தலையங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாளிதழ் மற்றும் வாரம், மாதமிருமுறை, திங்கள், காலாண்டு அரையாண்டு என வெளியாகும் பருவ இதழ்களில் சமுதாய நோக்கத்துடன் இடம் பெறும் ஒரு பகுதி தலையங்கம் எனப்படுகிறது. இதழ்களில் தலையங்கம் முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. ஆங்கில இதழ்களில் தலையங்கம் இடம் பெற்றாலும் தமிழ் நாளிதழ்களில் பல தலையங்கம் இல்லாமலேயே வெளிவருகின்றன. தலையங்கச் செய்தியை அனைத்து வாசகர்களும் படிப்பதில்லை. தலையங்கத்தை சுமார் 15 விழுக்காடு வாசகர்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்கிற ஒரு பொதுவான கருத்தும் உண்டு. “செய்தித்தாள்களில் மிகவும் புறக்கணிக்கப்படுகின்ற, குறைவாக மதிப்பிடப்படுகின்ற பகுதி தலையங்கம். இருப்பினும், பொது மக்களுக்குத் தொண்டு செய்யும் இதழியலின் ஒரு தலையாய கருவியாக இருக்கிறது.” என்று ஜான் ஹோகன்பர்க் என்பவர் தலையங்கம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலையங்கம்&oldid=2687314" இருந்து மீள்விக்கப்பட்டது