தவநேந்திர வருமதேவன்
தவநேந்திர வருமதேவன் (ஆங்கிலம்: Tabanendra Warmadewa; இந்தோனேசியம்: Sang Ratu Aji Tabanendra Warmadewa; என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியில், மூன்றாம் அரசர் ஆவார்.[1] இவர் சக ஆண்டு: 877-889 அல்லது 955-967-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்தார்.
பாலி, மாணிக் லியூ கிராமத்தில் (Manik Liu village) கிடைக்கப் பெற்ற மூன்று கல்வெட்டுகளில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] பல கிராமங்களுக்கு வரி விலக்கு அளித்ததற்காகவும்; அர்ச்சகர்கள் சிலர், ஆயர் மடத்தில் தங்களின் தங்குமிடத்தைக் கட்ட அனுமதித்ததற்காகவும்; அந்தக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். ஆயர் மடம் (Air Madatu) என்பது இவருக்கும் முந்தைய மன்னர் செரி உக்கிரசேனன் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும்.[3]
பாலி கிந்தாமணி கிராமப் பகுதியில் (Kintamani village) இரண்டாவது கல்வெட்டு கிடைத்துள்ளது. இவரின் மனைவியின் பெயர் செரி சுபத்திரிகா தருமதேவி (Sri Subhadrika Dharmadewi).[2][4]
கல்வெட்டுகள்
[தொகு]பாலி இராச்சியம் தொடர்பான மூன்று கல்வெட்டுகளில் தவநேந்திர வருமதேவனின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.[5]
- மாணிக் லியூ கல்வெட்டு 1 - (Manik Liu inscription) (சக ஆண்டு: 877)
- கிந்தாமணி கல்வெட்டு 1 - (Kintamani inscription 1) (சக ஆண்டு: 889)
- கிந்தாமணி கல்வெட்டு 2 - (Kintamani inscription 2) (சக ஆண்டு: 889)
அனைத்துக் கல்வெட்டுகளும் பாலினிய பழைய மொழியில் எழுதப்பட்டுள்ளன.[6][5][6][7]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tugiyono KS (2004). Sejarah. Grasindo. p. 64. ISBN 9789797325305.
- ↑ 2.0 2.1 Shastri, Narendra Dev Pandit (1963-01-26). Sejarah Bali Dwipa. Bhuvana Saraswati. p. 38-40.
- ↑ Mustopo, M. Habib (2005). Sejarah: Untuk kelas 2 SMA. Yudhistira. p. 36. ISBN 9789796767076.
- ↑ Wikarman, I. Nyoman Singgin (1997). Bangli tempo doeloe. Yayasan Wikarman. p. 1.
- ↑ 5.0 5.1 Setiawan 2008, ப. 219.
- ↑ 6.0 6.1 Shastri 1963, ப. 26.
- ↑ Poesponegoro & Notosusanto 2008, ப. 343.
சான்றுகள்
[தொகு]- Poesponegoro, Marwati Djoened; Notosusanto, Nugroho (2008). Sejarah Nasional Indonesia II: Zaman kuno. PT Balai Pustaka. ISBN 9789794074084.
- Setiawan, I Ketut (2008). Brigitta Hauser-Schäublin, I Wayan Ardika. ed. "Socio-Political Aspect of Julah". Burials, Texts and Rituals: Ethnoarchaeological Investigations in North Bali, Indonesia (Bali: Universitätsverlag Göttingen). doi:10.17875/gup2019-1239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783940344120. https://books.google.com/books?id=K7AcwO4jxFIC&pg=PA219.
- Shastri, Narendra Dev. Pandit (1963). Sejarah Bali Dwipa. Denpasar, Bali: Bhuana Saraswati.