தளவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தளவாடி

தளவாடி அல்லது சமதளயாடி (Plane Mirror) என்பது விம்பத்தைப் பிரதிபலிக்கக் கூடிய ஓர் ஆடியாகும். இதன் முக்கிய பயன்பாடு தனிநபர் சுகாதாரமாகும். தளவாடியில் சமாந்தர ஒளிக்கற்றைகளால் விம்பம்/பிம்பம் உருவாகிறது. ஆரம்பகாலத் தளவாடிகள் வெள்ளி அல்லது செப்பு உலோகத் தகடுகள் நன்கு மினுக்கப்பட்டு உருவானவை ஆகும். இப்போதைய தளவாடிகள் கண்ணாடியின் ஒரு மேற்பகுதியில் அலுமினிய முலாம் பூசப்பட்டு உருவாக்கப்படுகின்றன.

சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் சிறப்பியல்புகள்[தொகு]

தளவாடியில் விம்பமொன்று தோன்றுவரதற்கான கதிர்ப்படம்

(அ) சமதள ஆடியில் தோன்றும் பிம்பம், ஆடியிலிருந்து பொருள் இருக்கும் அதே தொலைவில் ஆடிக்குப் பின்புறம் தோன்றுகிறது. ஆடியினுள் தோன்றும் பிம்பம், எப்பொழுதும் மாயப்பிம்பம் ஆகும்.

(ஆ) உருவாகும் பிம்பம் இடவல மாற்றம் அடைந்ததாகும்.

(இ) பொருளின் முழு பிம்பம் தெரிய வேண்டுமெனில், ஆடியின் அளவு பொருளின் அளவில் பாதியாவது இருக்க வேண்டும்.

தளவாடிகளைப் பயன்படுத்திப் பலவிம்பங்களைப் பெறல்[தொகு]

இரண்டு தளவாடிகள் வெவ்வேறு கோணங்களில் பிடிக்கப்படும்போது பெறப்படும் விம்பங்களின் எண்ணிக்கையும் மாறுபடும். இது பின்வரும் சமன்பாட்டினால் அறியப்படும்.

இங்கு;

Φ - விம்பங்களின் எண்ணிக்கை
w - இரு ஆடிகளுக்கிடையிலான கோணம்.

இதன்படி:
செங்கோணத்தில் வைக்கப்பட்ட இரு தளவாடிகளுகிடையில் பொருள் வைக்கப்பட்டால் தோன்றும் விம்பங்களின் எண்ணிக்கை 3 ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தளவாடி&oldid=2946032" இருந்து மீள்விக்கப்பட்டது