உள்ளடக்கத்துக்குச் செல்

தாசி அபரஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாசி அபரஞ்சி
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
பி. என். ராவ்
ஜெமினி ஸ்டூடியோ
கதைகொத்தமங்கலம் சுப்பு
இசைஎம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
எம். கே. ராதா
கொத்தமங்கலம் சுப்பு
எம். வி. மணி
புஷ்பவல்லி
என். எஸ். சுந்தரம்
எம். எஸ். சுந்தரிபாய்
ஜெயலட்சுமி
எல். நாராயணராவ்
வெளியீடுஅக்டோபர் 16, 1944
நீளம்10980 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாசி அபரஞ்சி (Dasi Aparanji) என்பது 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கிய இப்படத்தை ஜெமினி ஸ்டூடியோ நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்றது. இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, எம். கே. ராதா, புஷ்பவல்லி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்து, கதை, உரையாடல்,பாடல்கள் போன்றவற்றை எழுதியதுடன் துணை இயக்குநராகவும் கொத்தமங்கலம் சுப்பு பணியாற்றினார். இது மன்னன் விக்ரமாதித்தனின் உயிர் கிளி ஒன்றின் உடலில் நுழைந்த பிறகு, அவன் செய்யும் செயல்களைப் பற்றியதாக உள்ளது. மேலும் அபரஞ்சி என்ற பெண்ணைப் பற்றியதாகவும் உள்ளது. இந்தத் திரைப்படம் 1944 ஆகத்து 10 அன்று வெளியிடப்பட்டது. இதன் எந்த பதிப்பும் எஞ்சியிருப்பதாகத் தெரியவில்லை, இதனால் இது தொலைந்து போன படமாக கருதப்படுகிறது.[1]

கதைச்சுருக்கம்

[தொகு]

உஜ்ஜைனி மன்னரான விக்ரமாதித்தியன், ஆண்டில் ஆறு மாதம் காட்டில் தியானம் செய்து வாழும் வழக்கம் கொண்டவர். அதற்காக காட்டிற்குச் செல்கிறார். உடன் அவரது ராணி பத்மாவதியும், அமைச்சன் விஜயனும் காட்டிற்குச் செல்கின்றனர். விஜயனுக்கு பம்மாவதி மீது ஒரு கண். அவளை அடைய அவன் சமயம் பாத்தபடி இருக்கிறான். ஒரு சமயம் தாய் கிளி ஒன்று தனது குஞ்சு இறந்ததால் வேதனைப்படுகிறது. அதன் வேதனையைத் தணிக்க கூடுவிட்டு கூடுபாயும் வித்தை அறிந்த விக்கிரமாதத்தன் தன் உடலை விடுத்து, கிளியின் உடலுக்குள் நுழைந்து அதற்கு உயிர் கொட்க்கிறார். இதை நல் வாய்ப்பாக கண்ட விஜயன் தன் உடலை விடுத்து மன்னரின் உடலுக்குள் புகுந்து, தனது உடலை அழித்துவிடுகிறான். விஜயனின் தந்திரத்தை முதலமைச்சர் பட்டி கண்டுபிடித்து, பிரம்மச்சரிய விரதம் என்ற சாக்கில் ராணி பத்மாவதியை போலி மன்னரிடமிருந்து விலக்கி வைக்கிறார்.

விக்ரமாதித்தனின் உயிர் புகுந்துள்ள கிளியை வேடர்கள் பிடித்து, கஞ்த்தனம் மிக்க செட்டியாரான தனபாலுக்கு விற்றுவிடுகின்றனர். இப்போது அக்கிளி தனபாலிடம் வரும் வழக்குகளை தீர்க்க உதவுகிறது. சிக்கலான வழக்குகளை எளிதாக தீர்க்கிறது. அவரது மகன் நடனப் பெண்ணான அபரஞ்சிக்காக தனது செல்வத்தை எல்லாம் வறுத்து விடுகிறார். உள்ளூர் கோவிலின் பூசாரிக்கு எதிராக நடனப் பெண்ணின் புகாரைத் தீர்மானிக்க செட்டியார் கிராம பஞ்சாயத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, ​​கிளி ஒரு நாள் அவள் ஒரு பிச்சைப் பாத்திரத்துடன் தெருக்களில் நடப்பாள் என்று கூறி அவளை அவமானப்படுத்துகிறது. கிளியைக் கொன்று சாப்பிடுவேன் என்ற சபதத்திற்கு உதவ, செட்டியாரின் மகனைக் கிளியைத் திருட அபரஞ்சி வற்புறுத்துகிறார்.

