தவம் (2019 திரைப்படம்)
| தவம் | |
|---|---|
சுவரொட்டி | |
| இயக்கம் | ஆர். விஜய் ஆனந்த் ஏ. ஆர். சூரியன் |
| தயாரிப்பு | வாசி ஆசிஃப் |
| கதை | ஆர். விஜய் ஆனந்த் ஏ. ஆர். சூரியன் |
| இசை | சிறீகாந்து தேவா |
| நடிப்பு | வாசி ஆஷிஃப் பூஜா ஸ்ரீ சீமான் |
| கலையகம் | ஆஷிஃப் பிலிம் இண்டர்நேசனல் |
| வெளியீடு | 8 நவம்பர் 2019 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தவம் (Thavam) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை ஆர். விஜய் ஆனந்த் மற்றும் ஏ. ஆர். சூரியன் இணைந்து இயக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் விளையாட்டு ஆரம்பம் படத்தை இயக்கியுள்ளனர். [1] இப்படத்தில் புதுமுகங்கள் வாசி ஆஷிப், பூஜா ஸ்ரீ, சீமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் 2019 நவம்பர் 8 அன்று வெளியானது. [2]
கதைக்களம்
[தொகு]முருகன் (வாசி ஆஷிஃப்), அகிலா (பூஜா ஸ்ரீ), நடேசன் ( சீமான் ) ஆகிய மூன்று வெவ்வேறு மனிதர்கள் எவ்வாறு ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் கதை. முருகனுக்கும் அகிலாவுக்கும் இடையே காதல் என்ற துணைக்கதை உள்ளது.
நடிகர்கள்
[தொகு]- முருகனாக வசி ஆஷிப்
- அகிலாவாக பூஜா ஸ்ரீ
- முருகனின் தந்தை நடேசனாக சீமான்
- ஆர். சிவா அண்ணாவாக விஜய் ஆனந்த்
- ஏ. ஆர்.சூரியன்
- வேதகிரியாக போஸ் வெங்கட்
- ஐயப்பனாக பாண்டி
- சிங்கம்புலி
- சந்தான பாரதி
- கூல் சுரேஷ்
- ஃபேஷன் பாபுவாக வெங்கல்ராவ்
தயாரிப்பு
[தொகு]ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, சீமான், அறிமுக நடிகர்களான வாசி, பூஜா ஸ்ரீ ஆகியோருடன் தவம் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.வில் நடித்ததைப்போல விவசாயி உரிமை ஆர்வலராக அவர் மீண்டும் நடித்துள்ளார். [3] [4]
இசை
[தொகு]இப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்து ஒரு பாடலைப் பாடினார். 2019 திசம்பர் 4, 2019 அன்று இசை வெளியிடப்பட்டது. [5]
| பாடல் தலைப்பு | பாடலாசிரியர் | பாடகர்கள் |
|---|---|---|
| "என்ன என்ன அழகு" | மயில் | கருங்குயில் ஜேம்ஸ், ஹேமா அம்பிகா |
| "சண்டியரே" | மயில் | சிட்டி, பாக்யஸ்ரீ |
| "ஊரே கொண்டாட்டம்" | இந்துமதி பக்கிரிசாமி | குரு அய்யாதுரை, சுரேன் சேகரன், ஜி.எபி, ரேஷ்மி, வரண்யா ஸ்ரீகாந்த், சஷியா ஸ்ரீகாந்த் |
| "காதலில் விழுந்தேன்" | ஸ்ரீகாந்த் தேவா | ஸ்ரீகாந்த் தேவா, வி. ஷைனி |
| "வா நீ" | கோவிந்த் - எழில்வேந்தன் | சுரேன் சேகரன், சுசீலா மதன், ஜி. எபி, ஜோ பாப்பா |
| "வரமா நீ" | ஸ்ரீகாந்த் தேவா | தேவா |
வெளியீடு
[தொகு]இந்தப் படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்திற்கு 5 நட்சத்திரங்களில் 1.5 நட்சத்திரங்களை வழங்கியதுடன், "படம் கொஞ்சம் நீளமானது, ஒரு கட்டத்திற்குப் பிறகு பொறுமையைச் சோதிக்கிறது" என்று எழுதியது. நகைச்சுவை காட்சிகள், ஈடுபாட்டை ஏற்படுத்தாத திரைக்கதை, பாடல்கள், உணர்ச்சிபூர்வமான காட்சிகளை விமர்சித்தார். [6] மாலைமலர் படத்தின் நீளத்தை விமர்சித்தது. [7] முன்னணி நடிகர்களின் நடிப்பை தினமலர் பாராட்டியது. [8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sreekumar, Priya (8 June 2017). "Beginning: Game of wits". Deccan Chronicle. Archived from the original on 6 November 2020. Retrieved 2 August 2020.
- ↑ "8ந் தேதி வெளிவரும் விவசாய படம் | thavam movie will release on nov.,8 th". தினமலர் - சினிமா. 3 November 2019. Archived from the original on 5 November 2019.
- ↑ Subramanian, Anupama (2018-12-07). "Seeman back to acting". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2019-12-28.
- ↑ "Review: 'Thavam' - Neither here, nor there". News Today | First with the news (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-11. Archived from the original on 28 December 2019. Retrieved 2019-12-28.
- ↑ "'Thavam' is all about agriculture". News Today | First with the news (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-07. Archived from the original on 28 December 2019. Retrieved 2019-12-28.
- ↑ "Thavam Movie Review: The film is also a tad long and tests our patience after a point.", Times of India, archived from the original on 25 December 2019, retrieved 2019-12-28
- ↑ "விவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்". 8 November 2019. Archived from the original on 31 October 2020. Retrieved 28 October 2020.
- ↑ "தவம் - விமர்சனம்".