தளப்பத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Istiophorus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
தளப்பத்து
மயில் மீன்
புதைப்படிவ காலம்:59–0 Ma
Paleogene to present[1]
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Istiophorus
மாதிரி இனம்
Istiophorus platypterus
(G. Shaw, 1792)
Species
வேறு பெயர்கள்
  • Histiophorus G. Cuvier, 1832
  • Nothistium Hermann, 1804
  • Zanclurus Swainson, 1839
ஒரு இந்தோ-பசிபிக் பாய்மர மீன் அதன் தோகையை உயர்த்துகிறது
எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, 1940களில், அமெரிக்காவின், புளோரிடா, கீ வெஸ்ட்டில் தான் பிடித்த ஒரு பாய்மர மீனுடன்

தளப்பத்து அல்லது மயில் மீன் (Sailfish) என்பது புவியின் அனைத்து கடல்களிலும் குளிர்ந்த பகுதிகளில் வாழும் பில்ஃபிஷின் இஸ்டியோபோரஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு மீனாகும். இது புவியில் வாழும் கடல் விலங்குகளில் மிக விரைவான வேகத்திற்காக அறியப்படுகிறது. இவை முதன்மையாக நீலம் முதல் சாம்பல் நிற உடலைக் கொண்டவையாக உள்ளன. இதற்கு பாய்மரம் போன்ற பெரிய முதுகுத் துடுப்பைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் முழு முதுகு நீளம்வரை இருக்கும். இதன் மற்றோரு குறிப்பிடத்தக்க அமைப்பாக வாள் மீன் மற்றும் பிற மார்லின்களைப் போன்ற நீளமான அலகு ஆகும். எனவே, இவை மீன்பிடி விளையாட்டு வட்டங்களில் பில்ஃபிஷ் என்று விவரிக்கப்படுகின்றன.

சிற்றினங்கள்[தொகு]

இவற்றில் இரண்டு மீன் சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2][3] எம்டி. டி. என். ஏ., மோர்போமெட்ரிக்க அல்லது மெரிசுடிக்சு ஆகியவற்றில் வேறுபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இரண்டு சிற்றினங்களாக கூறப்படும் உயிரினங்களில் பெரும்பாலான வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல கடல்களில் தற்போது காணப்படும் இசுடியோபோரசு பிளாட்டிப்டெரசு என்ற சிற்றினத்தை மட்டுமே அங்கீகரிக்கின்றனர்.[3][4][5] மின் தரவு தளமான, பிஷ்பேஸ் தொடர்ந்து இரண்டு சிற்றினங்களையும் அங்கீகரித்துள்ளது.[2]

  • அட்லாண்டிக் பாய்மர மீன் (இ. அல்பிகான்சு).
  • இந்தோ பசிபிக் பாய்மர மீன் (இ. பிளாடிப்டெரசு).

விளக்கம்[தொகு]

இந்த கடல் மீனினமானது பல அறிவயலாளர்களால் வேகமாக நீந்தும் மீனாக கருதப்படுகிறது.[6] தளப்பத்து மீன்கள் விரைவாக வளரக்கூடியன. இவை ஓரே ஆண்டில் 1.2–1.5 m (3.9–4.9 அடி) நீளத்தை எட்டும். இவை கடலின் மேற்பரப்பில் அல்லது நடுத்தர ஆழத்தில் உள்ள சிறிய மிதவை தீவன மீன்கள் மற்றும் பீலிக்கணவாய் போன்றவற்றை உணவாக கொள்கிறது. இவை அதிகபட்சமாக 35 மீ/வி (130 கிமீ/ம; 78 மைல்) நீச்சல் வேகத்தை எட்டும் என்று முன்னர் மதிப்பிடப்பட்டது. ஆனால் 2015 மற்றும் 2016-ல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி இந்த மீன்கள் 10-15 மீ/வி இடையே வேகத்தை தாண்டுவதில்லை என்பதைக் காட்டடியது. இவை இரையை வேட்டையாடும் போது, 7 மீ/வி (25 கிமீ/ம; 16 மைல்) வேகத்தை எட்டியது மற்றும் 10 மீ/வி (36 கிமீ/ம; 22 மைல்) வேகத்தைத் தாண்டவில்லை.[7][8] பொதுவாக, இந்த மீன்கள் 3 m (9.8 அடி) நீளத்துக்கு மேல் வளராது. அரிதாக 90 kg (200 lb) எடையுள்ளதாக இருக்கும். தளப்பத்து மீன்கள், மீன் கூட்டங்களை வேட்டையாடும்போது வேகமாக பாய்ந்து (குறுகிய தூர இயக்கம்) கூர்மூக்கால் தாக்கி மீன்களைக் காயப்படுத்தி வேட்டையாடும் என அறியப்படுகிறது.[9]

தளப்பத்து மீன்கள் பொதுவாக வேகமாக நீந்தும்போது இதன் தோகை போன்ற முதுகுத் துடுப்பை அதற்குரிய பள்ளத்தில் வைத்து இன்னும் வேகமாக நீந்தும். இவை தங்கள் இரையைத் தாக்கும் போது மட்டுமே இவற்றை உயர்த்தும். உயர்த்தப்பட்ட தோகையால் தலையின் பக்கவாட்டு அலைவுகளைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இதனால் வேட்டையாடப்படும் மீன்களால் இதன் கூர்மூக்கு முனையைக் சரியாக கவனிக்க முடியாமல் போகிறது.[7] இந்த தந்திரத்தைக் கொண்டு இந்த மீன்கள் தங்கள் கூர்முக்கால் மீன் கூட்டத்தை தாக்கும்முன் இரையால் கவனிக்கப்படமுடியாததால் அவற்றினால் சரியாக தப்பமுடியாமல் போகிறது.[9][10]

