தலைவர் தம்பி தலைமையில்
| தலைவர் தம்பி தலைமையில் | |
|---|---|
திரைப்படப் பதாகை | |
| இயக்கம் | நிதிஷ் சகாதேவ் |
| தயாரிப்பு | கண்ணன் ரவி |
| இசை | விஷ்ணு விஜய் |
| நடிப்பு | |
| வெளியீடு | 15 சனவரி 2026 |
| ஓட்டம் | 113 நிமிடங்கள்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தலைவர் தம்பி தலைமையில் 2026 வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். ஜீவா நடித்து நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ளார்.[2]
கதைச் சுருக்கம்
[தொகு]ஊராட்சி ஒன்றியத் தலைவராக பணியாற்றும் ஜீவரத்தினம் (ஜீவா), அடுத்த உள்ளாட்சி தேர்தலை எதிர்நோக்கி வாக்குகளைப் பெறுவதில் முனைப்புடன் செயல்படுகிறார். அவரது அரசியல் எதிரியான தவுடு, எப்போதும் ஜீவரத்தினத்தை வீழ்த்த முயல்கிறார்.
ஊரில் வசிக்கும் இளவரசுவின் மகள் செளமியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்த திருமணத்தை சிறப்பாக நடத்தினால் வாக்குகள் கிடைக்கும் என்ற நோக்கத்துடன், ஜீவரத்தினம் திருமண ஏற்பாடுகளை முன்னின்று மேற்கொள்கிறார்.
இளவரசுவின் அண்டை வீட்டில் வசிக்கும் மணிக்கு, இளவரசு மீது நீண்ட கால பகை உணர்வு உள்ளது. இளவரசு தனது மகளைப் பற்றி தவறாகப் பேசியதால், அவள் உயிரிழந்த சம்பவம் இந்தப் பகைக்குக் காரணமாகும்.
திருமண முகூர்த்தம் அடுத்த நாள் காலை பத்தரை மணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாள் இரவு மணியின் வயதான தந்தை காலமாகிறார். இளவரசு மீதுள்ள பகையின் காரணமாக, மணி திருமண முகூர்த்த நேரத்தில் தான் தனது தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதாக பிடிவாதமாக முடிவெடுக்கிறார்.
மறுபுறம், தலைமுறை தலைமுறையாக தங்கள் குடும்ப திருமணங்கள் வீட்டிலேயே நடைபெறும் என்பதால், இளவரசு திருமண இடத்தை மாற்ற மறுக்கிறார்.
ஒரு பக்கம் மங்கல நிகழ்வு, மறுபக்கம் துக்க நிகழ்வு என்ற சூழலில், இரு வீடுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஜீவரத்தினம், இந்த பிரச்சினையை சமாளிக்க எவ்வாறு போராடுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
[தொகு]- ஜீவா -ஜீவரத்தினம்
- பிரார்த்தனா - சௌமியா
- மீனாட்சி
- தம்பி ராமையா
- இளவரசு - சௌமியாவின் தந்தை
வெளியீடு
[தொகு]படத்தின் முதல் பார்வை படங்கள் அக்டோபர்2, 2025இல் வெளியானது.[3] ஜன நாயகன் திரைப்படம் 2026 பொங்களுக்கு வெளியாகாது என்று தெரிந்தவுடன், அவசரமாக ஏற்பாடு செய்து சனவரி 15, 2026 பொங்கல் அன்று வெளியானது.[4] இதற்கு முன்னர் இப்படத்தை சனவரி 30, 2025இல் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.[5][6]
விமர்சனங்கள்
[தொகு]ஆனந்த விகடன் நாளிதழில் வந்த விமர்சனத்தில், "தலைவாழை இலையில் காமெடி விருந்து வைத்து, அதன் ஓரமாக மெசேஜ் பரிமாறியிருக்கும் இப்படைப்பு நல்லதொரு பொங்கல் ட்ரீட்!" என்று எழுதியிருந்தனர்.[7] தினத்தந்தி நாளிதழில் வந்த விமர்சனத்தில், "கலகலப்பான கதைக்களத்தில், அரசியல் சார்ந்த விஷயங்களையும் புகுத்தி ஜாலியான படமாக கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் நிதிஷ். ஜீவாவுக்கு மீண்டும் ஒரு 'கம்பேக்' படம்" என்று எழுதினர்.[8]
நக்கீரன் இதழில் வந்த விமர்சனத்தில், "கலகலப்பான முறையில் சண்டை சச்சரவுகள் நிறைந்த விறுவிறுப்பான படமாக கொடுக்க நினைத்த இயக்குனருக்கு இந்தத் திரைப்படம் ஓரளவுக்கு வெற்றியும் கொடுத்து பார்ப்பவர்களுக்கு நிறைவையும் கொடுத்திருக்கிறது" என்று எழுதினர்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thalaivar Thambi Thalaimaiyil (12A)". British Board of Film Classification (in ஆங்கிலம்). 15 January 2026. Retrieved 15 January 2026.
- ↑ "தலைவர் தம்பி தலைமையில்: படம் எப்படி இருக்கிறது? ஜீவாவுக்கு கம்பேக்-ஆ?". BBC News தமிழ். 2026-01-15. Archived from the original on 2026-01-16. Retrieved 2026-01-16.
- ↑ ஸ்டார்க்கர் (2025-10-02). "ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு". Hindu Tamil Thisai. Archived from the original on 2025-10-11. Retrieved 2026-01-16.
- ↑ செய்திப்பிரிவு (2026-01-12). "'தலைவர் தம்பி தலைமையில்' ரிலீஸ் தேதி மாற்றம்". Hindu Tamil Thisai. Retrieved 2026-01-16.
- ↑ "Thalaivar Thambi Thalaimaiyil, starring Jiiva, gets release date". Cinema Express (in ஆங்கிலம்). 2026-01-07. Retrieved 2026-01-07.
- ↑ "Jiiva on why Thalaivar Thambi Thalaimaiyil was moved for Pongal release: 'There's a void left by Jana Nayagan...'". Cinema Express (in ஆங்கிலம்). 2026-01-12. Retrieved 2026-01-12.
- ↑ டீம், விகடன் (2026-01-15). "தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்!". vikatan.com/. Retrieved 2026-01-16.
- ↑ தினத்தந்தி (2026-01-16). "சுரேஷ் கிருஷ்ணாவின் "அனந்தா" - சினிமா விமர்சனம்". www.dailythanthi.com. Archived from the original on 2026-01-17. Retrieved 2026-01-16.
- ↑ "சிரிக்க வைத்தாரா ஜீவா? - 'தலைவர் தம்பி தலைமையில்' (டிடிடி) விமர்சனம்". Nakkheeran. 2026-01-16. Retrieved 2026-01-16.