தள்ளாடி படைத்தளம் மீதான எறிகணை வீச்சு, பெப்ரவரி 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தள்ளாடி படைத்தளம் மீதான எறிகணை வீச்சு என்பது மன்னார், தள்ளாடியில் உள்ள இலங்கைப் படையினரின் பீரங்கிப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் 2008 பெப்ரவரி 12, செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணியளவில் நடத்திய 130 மிமீ பீரங்கி எறிகணை வீச்சுத்தாக்குதலைக் குறிக்கும்.

இத்தாக்குதலில் 15 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 50ற்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்[1]. இத்தாக்குதலினால் மன்னார் பாலத்தின் ஊடாகச் செல்லும் அனைத்து விதமான வாகனப் போக்குவரத்துக்களும் பிற்பகல் 2 மணிவரை துண்டிக்கப்பட்டது என மக்கள் போக்குவரத்துச் சபையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தன்னர். தள்ளாடித் தளத்தின் காவல் நிலைகள் இத்தாக்குதலின் போது எரிந்துள்ளன. இத்தாக்குதலைக் குறித்து படைத்தரப்பினர் தகவல் தரும் போது விடுதலைப்புலிகள் தள்ளாடி தேவாலயம் மீது எறிகனை வீச்சை நடத்தியதாகவும் இதில் 6 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 18 படையினர் காயமடைந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. தள்ளாடி படைத்தளம் மீது எறிகணை வீச்சு (புதினம்)
  2. "LTTE fires at Thalladi Church, six soldiers killed". Archived from the original on 2008-02-13. பார்க்கப்பட்ட நாள் 2008-06-01.