தளப்பத்து மீன்கள் தாக்கும்போது இவற்றின் கூர்மூக்கில் உள்ள சிறிய கூரான பகுதி இரை மீன்களில் உடலில் காயங்களை ஏற்படுத்துகின்றது. பொதுவாக, இவற்றின் தாக்குதலின் போது சுமார் இரண்டு இரை மீன்கள் வரை காயமடைகின்றன. ஆனால் 24% தாக்குதல்கள் மட்டுமே வெற்றியைத் தருகின்றன. இதன் விளைவாக, தாக்குதலுக்கு உள்ளான மீன் கூடங்களில் காலப்போக்கில் காயமடைந்த மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. காயம்பட்ட மீன்களைப் பிடிப்பது எளிதாக இருப்பதால், இந்த மீன்கள் அவற்றின் சூழ்ச்சி தாக்குதல்களினால் பயனடைகின்றதுன.[11] 70 மீன்கள் வரையிலான எண்ணிக்கைக் கொண்ட மீன் கூட்டத்தைத் இந்த மீன்கள் தாக்கும்போது இந்த வழியில் பலன்களைப் பெற முடியும் என்று ஒரு கணித மாதிரி சுட்டுகிறது.[11]

இம்மீன்கள் தங்கள் இரை மீன்களின் மீது ஏற்படுத்தும் காயங்கள் அவற்றின் நீச்சல் வேகத்தைக் குறைப்பதாகத் தோன்றுகிறது. மீன் கூட்டங்களில் பின்புறம் காணப்படும் மீன்களில் காயமடையாத மீன்களைக் காட்டிலும் காயமடைந்த மீன்கள் அடிக்கடி காணப்படுகின்றன. ஒரு மத்தி மீன்கூட்டத்தை ஒரு மயில் மீன் நெருங்கும் போது, மத்திக் கூட்டம் பொதுவாக விலகி எதிர்திசையில் ஓடிவிடும். இதன் விளைவாக, மயில் மீன்கள் மத்திமீன் கூட்டத்தை பின்னால் இருந்து தாக்குகின்றன. அப்போது கூட்டத்தின் பின்பகுதியில் இருக்கும் மீன்களின் நீச்சல் வேகம் குறைவதால் அவை எளிதில் சிக்கும் வாய்ப்பு உண்டாகிறது.[12]

சில பகுதிகளில் உள்ள மயில் மீன்கள் உணவைத் தேடுவதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் பவளப்பாறைகளை நம்பியுள்ளன. இதற்கு சாட்சியாக அரேபிய வளைகுடாவில், மயில் மீன் வாழ்விடமாக இருந்த ஒரு சில இடங்களில் இருந்த பவளப்பாறைகள் அழிந்த போது அங்கு இருந்த இந்த இன மீன்கள் காணாமல் போயின.[13]

காலவரிசை[தொகு]

QuaternaryNeogenePaleogeneHolocenePleist.Plio.MioceneOligoceneEocenePaleoceneMakairaIstiophorusTetrapterusPseudohistiophorusQuaternaryNeogenePaleogeneHolocenePleist.Plio.MioceneOligoceneEocenePaleocene

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. 2002. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2008-01-08. 
  2. 2.0 2.1 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2013). Species of Istiophorus in FishBase. April 2013 version.
  3. 3.0 3.1 McGrouther, M. (2013).
  4. Gardieff, S: Sailfish. பரணிடப்பட்டது 2016-01-08 at the வந்தவழி இயந்திரம்
  5. Collette, B.B., McDowell, J.R. and Graves, J.E. (2006).
  6. US Department of Commerce, National Oceanic and Atmospheric Administration. "What is the fastest fish in the ocean?". oceanservice.noaa.gov (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.
  7. 7.0 7.1 Marras S, Noda T, Steffensen JF, Svendsen MBS, Krause J, Wilson ADM, Kurvers RHJM, Herbert-Read J & Domenic P 2015) "Not so fast: swimming behavior of sailfish during predator–prey interactions using high-speed video and accelerometry".
  8. Svendsen MBS, Domenici P, Marras S, Krause J, Boswell KM, Rodriguez-Pinto I, Wilson ADM, Kurvers RHJM, Viblanc PE, Finger JS & Steffensen JF (2016) "Maximum swimming speeds of sailfish and other large marine predatory fish species based on muscle contraction time: A myth revisited".
  9. 9.0 9.1 Domenici P, Wilson ADM, Kurvers RHJM, Marras S, Herbert-Read JE, Steffensen JF, Krause S, Viblanc PE, Couillaud P & Krause J (2014) "How sailfish use their bill to capture schooling prey".
  10. Sailfish Hunting SardinesYoutube.
  11. 11.0 11.1 Herbert-Read JE, Romanczuk P, Krause S, Strömbom D, Couillaud P, Domenici P, Kurvers RHJM, Marras S, Steffensen JF, Wilson ADM & Krause J (2016) "Group hunting sailfish alternate their attacks on their grouping prey to facilitate hunting success".
  12. Krause J and Ruxton GD (2002) Living in Groups Oxford University Press. ISBN 9780198508182
  13. John, Smithson (1 January 2009). "Sailfish disappearance". Timeoutdubai.

வெளி இணைப்புகள்[தொகு]

பாய்மர மீன் பற்றிய நேசனல் ஜியாகிரபிக் கட்டுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=தளப்பத்து&oldid=3930729" இலிருந்து மீள்விக்கப்பட்டது