ஒருநாள் விசித்திராம வழக்கு ஒன்று வருகிறது. அந்த ஊரில் அபரஞ்சி என்ற ஒரு தாசி இருந்தாள். அகங்காரம் மிக்கவளான அந்த தாசி யாராவது தன்னைப்பற்றி பேசினாலோ, நினைத்தாலோ ஆயிரம் பொன்னை அபராதமாக வசூலித்து விடுவாள். மகதபுரியில் உள்ள கோயிலில் ஒரு ஏழைப் பூசாரி (கொத்தமங்கலம் சுப்பு) இருந்தார். அவர் இந்த அபரஞ்சி மீது பெரும் மோகம் கொண்டிருந்தார். அவளை அடைய விரும்பிய பூசாரி, சர்க்கரைப் பொங்கலில் வசிய மருந்தைக் கலந்து, இந்தப் பிரசாதத்தை அபரஞ்சியிடம் கொடுக்குமாறு அவளின் வேலைக்காரியான சிங்காரியிடம் (எம். எஸ். சுந்தரிபாய்) கொடுத்தனுப்புகிறார். ஆனால் சர்க்கரைப் பொங்கலை அபரஞ்சியிடம் கொடுக்காத சிங்காரி அதைத் தானே சாப்பிட்டு எஞ்சியதை தனது ஆட்டுக்கு ஊட்டிவிடுகிறாள். வசிய மருந்தை சாப்பிட்ட சிங்காரி பிரேமை பிரேமை என்றும் ஆட்டுக்குட்டி மே மே என்றும் பூசாரியைத் தேடி ஒடுகின்றன.[2] அபரஞ்சி தன்னைத் தேடி வருவாள் என்று காத்திருந்த பூசாரி ஒரு கட்டத்தில் தூங்கி விடுகிறார். பூசாரியின் கனவில் அபரஞ்சி வருகிறாள். அந்தக் கனவை பூசாரி உண்மையாகத் தோன்றுகிறது. அடுத்த நாள் காலை தன் நண்பர்களிடம் கனவைப் பற்றிக் கூறுகிறார். அதைக் கேட்ட அபரஞ்சி, தன்னைக் கணவில் நினைத்ததால் தனக்கு ஆயிரம் பொற்காசுகள் தரவேண்டும் என்கிறாள். பணம் இல்லாததால் பூசாரியை அபரஞ்சி தனபாலிடம் வழக்கிற்காக இழுத்து வருகிறாள்.

கிளி வழக்கை விசாரித்து நல்ல தீர்ப்பை வழங்குகிறது. அதாவது முதலில் ஒரு கண்ணாடியைக் கொண்டு வரச் சொல்கிறது. அதனருகே பொற்காடுகளை வைக்கச் சொல்கிறது. இப்போது கண்ணாடியில் பொற்காசுகள் தெரிகின்றன. பூசாரி உன்னைக் கனவில்தான் சந்தித்தார், எனவே கண்ணாடியில் பிரதிபளிக்கும் பொற்காசுகளை எடுத்துக் கொள் என்று அபரஞ்சியிடம் கூறுகிறது. எனவே சினமுற்ற அபரஞ்சி கிளியைக் கொன்று சாப்பிடுவேன் என்ற சபதத்ம் செய்கிறாள். தன் சபதத்திறுகு உதவ, செட்டியாரின் மகனைக் கிளியைத் திருடிக் கொண்டுவருமாறு அபரஞ்சி செய்கிறாள்.

