தவில் பெறய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தவில் பெறய இலங்கையில் சப்பிரகமுவ பிரதேச நாட்டிய வடிவத்தினைச் சேர்ந்த மல்பதய நாட்டியத்துடன் இணைந்த ஒரு தாள வாத்தியக் கருவியாகவே விளங்குகின்றது. இது 'தவுல' (Dawula) என்றும் அழைக்கப்படும். பெறய என்னும் சிங்களச் சொல் பறை (மேளம்) எனும் இசைக்கருவியைக் குறிக்கும்.

உருளை வடிவம்.[தொகு]

இந்த தவில் பெறய உருளை வடிவமாகும்.

வடிவத்தில் சிறிது[தொகு]

இலங்கையில் சிங்கள மக்களின் பாரம்பரிய மேள இசைக்கருவிகளான கெட்ட பெறய மற்றும் யக் பெறய என்பவற்றைவிட வடிவத்தில் இது சிறியது. இத் தவில் பெறய பௌத்த கோவில்களில் அடிக்கடி இசைக்கப்பட்டு வருகின்றது.

தோல்[தொகு]

மேளத்தின் இருபுறமும் உள்ள தோல் ஆரம்ப காலங்களில் மான் தோல் மூலமாக செய்யப்பட்டிருந்தாலும்கூட, தற்போது பெருமளவிற்கு ஆட்டின் தோலே பயன்படுத்தப்படுகின்றது.

வாசித்தல்[தொகு]

இந்த தவில் பெறய யை வாசிக்கும்போது 'கடிப்பு' என அழைக்கப்படும் தவுல மேளத்தின் ஒரு பக்கம் கம்பொன்றின் மூலமும் மறுபக்கம் கையினாலும் இசைக்கப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவில்_பெறய&oldid=3215734" இலிருந்து மீள்விக்கப்பட்டது