தலைமை அமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைமை அமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் (PMGSY)[தொகு]

தலைமைஅமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் (PMGSY)[1] தேசிய அளவில் மத்திய அரசின் நிதி உதவியால் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து சாலை வசதியற்ற கிராமங்களுக்கும் சாலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் அடல் பிகாரி வாஜ்பாய்[2] அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மத்திய கிராமபுற மேம்பாட்டு அமைச்சகம்[3] கீழ் செயல்படுகிறது. 2004 முதல் 2014 வரை, சாலை அமைக்கும் சராசரி அளவானது ஒரு நாளைக்கு சுமார் 98.50 கி.மீட்டர் ஆகும்.

தலைமை அமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம்
Pradhan Mantri Gram Sadak Yojana Feb 2008 shot in Jalandhar Punjab India by gopal1035.jpg
பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம்
நாடுஇந்தியா
Launched25 திசம்பர் 2000; 19 ஆண்டுகள் முன்னர் (2000-12-25)
தற்போதைய நிலைசெயல்படுகிறது
இணையத்தளம்pmgsy.nic.in

நோக்கம்[தொகு]

அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி

1. 2003 - ம் ஆண்டிற்குள் 1000 நபர் மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்துதல்.

2. 2007 - ம் ஆண்டிற்குள் 500 நபர் மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்துதல்.

3. 2003 - ம் ஆண்டிற்குள் 500 நபர் மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட மலைவாழிடங்கள் (வட கிழக்கு, சிக்கிம், இமாச்சல பிரதேஷ், ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்ராஞ்சல்) பழங்குடி மற்றும் பாலைவன பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்துதல்.

4. 2007 - ம் ஆண்டிற்குள் 250 நபர் மற்றும் அதற்கு மேல் மக்கள் தொகைக் கொண்ட மலைவாழிடங்கள் (வட கிழக்கு, சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீரம், உத்ராஞ்சல்) பழங்குடி மற்றும் பாலைநிலப் பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்துதல்.

காஞ்சிபுரம் - களியாம்பூண்டி கிராம சாலை
காஞ்சிபுரம் - களியாம்பூண்டி கிராம சாலை

இணையத்தள மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (OMMS)[தொகு]

இத்திட்டத்தினை சரியான முறையில் செயல்படுத்த ஓர் இணையத்தள மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (OMMS)[4] புவியியல் தகவல் முறையில் (GIS) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான இலக்குகளை அடையாளம் காணவும், திட்டப்பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. மகாராட்டிரா மாநிலத்தில் பூனே நகரில் உள்ள மின்-ஆளுகை துறையான சி-டாக் - (C-DAC - Centre for Development of Advanced computing),[5] எனப்படும் மத்திய உயர்தர கணினி மேம்பாட்டு மையத்தால் வடிவமைக்கப்பட்டது. சிடாக்கு இந்தியாவின் முதன்மையான கணினியல் ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமான நிறுவனம் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய தரவு தளங்களில் ஒன்றாகும்.

ஒவ்வொரு புதிய சாலை ஏற்படுத்தும்பொழுதும் அதற்கான செலவினங்களை கண்காணிக்கும் வகையில் இணையத்தள மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பில் (OMMS) ஒரு தனி தொகுதி உள்ளது. மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள் அளிக்கும் தரவுகளின்படி, இணையத்தள மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (OMMS) அனைத்து மக்களும் காணக்கூடிய விரிவான அறிக்கையை உருவாக்குகிறது. இது மின் கட்டணம், கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட கையடக்க வடிவக் கோப்புகள் (PDF), ஊடாடும் அறிக்கைகள் போன்ற மேம்பட்ட அம்சங்களை உள்ளடக்கியது

மேற்கோள்கள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Pradhan_Mantri_Gram_Sadak_Yojana
  2. https://en.wikipedia.org/wiki/Atal_Bihari_Vajpayee
  3. http://rural.nic.in/netrural/rural/index.aspx
  4. https://online.omms.nic.in
  5. https://www.cdac.in