தவோபட்டு
தவோபட்டு Taobat | |
|---|---|
கிராமம் | |
தவோபட்டு கிராமம், நீலம் பள்ளத்தாக்கு, காசுமீர் | |
| ஆள்கூறுகள்: 34°43′38″N 74°42′45″E / 34.7271°N 74.7125°E | |
| நாடு | |
| ஏற்றம் | 2,300 m (7,500 ft) |
| நேர வலயம் | ஒசநே+5:00 (பாக்கித்தான் சீர் நேரம்) |
தவோபட்டு (Taobat) என்பது பாக்கித்தான் நாட்டின் ஆக்கிரமிப்பு ஆசாத் காசுமீரில் உள்ள நீலம் பள்ளத்தாக்கில் உள்ள சார்தா தாலுகாவில் உள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமம் முசாபராபாத்திலிருந்து 200 கிலோமீட்டர் (120 மைல்) தொலைவிலும், கெல்லிலிருந்து 39 கிலோமீட்டர் (24 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. தவோபட்டு நீலம் பள்ளத்தாக்கின் கடைசி நிலையமுமாகும்.[1] நீலம் ஆறு பாக்கித்தான் எல்லைக்குள் நுழைந்து ஆறாக மாறும் இடத்திலிருந்து மிக அருகில் உள்ளது.[2] 1998 ஆம் ஆண்டில் இக்கிராமத்தின் மக்கள் தொகை 720 ஆக இருந்தது.
1947ஆம் ஆண்டுக்கு முன்பு தவோபட்டு கிராமம் பாரமுல்லா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கெல்லில் இருந்து செதுக்கப்படாத சாலை வழியாக இக்கிராமத்தை அணுகலாம்.[3] சுற்றுலா மற்றும் தொல்பொருள் துறையின் ஒரு உணவு விடுதியும், சிறிய எண்ணிக்கையிலான விடுதிகளும் இங்குள்ளன.

மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Taobat neelum valley". AJK Tours. Retrieved 12 May 2013.
- ↑ Neelum Valley: Heavens unleashed Publisher: The Express Tribune, Published: 25 September 2011, Retrieved: 13 May 2013
- ↑ Kamili, M. H. "Census of India 1961". Volume VI: Jammu and Kashmir. PART II-A: GENERAL POPULATION TABLES. Published in 1964. The Manager of Publications, Delhi-B. pp. 22.
