தாகீரும் அரேபிய படையெடுப்பும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தாகீர்[தொகு]

தாகீர் என்பவர் சிந்துப் பகுதியை ஆண்ட ஒரு மன்னர். சிந்துவின் மீது பலர் படையெடுத்தனர். இப்படையெடுப்பின் நோக்கம் தங்கள் நாட்டின் எல்லையை விரிவாக்குவது அல்ல, பழி வாங்குதலே ஆகும். தேபால் துறைமுகத்தில் கடற்கொள்ளையர்கள், இலங்கையிலிருந்து வந்து கொண்டிருந்த கப்பல்களைக் கொள்ளையடித்தனர். இஸ்லாமிய பெண்டிரையும், அரேபியக் குழந்தைகளையும் சிறைபிடித்தனர். குற்றவாளிகளைத் தண்டிக்க சிந்துவின் அரசர் தாகீரை ஈராக் ஆளுநர் கேட்டுக்கொண்டார். ஆனால் சிந்துவின் அரசர் தாகீர் தம் பொறுப்பைத் தட்டிக் கழித்தார். இதனால் அரேபியரின் ஆளுநர் ஆத்திரமுற்றார். அவர் அனுப்பிய மூன்று தளபதிகளைத் தாகீர் தோற்கடித்தார். மூன்றாவது படையெடுப்பிற்கு முகமது பின் காசிம் தலைமை ஏற்று வந்தார். முன்னேறி வரும் படையைத் தடுக்க தாகீர் எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. தாகீரின் படைகள் வீரத்துடன் போரிட்டாலும் தோல்வியைத் தழுவினர். தேபால் நகரை முகமது பின் காசிம் வென்றதன் மூலம் தேபாலை அரேபியர்கள் கைப்பற்றினர். அரேபிய ஆளுநரின் கீழ் தேபால் வந்தது. பிராமணாபாத்தில் தாகீர் நிறுத்தப்பட்டார். பிராமணாபாத்திலிருந்து முகமதுவைச் சந்திக்க தாகீர் மேவார் சென்றார். தாகீர் யானையின் மீது இருந்தபோது அம்புத்தாக்குதலுக்கு ஆளாகி விழுந்தார். மீண்டு எழுந்து, குதிரை மீது அமர்ந்தார். எனினும் அவரது படை குழப்பத்தில் தப்பி ஓடியது.

சிந்துப் பெண்டிருக்கு தாகீரின் மனைவி இராணிபாய் தலைமை ஏற்றார். வீரத்துடன் இராணிபாய் எதிர்த்து நின்றார். அயலவர் கரங்களில் விழாமலிருக்க, எதிர்த்து நிற்க இயலாத போது தீக்குளித்தார்.

தாகீரின் மகன் ஜெய்சிங் சித்சூருக்குத் தப்பினார். தலைநகர் ஆலரைத் தாகீரின் மற்றொரு மகன் உறுதியாக நின்று காத்தார். ஆனால் எதிர்ப்பு பலன் அளிக்காத போது அதனை விட்டுவிட்டுச் சென்றார். இதனால் நகரத்தில் செல்வங்களையும், விலை மதிப்புடையவற்றையும் முகமது கைப்பற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

Mirza Kalichbeg Fredunbeg: The Chachnamah, An Ancient History of Sind, Giving the Hindu period down to the Arab Conquest. Translated by from the Persian by, Commissioners Press 1900 [3] R. C. Majumdar, H.C. Roychandra and Kalikinkar Ditta : An Advanced History of India, Part II, Tareekh-Sind, By Mavlana Syed Abu Zafar Nadvi Wink, Andre, Al Hind the Making of the Indo Islamic World, Brill Academic Publishers, Jan 1, 1996, ISBN 90-04-09249-8