தழும்புரி
Jump to navigation
Jump to search

எசுப்பானியா நாட்டில் கிடைத்த தழும்புரி ஆயுதங்கள்
தழும்புரி (abbevillian) என்பது கீழைப் பழங்கற்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட கல்லாயுதங்கள் ஆகும். கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் பெரும்பாலும் குவாட் சயிட் என்ற கற்களால் ஆனவை. பெரிய குவாட் சயிட் பாறைகளில் நெருப்பை ஏற்றி சூடாக்கிய பின்னர் அதன் மேல் நீரை ஊற்றி பாறைகளை பிளந்து இவ்வாயுதங்களை செய்ததாகத் தெரிகிறது.[1]
- தழும்பு என்பது கற்களைக் காயப்படுத்திக் கற்களில் உண்டாக்கப்பட்ட தழும்பு.
இக்கருவிகளைப் பிளந்து உருவாக்கும் போது அதை உடைக்க பயன்பட்ட குவாட்சயிட் கற்களின் தழும்பு இவ்வாயுதங்களில் காணப்படுகிறது. இதைக் கொண்டு இவர்கள் தங்கள் உடனடித் தேவைக்காக இதைப் போல் சரியாக செப்பனிடப்படாத ஆயுதங்களை பயன்படுத்தினர் எனக் கொள்ளலாம்.