தாசரி கோட்டிரத்னம்
தாசரி கோட்டிரத்னம் | |
|---|---|
| பிறப்பு | பிரதிபாடு, குண்டூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
| இறப்பு | 21 டிசம்பர் 1972 சிலக்கலூரிப்பேட்டை, குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| பணி |
|
தாசரி கோட்டிரத்னம் (Dasari Kotiratnam) ஓர் இந்திய நடிகையும், பாடகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.[1] இவர் தெலுங்குத் திரைப்படத்துறையின் முதல் பெண் தயாரிப்பாளர் ஆவார்.[2][3][4] ஆந்திராவில் ஒரு நாடகக் குழுவை அமைத்த முதல் நடிகையும் ஆவார்.[3] ஒரு நாடக நடிகையாக இவரது வாழ்க்கை நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது.[5]
அரோரா பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சதி அனசுயா (1935) என்ற தனது முதல் படத்தைத் தயாரித்தார்.[5] பின்னர் லங்கா தகனம் (1936) மோகினி பஸ்மாசுரா (1938) வர விக்கிரயம் (1939) பாண்டுரங்க விட்டலா (1939) பாதுகா பட்டாபிஷேகம் (1945) வருதினி (1946) கோலபாமா (1947) போன்ற படங்களில் நடித்தார்.[5]
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]தாசரி கோட்டிரத்னம் இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தின் பிரதிபாடு என்றா ஊரில் ஒரு காப்பு குடும்பத்தில் பிறந்தார்.[6] 1898 அல்லது 1910 இல் பிறந்திருக்கலாம்.[7] ஒரு மேடை நடிகரான இவரின் தந்தை இவருக்கு நாடகப் பயிற்சி அளித்தார். தனது ஒன்பது வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். ராஜனாலா வெங்கடப்பையா சாஸ்திரியின் கீழ் இந்தியப் பாரம்பரிய இசையிலும் பயிற்சி பெற்றார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]
கோட்டிரத்னம் நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களுடன் பல்வேறு ஆண் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.[8] தனது தாயார் இறந்த பிறகு, தனது சொந்த ஊரை விட்டு வெளியேறி தனது தாத்தாவின் கிராமமான நக்கபோக்கலப்பாடுவில் குடியேறினார். அங்கு இவர் ஒரு நாடக நிறுவனத்தையும் நிறுவினார். ஆந்திராவில் ஒரு நாடக நிறுவனத்தை அமைத்த முதல் நடிகை இவர்தான்.[3] ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் குண்டூருக்கு குடிபெயர்ந்து அங்கு நாடக நிறுவனத்தைத் தொடர்ந்தார். இவரது நிறுவனம் பல நாடகங்களை பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் நிகழ்த்தியது. நாடகத் துறையில் பெற்ற நற்பெயரின் அடிப்படையில் திரைப்படத் துறையில் நுழைந்தார்.
1935 ஆம் ஆண்டில் தாசரி கோட்டிரத்னம் தனது நாடகக் குழு கலைஞர்களான பி. வி. ராமாநந்தம் மற்றும் துங்கலா சலபதி ராவ் ஆகியோருடன் கொல்கத்தா சென்றார். இவர்கள் அனைவரும் 1935 இல் பாரதலட்சுமி பிலிம்ஸ் தயாரித்து சாருச்சந்திர ராய் இயக்கிய சதி சக்குபாய் படத்தில் நடித்தனர். தாசரி சக்குபாய் என்ற தலைப்புப் பாத்திரத்திலும், துங்கலா சலபதி ராவ் கிருட்டிணனாகவும் நடித்தனர். தெலுங்குத் திரைப்படங்களில் தலைப்பு வேடத்தில் நடித்த முதல் பெண்மணி இவராவார்.[5]
தாசரி கோட்டிரத்னம் அரோரா பிலிம் கார்ப்பரேஷன் எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து அஹின் சவுத்ரி இயக்கத்தில் சதி அனசுயா என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் இவர் முதன்மை வேடத்திலும் நடித்தார்.[5] இது அக்டோபர் 4,1935 அன்று வெளியிடப்பட்டது.[9] இதனால் தெலுங்குத் திரைப்படத் துறையின் முதல் பெண் தயாரிப்பாளராகவும் ஆனார். பின்னர் லங்கா தகனம் (1936), மோகினி பஸ்மாசுரா (1938), வர விக்கிரயம் (1939), பாண்டுரங்க விட்டலா (1939) பாதுகா பட்டாபிஷேகம் (1945), வருதினி (1946), கோலபாமா (1947) போன்ற படங்களிலும் நடித்தார்.[5]
இறப்பு
[தொகு]1958 ஆம் ஆண்டில், நோய்வாய்ப்பட்டிருந்த இவரது குரல் சேதமடைந்தது. இதன் விளைவாக இவருக்கு நடிப்பு வாய்ப்புகள் குறைந்தன. 1960 ஆம் ஆண்டில், தணுக்கு ஆந்திர நாடக பரிசத் என்ற அமைப்பால் தாசரி கௌரவிக்கப்பட்டார்.[5] தாசரி கோட்டிரத்னம் 1972 டிசம்பர் 21 அன்று சிலக்கலூரிப்பேட்டையில் காலமானார்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vinayaka Rao (4 May 2011). "తొలి మహిళా నిర్మాత కోటిరత్నం" [First Female Producer Kotiratnam]. Navya, ஆந்திர ஜோதி (in தெலுங்கு). p. 66.
- ↑ Limca Book of Records (in ஆங்கிலம்). Bisleri Beverages Limited. 2006. p. 113. ISBN 978-81-902837-2-4.
First woman producer Dasari Kotiratnam produced Anasuya in 1935.
- ↑ 3.0 3.1 3.2 Ōlgā (2001). Womanscape. Asmita Resource Centre for Women. p. 1944. ISBN 978-81-7525-206-6.
Dasari Kotiratnam was the first actress to set up a theatre group while Venkubai and Kamala of the Surabhi Company were well-known stage artists. Dasari Kotiratnam later became the first woman to produce films.
- ↑ Mareswara Rao, Akkina (1997). Cultural and Ideological Mediation of Telugu Cinema in Colonial Andhra's Past (1931–1947). University of Hyderabad. Chapter 2. p. 102. "Dasari Kotiratnam of Sakkubai fame emerged as the first woman producer of Telugu film industry by producing Anasuya in 1935."
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 Vinayaka Rao (4 May 2011). "తొలి మహిళా నిర్మాత కోటిరత్నం" [First Female Producer Kotiratnam]. Navya, Andhra Jyothi (in தெலுங்கு). p. 67.
- ↑ M. L. Kantha Rao (July 1999), A Study of the Socio-Political Mobility of the Kapu Caste in Modern Andhra. University of Hyderabad. Chapter 6. pp. 280–281. hdl:10603/25437
- ↑ Kiran Prabha Talk Show on Dasari Kotiratnam - దాసరి కోటిరత్నం (in ஆங்கிலம்), 19 May 2020; Event occurs from 2:40 to 2:50.
- ↑ Krishnamurthi, N. Putali (1980). The Changing Condition of Women in Andhra: From the Middle of the 19th Century to the Middle of the 20th Century (in ஆங்கிலம்). p. 274.
- ↑ "Sati Anasuya (1935)". Cinemaazi. Retrieved 20 June 2023.
- ↑ Kiran Prabha Talk Show on Dasari Kotiratnam - దాసరి కోటిరత్నం (in ஆங்கிலம்), 19 May 2020; Event occurs from 17:00 to 17:10.