தளிர்மருங்கூர்
தளிர்மருங்கூர் | |
|---|---|
தளிர்மருங்கூர், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 9°47′16″N 78°59′28″E / 9.7879°N 78.9912°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| ஏற்றம் | 31.87 m (104.56 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 623407[1] |
| புறநகர்ப் பகுதிகள் | திருவாடானை, தொண்டி |
| மக்களவைத் தொகுதி | இராமநாதபுரம் |
| சட்டமன்றத் தொகுதி | திருவாடானை[2] |
தளிர்மருங்கூர் (Thalirmarungur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி குறுவட்டத்தில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும்[3]. இக்கிராமத்தில் தளிர்மருங்கூர் உலகேஸ்வரர் கோயில், தளிர்மருங்கூர் பொன்னம்பல மூர்த்தி அய்யனார் கோயில் மற்றும் தளிர்மருங்கூர் வால்மீகிஈஸ்வரி கோயில்கள் உள்ளன. இதன் அஞ்சல் சுட்டு எண் 623407 ஆகும். இதனருகே அமைந்த பெரிய நகரம் தொண்டி ஆகும்.[4]இதனருகே புகழ்பெற்ற திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில் மற்றும் திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் உள்ளன.
அமைவிடம்
[தொகு]தளிர்மருங்கூர் கிராமம், திருவாடானைக்கு கிழக்கே 11.2 கிலோமீட்டர் தொலைவிலும், தொண்டிக்கு வடமேற்கே 8.7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 1155.3 எக்டேர் பரப்பளவும் 409 குடியிருப்புகளும் கொண்ட தளிர்மருங்கூர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1,518 பேர் ஆகும். இதில் பட்டியல் சமூகத்தவர்கள் 109 பேர் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் எழுத்தறிவு கொண்டவர்கள் 1,072 பேர் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thalirmarungur Village in Tiruvadanai (Ramanathapuram) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2025-07-30.
- ↑ "Thalirmarungur Village". www.onefivenine.com. Retrieved 2025-07-30.
- ↑ வரிசை எண் 47-தளிர்மருங்கூர் - தொண்டி உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ Thalirmarungur