தாசப்ப கவுண்டன் புதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாசப்ப கவுண்டன் புதூர்
Dasappa goundan pudur
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]
மொழிகள் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தாசப்ப கவுண்டன் புதூர்(ஆங்கிலம்: Dasappa goundan pudur அல்லது D.G.Pudur), ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் பெரியகொடிவேரி பேரூராட்சியின் கீழ் உள்ள கிராமம் ஆகும். இவ்வூருக்கு அருகில் கொடிவேரி அணை இருப்பதால் கரும்பு, மஞ்சள், வாழை போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. அதிகபட்ச கரும்பு விளைச்சலின் காரணமாக இவ்வூருக்கு அருகில் பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலையை அமைத்திருப்பது கரும்பு விளைச்சலுக்கு ஏதுவாக உள்ளது. இவ்வூர் டி.ஜி. புதூர் என்றும் நால்ரோடு என்றும் அழைக்கப்படுகிறது.

பெயர்க்காரணம்[தொகு]

இவ்வூரில் வாழும் மக்களின் முன்னோர்கள் பவானி ஆற்றின் தென்கரையில் உள்ள ஒரு தாழ்வான பகுதியில் வாழ்ந்து வந்தனர். அப்பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் ஊரை விட்டே வெளியேற முடிவெடுத்துள்ளனர்.அப்போது அங்கு வாழ்ந்து வந்த தாசப்ப கவுடா என்ற வள்ளல் தம் ஊர் மக்கள் நம் ஊரிலேயே வாழ வேண்டும் என்று கூறி தம்முடைய சொந்த நிலத்தையே தானமாக இம்மக்களுக்கு அளித்தமையால் அவரின் நினைவாக தாசப்ப கவுண்டன் புதூர் என்று வழங்கப்படுகிறது.திருமிகு.தாசப்ப கவுடர் தன் ஒக்கலிக இன மக்களின் குழந்தைகளுக்கு படிப்புக்காக கோபிசெட்டிபாளையத்தில் தாசப்ப கவுடர் இலவச விடுதி ஒன்றை நிறுவி இலவசமாக உணவுடன் தங்கும் வசதியை செய்து கொடுத்துள்ளார்.அது இன்றும் இலவச விடுதியாக செயல்பட்டு வருகிறது.

கோயில்கள்[தொகு]

  • காமாட்சியம்மன் கோயில்
  • பாலமுருகன் கோயில்
  • மாரியம்மன் கோயில்
  • செளடேஸ்வரியம்மன் கோயில்
  • செல்வவிநாயகர் கோயில்

பொது இடங்கள்[தொகு]

  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
  • அரசு மேனிலைப்பள்ளி

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.