தலைமைச்செயலகப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைமைச்செயலகப் பூங்கா
வகைநகரப் பூங்கா
அமைவிடம்செயிண்ட் ஜார்ஜ் கோட்டை சென்னை, இந்தியா இந்தியா
பரப்பு18.5 ஏக்கர் (7.5 ஹெக்டேர்)
உருவாக்கப்பட்டது2009
Operated byசென்னை பெருநகர மாநகராட்சி
நிலைஆண்டு முழுதும் பயன்பாடு

தலைமைச்செயலகப் பூங்கா (Secretariat Park) சென்னையில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற பூங்கா ஆகும். சென்னைத் துறைமுகத்திற்கு அருகில் உள்ள இராஜாஜி சாலையில்  செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச்செயலகத்திற்கு எதிரே இப்பூங்கா அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இந்த பூங்கா உண்மையில் துறைமுகத்தை ஒட்டிய சில மரங்களைக் கொண்ட ஒரு வளர்ச்சியற்ற நிலமாகும். 2009 ஆம் ஆண்டில், சென்னை பெருநகர மாநகராட்சி 18.5 ஏக்கர் (7.5 ஹெக்டேர்) நிலத்தை பூங்காவாக  97.5 மில்லியன் செலவில் உருவாக்கியது. 2009 ஆம் ஆண்டு மே 29 அன்று தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் இந்த பூங்காவை திறந்து வைத்தார். [1]

பூங்கா[தொகு]

இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை 18.5 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. இந்த மையத்தில்  குன்றுபோன்ற அமைப்பு மற்றும் பாதசாரி நடைபாதையும் ஒரு பெரிய வட்ட நீரூற்றும் உள்ளன. பூங்காவில் உள்ள மற்ற அம்சங்களில் 18 பளிங்குக்கற்களால் ஆன இருக்கைகள் அமைந்துள்ளன.ஒரு சதுர ஏக்கர் நிலப்பரப்பில் தரை மட்டத்திற்கு கீழ் குழந்தைகள் ஒளிந்து விளையாடுவதற்கான இடமும், இரண்டு பொது  ஓய்வு வீடுகள் மற்றும் பெரிய பளிங்குத் தளங்கள் யோகாப் பயிற்சி பெறுவதற்கும் கீழே உள்ளன. நடைபாதைகளுடன் இணைக்கப்பட்ட மூன்று சாய்வுதளங்கள் , பூங்காவின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்துவதற்காக  நடக்க இயலாமை கொண்ட மக்களுக்கு உதவுகிறது. இதன் சுவர்கள் கலை மாணவர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. மத்தியில் உல்ள நீரூற்று தாமிரம் மற்றும் வெள்ளீயம் உலோகக்கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.[2]

இந்த பூங்காவில் ஒரு கழிப்பறை தொகுதியுடன் கூடிய பரந்த வாகன நிறுத்துமிடம்  உள்ளது. இது தவிர ஒரு தனி கழிப்பறை வசதியையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Park opposite Secretariat opened". The Hindu (Chennai: The Hindu). 30 May 2009 இம் மூலத்தில் இருந்து 2 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090602092850/http://www.hindu.com/2009/05/30/stories/2009053058210300.htm. பார்த்த நாள்: 11 Feb 2013. 
  2. Ramakrishnan, Deepa H. (23 May 2009). "Park opposite Secretariat ready for opening". The Hindu (Chennai: The Hindu) இம் மூலத்தில் இருந்து 27 மே 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090527023047/http://www.hindu.com/2009/05/23/stories/2009052358680100.htm. பார்த்த நாள்: 11 Feb 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைமைச்செயலகப்_பூங்கா&oldid=3457543" இலிருந்து மீள்விக்கப்பட்டது