கிளியை சமைக்கும் பொறுப்பு அபரஞ்சியின் வேலைக்காரி சிங்காரியிடம் ஒப்படைக்கப்படுகிது. ஆனால் கிளி ஒரு தந்திரம் செய்து தப்பிக்கிறது. கிளி இறந்துவிட்டதாக நம்பும் அபரஞ்சிக்கு சிங்காரி உணவைச் சமைத்து ஒரு கிண்ணத்தில் பரிமாறுகிறாள். பின்னர் அவள் கோவிலுக்குச் செல்லும்போது, ​​ஒரு அர்ரிரீ (கிளி) அவளிடம் அவள் தன் செல்வங்கள் அனைத்தையும் தர்ம்ம் செய்து, பிச்சைக்காரியாக ஒரு பாத்திரத்துடன் கோயிலுக்கு வரச் சொல்கிறது; அபரஞ்சி அதை கடவுளின் குரல் என்று நினைக்கிறாள். அவள் தன் செல்வங்கள் அனைத்தையும் தர்மம் செய்துவிட்டு, பாத்திரத்துடன் சன்யாசினியாக கோவிலுக்கு நடக்கிறாள். பின்னர் அபரஞ்சி தான் சன்யாச வாழ்க்கையையே தொடர்வது என்று முடிவு செய்கிறாள். பாட்டி, ஒரு தந்திரம் செய்து, அரசனின் உடலில் உள்ள விஜயனை ஒரு ஆட்டுக்கிடாவின் உடலில் கூடுபாயுமாறு செய்கிறாள், அந்த ஆட்டு உடலுடன் அவன் நாடுகடத்தப்படுகிறான்.[3]

நடிப்பு

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

தாசி அபரஞ்சி படத்தை பி. என். ராவ் இயக்கினார். ஜெமினி ஸ்டுடியோவின் எஸ். எஸ். வாசன் தயாரித்தார்.[5][3] Cinematography was handled by B. S. Ranga,[5] ஒளிப்பதிவை பி. எஸ். ரங்காவும்,[5] கலை இயக்கத்தை ஏ. கே. சேகரும் மேற்கோண்டனர்.[6]

இசை

[தொகு]

இப்படத்திற்கு எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இசையமைத்தனர். பாடல் வரிகளை கொத்தமங்கலம் சுப்பு எழுதினார்.[7]

பாடல் பாடகர் நீளம்
"காணவேண்டும் கயிலையை" டி. வி. ரத்தினம் 02:45
"வேலைக்கார கேலி பிழைப்பு" எம். எஸ். சுந்தரி பாய் 02:26
"ஆசைக் கொள்ளாதவர் ஆண் பிள்ளையோ" எம். எஸ். சுந்தரி பாய் 02:37
"எந்த நாளும் பிரியேனே" கொத்தமங்கலம் சீனு, டி. வி. ரத்தினம் 02:03

மேற்கோள்கள்

[தொகு]
  1. Guy, Randor (16–31 October 2008). "Round the City's old studios with Randor Guy". Madras Musings. Vol. XVIII, no. 13. Archived from the original on 7 April 2017. Retrieved 15 February 2020.
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 20 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு". தினமணிக் கதிர். 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 Kay Yess Enn (12 August 1944). "Dasi Aparanji". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. https://news.google.com/newspapers?id=7os-AAAAIBAJ&pg=3206%2C2129578. 
  4. 4.0 4.1 Randor Guy (19 September 2008). "Blast from the past – Dasi Aparanji (1944)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 21 September 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080921212206/http://www.hindu.com/cp/2008/09/19/stories/2008091950351600.htm. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 தாசி அபரஞ்சி (பாட்டுப் புத்தகம்). ஜெமினி ஸ்டூடியோஸ். 1944.
  6. Randor Guy (3 November 2006). "Remembering Ramnoth". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200215131906/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/remembering-ramnoth/article3231213.ece. 
  7. Randor Guy (23 September 2010). "Unsung veteran of Tamil cinema". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190803094720/https://www.thehindu.com/features/cinema/Unsung-veteran-of-Tamil-cinema/article16047379.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசி_அபரஞ்சி&oldid=4367663" இலிருந்து மீள்விக்கப்பட்டது