் எக்ஸோடிகா தெற்கு கோவாவின், பெனௌலிம் கடற்கரையில் அமைந்துள்ளது. வர்கா கடற்கரை (6 கிலோ மீட்டர்) மற்றும் கோவ்லா கடற்கரை (5 கிலோ மீட்டர்) போன்றவை அருகிலுள்ள பார்ப்பதற்குரிய இடங்களாகும். இந்த ஹோட்டலுக்கு அருகில் அமைந்துள்ள போக்குவரத்து வசதிகள் பின்வருமாறு:

டபோலிம் விமான நிலையம்[3] – 25 கிலோ மீட்டர் / 45 நிமிடங்கள்

வேம்பு ரயில் நிலையம்[4] – 7-8 கிலோ மீட்டர் / 15-18 நிமிடங்கள்

அடிப்படை வசதிகள்[தொகு]

கம்பியில்லா இணையச்சேவை, குளிரூட்டப்பட்ட அறை, உணவகம், பார், காஃபி, அறைச் சேவை, இணைய வசதி, வணிக மையம், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி மையம் ஆகியவை அடிப்படை வசதிகளாக இங்கு வழங்கப்படுகின்றன.

அடிப்படை அறை வசதிகள்[தொகு]

குளிரூட்டப்பட்ட அறை வசதி மற்றும் துயில் எழ உதவும் வசதி போன்றவை இங்கு அடிப்படையாக வழங்கப்படுகிறது.

உணவு மற்றும் குடிபானங்கள்[தொகு]

பார், உணவகம், பொதுவான இருப்பிடம் மற்றும் காஃபி ஷாப் ஆகியவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

வணிகச் சேவைகள்[தொகு]

வணிக மையம், ஒலி ஒளி கருவிகள், எல்சிடி காட்சியளிப்பான், கூட்ட அரங்கு வசதிகள், சந்திப்பு அறை போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

இதர வசதிகள்[தொகு]

கடைவீதி, கூட்ட அரங்கு வசதிகள், வணிகச் சேவைகள், மாநாட்டு அறைகள், இலவச செய்தித்தாள், முடி உலரவைப்பான் மற்றும் தொலைபேசி சேவைகள் போன்றவை இங்கு வழங்கப்படும் இதர வசதிகள் ஆகும்.

மறு உருவாக்க சேவைகள்[தொகு]

குழந்தைகள் நீச்சல் குளம், உடற்பயிற்சி செய்யும் இடம், முடிதிருத்துமிடம், மற்றும் வெளிப்புற நீச்சல் குளம் போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

பயணச் சேவைகள்[தொகு]

பயண உதவிகள், இலவச வாகன நிறுத்துமிடம், வாகன நிறுத்துமிடம் போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

ஹோட்டல் வசதிகள்[தொகு]

24 மணிநேர பாதுகாப்பு வசதி, வரவேற்பு பகுதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Taj Exotica Goa". tajhotels.com. பார்த்த நாள் 11 November 2015.
  2. "Taj Exotica Goa Features". cleartrip.com. பார்த்த நாள் 11 November 2015.
  3. "Dabolim Airport Goa". aai.aero. மூல முகவரியிலிருந்து 21 ஏப்ரல் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 November 2015.
  4. "Madgaon Railway Station". goayell.com. மூல முகவரியிலிருந்து 29 ஏப்ரல் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 November 2015.