தஹ்ரீர் சதுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 30°02′40″N 31°14′09″E / 30.0444°N 31.2357°E / 30.0444; 31.2357

தஹ்ரீர் சதுக்கம்,1958
ஓமர் மக்ரம் மசூதி - தஹ்ரீர் சதுக்கம்- கெய்ரோவின் அருகிலுள்ள ஓமர் மக்ரம் சிலை

தஹ்ரீர் சதுக்கம் (Tahrir Square,அரபு மொழி: ميدان التحرير Mīdān at-Taḥrīr, தமிழ்: விடுதலை சதுக்கம்),மற்றும் "தியாகியர் சதுக்கம்" என அறியப்படும் இச்சதுக்கம் எகிப்தின் கெய்ரோ நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஓர் முதன்மை பொதுக்கூட்டத் திடல் (நகரச் சதுக்கம்) ஆகும்.

வரலாறு[தொகு]

இந்தச் சதுக்கம் துவக்கத்தில் 19வது நூற்றாண்டு மன்னர் கேதிவே இசுமாயில் நினைவாக "இசுமாயிலியா சதுக்கம்" (ميدان الأسماعيليّة Mīdān al-Ismā‘īliyyah) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இவர்தான் நைல் ஆற்றுப் பாரிசு எனும்படி கெய்ரோவின் மையப்பகுதியை வடிவமைத்தார். 1919ஆம் ஆண்டு எகிப்தியப் புரட்சிக்குப் பின்னர் இச்சதுக்கம் பரவலாக தஹ்ரீர் (விடுதலை) சதுக்கம் என அழைக்கப்பட்டது. ஆனால் அரசியல்சட்ட முடியாட்சியிலிருந்து குடியரசாக மாறிய1952ஆம் ஆண்டின் புரட்சிக்குப் பின்னரே அலுவல்முறையாக பெயர் மாற்றம் பெற்றது. 2011 எகிப்தியப் புரட்சியின்போது இச்சதுக்கம் புரட்சியின் குவியப்புள்ளியாக விளங்கியது.[1]

இரவு நேரத்தில் தஹ்ரீர் சதுக்கத்தின் காட்சி

மேற்சான்றுகள்[தொகு]

  1. Vatikiotis, Panayiotis J. (1997). The Middle East: From the End of Empire to the End of the Cold War. Routledge. பக். 194. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தஹ்ரீர்_சதுக்கம்&oldid=1477682" இருந்து மீள்விக்கப்பட்டது