தலைமையற்ற சமுதாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மானுடவியலில் தலைமையற்ற சமுதாயம் (Acephalous society) என்பது அரசியல் தலைவர்கள் அல்லது வரிசைக்குழுக்கள் எவருமில்லாத ஒரு சமூகத்தைக் குறிக்கிறது. கிரேக்க மொழியில் தலையற்ற என்ற பொருள் கொண்ட ἀκέφαλος என்ற சொல்லில் இருந்து இச்சொற்கள் தோன்றின. இத்தகைய குழுக்கள் சமத்துவக் குழுக்கள் அல்லது அடுக்கமைவற்ற சமூகங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக இந்த சமுதாயங்கள் சிறிய அளவிலானவையாகும். சிற்றினங்கள் அல்லது பழங்குடிகள் சேர்ந்து இத்தகைய சமுதாயங்கள் உருவாகின்றன. இங்கு நிரந்தர தலைவர்கள் அல்லது அரசர்கள் நியமிக்கப்படுவதில்லை. கருத்தொற்றுமையால் ஒருமித்த தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் மேய்ச்சல் தொழில் அல்லது வேட்டை- சேகரிப்போர் சங்கங்கள் இத்தகைய தலைமையற்ற சமுதாயங்களில் காணப்படுகின்றனர்.

பூர்வகுடிகளான ஆப்பிரிக்க சமூகம் மற்றும் ஐரோப்பிய காலனித்துவத்தின் விளைவு ஆகியவற்றின் தாக்கத்தை உள்ளடக்கிய விஞ்ஞான வரையறைகளில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்த காலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் குழுக்களை விவரிப்பதற்கு இந்த சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. குழுவினரையும் அவர்கள் வாழும் பிரதேசத்தையும் கட்டுப்படுத்துவதற்கு எந்த தலைமையும் இல்லாத நிலமற்ற சமுதாயம் என்ற பொருளுக்கு ஒத்ததாக இச்சொல் பயன்படுத்தப்படுகிறது [1]. இத்தகைய சமுதாயங்கள் மேற்கின் பெரும்பான்மை சனநாயக அமைப்புகளுக்கு எதிரான கருத்தொருமித்த அமைப்புகள் என விவரிக்கப்படுகின்றன.

மேற்கு ஆப்பிரிக்காவின் நைசீரியாவைச் சேர்ந்த இக்போ மக்கள் இத்தகைய குழுவாக கருதப்படுகிறார்கள் [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. H.S. Daannaa: "The Acephalous Society And The Indirect Rule System in Africa, Journal of Legal Pluralism And Unofficial Law, Nr. 34, p. 62, http://www.jlp.bham.ac.uk/volumes/34/daannaa-art.pdf
  2. Daannaa, p61; G.N. Ayittey: "STATELESS SOCIETIES: The Igbo, the Fulani, the Somali", A New Nigeria, http://seunfakze.wordpress.com/2012/02/21/stateless-societies-the-igbo-the-fulani-the-somali-by-prof-g-n-ayittey/
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைமையற்ற_சமுதாயம்&oldid=2748449" இருந்து மீள்விக்கப்பட்டது