உள்ளடக்கத்துக்குச் செல்

தழும்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தழும்பன் ஊணூர் மன்னன். அவன் உடம்பில் விழுப்புண் தழும்புகள் மிகுதி. யாழிசைப் பாணர்களின் உறவினனாகவும், தலைவனாகவும் விளங்கியவன்.[1]

இவன் ‘பிடிமிதி வழுதுணைத் தழும்பன்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளான். பெண்யானை ஒன்று இவனை மிதித்ததால் மூட்டு வழுவி வழு உண்டாகிப் பின் நலம் பெற்ற தழும்பும் அவன் உடம்பில் இருந்தது.[2]

இவன் வாய்மொழித் தழும்பன் எனவும் போற்றப்படுகிறான். இதனால் இவன் சொன்ன சொல் தவறாதவன் எனத் தெரிகிறது.[3]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. பரணர் - நற்றிணை 300-10
  2. நக்கீரர் - அகம் 227-7
  3. பரணர் - புறம் 348-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=தழும்பன்&oldid=861172" இலிருந்து மீள்விக்கப்பட்டது