தாகமிகுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாகமிகுமை
Polydipsia
சிறப்புஉட்சுரப்பியல், உளநோய் மருத்துவம்

தாகமிகுமை அல்லது நிறைத்தாகம் (polydipsia) என்பது அதிகமாகத் தாகம் அல்லது அதிகப்படியான குடிநீர் அருந்துதல் என்பதாகும்.[1] தாகமிகுமை பல்வேறு மருத்துவக் கோளாறுகளில் ஒரு குறிப்பற்ற நோய் அறிகுறியாகும். பறவைகள் போன்ற சில விலங்குகளிலும் இது ஒரு அசாதாரண நடத்தையாகக் காணப்படுகிறது.[2]

காரணங்கள்[தொகு]

நீரிழிவு[தொகு]

தாகமிகுமை நீரிழிவு நோயின் சிறப்பியல்பாகும், பெரும்பாலும் அதன் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இது மோசமாக கட்டுப்படுத்தப்பட்ட நீரிழிவு நோய்களில் காணப்படுகிறது, இது சில சமயங்களில் நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளை நோயாளிகள் குறைவாகக் கடைப்பிடிப்பதன் விளைவாகும்.[1] வெல்லமில்லாத நீரிழிவு ("சுவையற்ற" நீரிழிவும்) தாகமிகுமையை ஏற்படுத்தும்.[1]

உளவியல் காரணங்கள்[தொகு]

உடலின் திசுப்புற நீர்மங்களின் சவ்வூடுபரவல் மாற்றம், ஹைபோகாலேமியா அல்லது இரத்தப் பொட்டாசியக் குறை, இரத்த அளவு குறைதல் (முக்கிய குருதிப்பெருக்கின் போது ஏற்படும்) மற்றும் நீர்ப் பற்றாக்குறையை உருவாக்கும் பிற நிலைமைகளாலும் இது ஏற்படலாம்.[1] இது பொதுவாக சவ்வூடுப்பரவலால் சிறுநீர்ப் பெருகுதலின் விளைவாகும்.

முதன்மை தாகமிகுமை[தொகு]

முதன்மை தாகமிகுமை (primary polydipsia) என்பது உடலியல் தூண்டல் இல்லாத நிலையில் அதிகப்படியான தாகம் மற்றும் நீர் உட்கொள்ளல் ஆகியவற்றை குறிக்கிறது.[3]

உளச்சார்பு தாகமிகுமை (Psychogenic polydipsia) என்பது மனச்சிதைவு போன்ற மனநோய்கள் அல்லது வளர்ச்சி குறைபாடுகள் உள்ள சில நோயாளிகளில் காணப்படும் அதிகப்படியான நீர் உட்கொள்ளல் ஆகும்.[1] உட்கொள்ளும் நீரின் அளவு சிறுநீரகங்களால் வெளியேற்றப்படும் அளவை விட அதிகமாக இருப்பதால்,[1] அரிதான சந்தர்ப்பங்களில், உடலின் ஊனீர் சோடியம் அளவு வலிப்புத்தாக்கங்களின் அளவிற்கு நீர்த்தப்படுவதால் உயிருக்கு ஆபத்தானது என்பதால் இதனை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாரடைப்பு ஏற்படலாம்.

கண்டறிதல்[தொகு]

தாகமிகுமை ஒரு நோய் நிலைக்கான சான்று, ஆனால் அது ஒரு நோய் அல்ல. இது பெரும்பாலும் மிகைச் சிறுநீர் (அதிகப்படியான சிறுநீர் கழித்தல்) மற்றும் குறைந்த சோடியம் அளவு ஆகியவற்றுடன் சேர்ந்துள்ளது. நீரிழிவு நோயைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் பயனுள்ளதாக இருக்கும். இரத்த ஊனீர் (சீரம்) சோதனைகள் உடலின் திசுப்புற நீர்மங்களின் சவ்வூடுபரவல் பற்றிய பயனுள்ள தகவலையும் வழங்க முடியும். அதிகப்படியான நீர் உட்கொள்வதால் ஏற்படும் சவ்வூடுபரவல் குறைவது இரத்த சிவப்பணுக்கள், இரத்த யூரியா நைதரசன் (BUN) மற்றும் சோடியம் ஆகியவற்றின் சீரம் செறிவைக் குறைக்கும்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Porth, C. M. (1990). Pathophysiology: Concepts of altered health states. Philadelphia: J.B. Lippincott Company.
  2. Hamm R.J.; Porter J.H.; Kaempf G.L. (1981). "Stimulus generalization of schedule-induced polydipsia". Journal of the Experimental Analysis of Behavior 36 (1): 93–99. doi:10.1901/jeab.1981.36-93. பப்மெட்:16812235. 
  3. Tobin, M. V.; Morris, A. I. (1988-04-01). "Non-psychogenic primary polydipsia in autoimmune chronic active hepatitis with severe hyperglobulinaemia." (in en). Gut 29 (4): 548–549. doi:10.1136/gut.29.4.548. பன்னாட்டுத் தர தொடர் எண்:1468-3288. பப்மெட்:3371724. பப்மெட் சென்ட்ரல்:1433532. http://gut.bmj.com/content/29/4/548. 

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
  • மெடிசின்பிளசு: 003085
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகமிகுமை&oldid=3748667" இலிருந்து மீள்விக்கப்பட்டது