தலைப்பாகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்கள் துண்டினைத் தலையில் கட்டிக்கொள்ளும் போது தலைப்பாகை எனப்படுகிறது. இது ஆண்கள் வயலில் இறங்கியோ அல்லது வேறு களத்திலோ வேலை செய்யும் போது தோளில் கிடக்கும் தலையில் சுற்றிக் கொள்வர். இது வேலையின் தீவிரத்தைக் காட்டும் குறியீடாகவும் அமையும். ‘வரிந்து கொண்டு பணியாற்றுதல்‘ என்ற சொல் வழக்கை இது ஞாபகப்படுத்தும். சில இனத்தவர்கள் (நாயக்கர்கள்) அடையாளமாக எப்போதும் தலையில் தலைப்பாகை அணிந்து கொள்வர். மேலாடை இல்லாமல் கூட இருப்பர்;ஆனால் தலைப்பாகை இல்லாமல் வெளியே வர மாட்டார்கள். சீக்கிய இனத்தவர்கள் எப்போதும் தலையில் தலைப்பாகை அணிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இதை அவர்கள் தங்களின் பண்பாட்டின் அடையாளமாகக் கருதுகின்றனர். தலைப்பாகையினை முண்டாசு கட்டுதல் என்ற வகையிலும் அடக்கலாம்.பாரதியாரைக் குறிப்பிடும் போது முண்டாசு கவிஞன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு. பொதுவாகப் பெரியவர்கள் முன்பு மரியாதை கருதி தலையில் துண்டினை அணியமாட்டார்கள். மேலும் தலையில் துண்டு கட்டுதலைப் பரிவட்டம் கட்டுதல் என்ற நோக்கிலும் ஆராயலாம். பரிவட்டம் கட்டுதல் ஒருவருக்கு கொடுக்கப்படும் மரியாதை அல்லது கௌரவத்தின் அடையாளமாகக் கருதப்படும். மன்னர் காலத்தில் மன்னருக்குத் தலையில் முடி(கிரீடம்) சூட்டுவர். கிரீடமே மன்னருக்குச் சிறப்பும் பெருமையும் தருவது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைப்பாகை&oldid=3687703" இலிருந்து மீள்விக்கப்பட்டது