உள்ளடக்கத்துக்குச் செல்

பசுமை வடிவமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாங்குதிறன் வடிவமைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சூரிய ஆற்றல் சூரிய ஆற்றலிலான உந்து வண்டிகள்

பொருளியல், சமூகவியல் மற்றும் வாழ்சூழலியல் சார்ந்த தாங்குதிறன் கொள்கைகளுக்கு அமைவாகப் பொருட்களை வடிவமைப்புச் செய்யும் முறை, பசுமை வடிவமைப்பு (தாங்குதிறன் வடிவமைப்பு) எனப்படும். இது அன்றாடத் தேவைகளுக்கான சிறிய பொருட்களிலிருந்து, பெரிய கட்டிடங்கள், நகரங்கள் போன்றவை வரையுள்ள பலவகையானவற்றின் வடிவமைப்புக்களையும் உள்ளடக்குகிறது.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

தாங்குதிறன் கட்டிடங்கள்
தாங்குதிறன் கட்டிட அமைவு

பசுமைக் கட்டடம் உள் மற்றும் வெளிச் சூழல்களை மாசுபடுத்தாமல், சக்தி, நீர் மற்றும் பல்வேறு வளங்களைச் சேமிக்கின்றன. அதேபோல, மழை நீர், சூரிய சக்தி, காற்றாலைகள் என்பவற்றைப் பயன்படுத்தும் கட்டடங்கள், பெற்றோலியம் போன்ற படிவ எரிபொருள்களில் தங்கியிருப்பதைக் குறைக்கின்றன. கட்டுமானத்தில் மறுசுழற்சிக் (recycled) கட்டிடப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் சில கட்டிடங்கள் மொத்தச் சக்திச் செலவைக் கட்டுப்படுத்துகின்றன.

வேளாண்மைத் துறையிலும், கிருமி மற்றும் பூச்சிநாசினிகளினதும் செயற்கை உரங்களினதும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன்மூலம் மண்ணையும், உயிரின வகைகளையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

நாடு, நகரத் திட்டமிடலில், வீதிகள், கட்டிடங்கள், மற்றும் கட்டிடச்சூழற் கூறுகளை இடவமைவு செய்யும்போது, தாங்குதிறனை ஒரு முக்கிய அடிப்படையாகக் கொள்வதன் மூலம் பயன் பெற முடியும். பல சந்தர்ப்பங்களில் திட்டமிடலின் போது நிலத்தின் இயற்கைத் தன்மை போதிய அளவு கருத்திற்கு எடுக்கப்படாமையால், ஆறுகள் தேங்குதல், மண்சரிவு, மண்ணரிப்பு, வெள்ளம், சூழல் மாசடைதல் போன்ற பலவகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்படுகின்றது. தற்காலத்தில் அறிவியல் மாதிரிகளைப் பயன்படுத்துவதன் மூலம், பெரிய கட்டடத் திட்டங்களில் இத்தகைய பிரச்சினைகள் பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுமை_வடிவமைப்பு&oldid=3658327" இலிருந்து மீள்விக்கப்பட்டது