தாக்கியைதரைட்டு
தாக்கியைதரைட்டு | |
---|---|
![]() | |
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமங்கள் |
வேதி வாய்பாடு | CaMg2Cl6•12H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது, இளம் மஞ்சள் |
படிக அமைப்பு | முக்கோணவமைப்பு |
மிளிர்வு | பளபளக்கும் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
மேற்கோள்கள் | [1][2] |
தாக்கியைதரைட்டு (Tachyhydrite) என்பது CaMg2Cl6•12H2O> என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமம் கடலில் ஆவியாகும் உப்பு படிவுகளின் ஓர் அரிய அங்கமாகும். ஈரப்பதமான காற்றில் வெளிப்படும் போது தாக்கியைதரைட் கனிமம் விரைவாக நீர்மமாகி கரைகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தாக்கியைதரைட்டு கனிமத்தை Thy[3]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
கண்ணாடிப் பளபளப்புடன் நிறமற்ற மஞ்சள் நிற முக்கோணப் படிகத்தை தாக்கியைதரைட்டு உருவாக்குகிறது. மோவின் கடினத்தன்மை மதிப்பு 2 ஆகவும் ஒப்படர்த்தி மதிப்பு 1.66 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது. மூன்று திசைகளிலும் நல்ல பிளவுகளைக் கொண்டுள்ளது மற்றும் பொதுவாக படிகங்களாகத் தோன்றுகிறது.
முதன்முதலில் 1856 ஆம் ஆண்டு செருமனியின் சாக்சோனிலுள்ள சுடாசுஃபர்ட்டில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. இதன் பெயர் கிரேக்க மொழியில் இருந்து விரைவான நீர் என்பதற்கான பொருள் ஆகும். இக்கனிமத்தின் விரைவான நீர்மத்தன்மையையும் இப்பெயர் குறிக்கிறது.[4]
பல ஆண்டுகளுக்கு முன்பு ஆலிபர்டன் ஆராய்ச்சியாளர் தாக்கல் செய்த காப்புரிமையின்படி, மக்னீசியம் கொண்ட கார்பனேட்டுகளுடன் அதிக வலிமை கொண்ட ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் சையானது தாக்கியைதரைட்டு உருவாகிறது. இது பாறை துளைகளை மூடும் மற்றும் எண்ணெய் ஓட்டத்தைத் தடுக்கும். சூடுபடுத்துவதற்கு முன்னும் பின்னும் இலேசான அமிலம் அல்லது தண்ணீரில் கழுவப்பட வேண்டும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mindat
- ↑ Mineralienatlas
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Webmineral data
- ↑ வார்ப்புரு:Patent