உள்ளடக்கத்துக்குச் செல்

தாங்கோன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாங்கோன் ஆறு
Tangon River
அய்கோ நகரத்தில் தாங்கோன் ஆறு
அமைவு
நாடுவங்காளதேசம், இந்தியா
மாநிலம்/கோட்டம்இரங்பூர், மேற்கு வங்காளம்
சிறப்புக்கூறுகள்
வெளியேற்றம் 
 ⁃ அமைவுபுனர்பாபா ஆறு

தாங்கோன் ஆறு (Tangon River) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம் வழியாக பாயும் ஓர் ஆறு ஆகும். தோங்கோன் ஆறு என்றும் அழைக்கப்படும் இது புனர்பாபா ஆற்றின் துணை ஆறாகும். தாகூர்கான் மாவட்டத்தில் உள்ள இராணிசன்கெய்லின் சமீன்தார் தாங்கோனாத்தின் பெயரால் இந்த ஆறு தாங்கோன் ஆறு எனப் பெயரிடப்பட்டது.[1]

மேற்கு வங்காளத்தில் தோன்றிய பிறகு, தாங்கோன் ஆறு பஞ்சாகர் மாவட்டம், தாகூர்கான் மாவட்டத்தில் சதார் துணை தாலுக்கா , தாகூர்கோன் மாவட்டத்தில் பிர்கஞ்சு, வங்காளதேசத்தில் உள்ள தினச்பூர் மாவட்டத்தில் இருக்கும் போச்சகஞ்சு மற்றும் பிரால் வழியாக செல்கிறது. மேற்கு வங்காளத்தின் தெற்கு தினச்பூர் மாவட்டத்தின் குசுமண்டி மற்றும் பன்சிகாரி சமூக மேம்பாட்டு தொகுதிகள் வழியாகவும் இந்த ஆறு பாய்கிறது.[1][2] போடா நகருக்கு அருகே தங்கன் ஆற்றில் கட்டப்பட்ட ஓர் அணையும் உள்ளது, 26'11'32 "வடக்கு 88'28'02" கிழக்கு.

இது மீண்டும் வங்காளதேசத்திற்குள் நுழைந்து நவோகாவ் மாவட்டத்தில் ரோகன்பூர் அருகே புனர்பவா ஆற்றை சந்திக்கிறது.[1]

தடுப்பணை

[தொகு]

1989 ஆம் ஆண்டில், பஞ்சாகர் மாவட்டத்தில் போடாவுக்கு மேற்கே 10 கிலோமீட்டர் (6 மைல்) தொலைவில் ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Mesbah-us-Saleheen (2012). "Tangon River". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.Mesbah-us-Saleheen (2012). "Tangon River". In Sirajul Islam|Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. "Dakshin Dinajpur". Rivers. District administration. Retrieved 2009-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாங்கோன்_ஆறு&oldid=4242707" இலிருந்து மீள்விக்கப்பட்டது