தளிஞ்சி மலைக்கிராம உயிர்வாயுத்திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமம் தளிஞ்சி ஆகும். இந்த கிராமம் மானுப்பட்டி பஞ்சாயத்தினைச் சேர்ந்தது. மாவட்டத் தலைநகர் திருப்பூரிலிருந்து சுமார் 73கி.மீ தொலைவில் உள்ளது.

உயிர் வாயு திட்டம்[தொகு]

புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினால் இரண்டு உயிர்வாயுத் திட்டம் தளிஞ்சி மலைக்கிராமத்தில் தொடங்கப்பட்டது. 15 கி.வாட் ஆற்றல் இந்த உயிர்வாயு திட்டத்தின் ழூலம் கிடைக்கப்பெறுகிறது. இந்த ஆற்றல் கிராமத்திலுள்ள 100 வீடுகள் மற்றும் 25 தெரு விளக்குகளை ஒளியூட்ட பயன்படுகிறது. இக்கிராமத்திலுள்ள 400 கால்நடைகளிலிருந்து சுமார் 4 டன் எடையுள்ள எரு தினமும் கிடைக்கப்பெறுகிறது. இந்த உயிர்வாயு திட்டத்திற்கு குறைந்த பட்சமாக 2.5 டன் எரு ஆற்றல் உருவாக்க தேவைப்படுகிறது. மீதமுள்ள எரு தோட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆற்றல் அனைத்து வீடுகளில் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினார்களால் இந்த உயிர் வாயுத் திட்டம் பாராமரிக்கப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

www.thehindu.com/todayspaper-article16496858.