தவால் குல்கர்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தவால் சுனில் குல்கர்னி ( மராத்தி: धवल कुलकर्णी ; பிறப்பு: 10 டிசம்பர் 1988) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2008 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2008 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2016 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 86 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1721 ஓட்டங்களையும் , 119 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 481 ஓட்டங்களையும் ,12 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 27 ஓட்டங்களையும் 2 பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 27 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

இவர் வலது கை விரைவு பந்து வீச்சாளர் மற்றும் வலது மட்டையாளர் ஆவார் . [1]முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் மும்பைத் துடுப்பாட்ட அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார் [2] . உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியதால் 2009 ஆம் ஆண்டில் இவர் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் தேர்வானார். ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.[3]

உள்ளூர் போட்டிகள்[தொகு]

முதல் தரத் துடுப்பாட்டம்[தொகு]

இவர் 2008 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.சூன் 20 அராரே துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலிய அ துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இந்தியத் துடுப்பாட்ட அ அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் மும்பை துடுப்பாட்ட அரங்கத்தில் சத்தீசுகர் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மும்பை துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

பட்டியல் அ[தொகு]

2008 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். மார்ச் 2 இல் புனே துடுப்பாட்ட அரங்கத்தில் சௌராட்டிர துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மும்பை அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் நவம்பர் 1 இல் ராஞ்சி துடுப்பாட்ட அரங்கத்தில் இந்திய இ அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் இந்திய இ அணி சார்பாக விளையாடினார்.

இருபது20[தொகு]

2007 ஆம் ஆண்டில் இவர் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். ஏப்ரல் 6 இல் மும்பை துடுப்பாட்ட அரங்கத்தில் மகாராட்டிர துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மும்பை அணி சார்பாக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் நவம்பர் 25 இல் சூரத் துடுப்பாட்ட அரங்கத்தில் கருநாடகத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் மும்பை துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

2014 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். செப்டம்பர் 2 இல் பிர்மின்ஹாமில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். [4] பின் 2016 ஆம் ஆண்டில் அக்டோபர் 26 இல் ராஞ்சி துடுப்பாட்ட அரங்கத்தில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

2016 ஆம் ஆண்டில் இவர் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[5] சூன் 20 இல் அராரே துடுப்பாட்ட அரங்கத்தில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இந்திய அணி சார்பாக பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2016 ஆம் ஆண்டில் சூன் 22 இல் அராரே துடுப்பாட்ட அரங்கத்தில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.


ஐபிஎல்[தொகு]

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் கிரிக் இன்ஃபோ மற்றும் கிரிக் பஸ் வலைத்தளங்களின் கனவு ஐபிஎல் அணியில் இவர் இடம் பெற்றார். [6][7]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவால்_குல்கர்னி&oldid=2870223" இருந்து மீள்விக்கப்பட்டது